Friday, April 18, 2008

படிங்க....முடிஞ்சா சிரிங்க!

கவிதைகளுக்கு மத்தியில் சில கடிகளையும் அவ்வப்போது தந்தால்தான் இங்கே வந்துபோகிறவர்கள் நொந்துபோக ஏதுவாக இருக்கும்! வந்தாச்சுல்ல...அப்புறம் என்ன முழுசா படிச்சுட வேண்டியதுதானே! வேற வழியேயில்லை.....


சரி..என்ன நடந்தது, இப்ப சொல்லப்போகிற கடி, உண்மையிலேயே நடந்ததுப்பா! கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் என்னுடைய நண்பர்களில் ஒருவர் செங்காங் பகுதியில் வீடு வாங்கி குடிபுகுந்தார், குடிநுழையும் விழாவிற்கு (House warming) என்னையும் அழைத்திருந்தார். நெருங்கிய நண்பர் என்பதால் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓய்வுதான், பகலில் நல்ல ஓய்வுஎடுத்துவிட்டு மாலையில் அங்கே செல்ல முடிவெடுத்திருந்தேன்!

அன்று, மாலை நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகும் வேலையில், என்ன வாங்கிச் செல்லவது, திடீர் குழப்பம், நானும் மாற்றி மாற்றி யோசித்தேன் ஒன்றும் மனதில் தெளிவாக தெரியவில்லை! விலை மதிப்புமிக்க பொருள் வாங்கவேண்டிய அளவிற்கு அவசியமில்லை என்றிருந்தபோதும், சரி...என்னதான் வாங்குவது......குழப்பத்துடன் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்றேன். வழக்கம்போல என்னுடைய நண்பர்களை சந்தித்தேன். அவர்களிடம் நிகழ்ச்சிக்கு செல்லவேண்டியது பற்றி கூறினேன். அவர்களும் ஆளுக்கு ஒரு ஐடியா தந்தார்கள். ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை.

கடைசியில் நானே முடிவெடுத்து, அவர்களிடம் கூறினேன்! என்ன கூறினேன்....இப்படியே கடையோரமாக செல்கிறேன் வழியில் என்ன என் மனதுக்கு பிடிக்கிறதோ அதை வாங்கி கொண்டுபோகிறேன் என்று சொன்னேன். முக்கிய விஷயம் என்னவென்றால் அதோடு நான் நிறுத்தவில்லை....அப்படி சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு நண்பரிடம்..... சரி....நான் ஒருபொருளை வாங்கி சென்றால் , அதே போன்ற பொருள் ஏறகனவே அவர்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வது அண்ணே! என்று என் நண்பரிடம் கேட்க.......
அவர், கொஞ்சமும் தயங்காமல்.....நீ வாங்கிகொண்டு போகும் பொருள் மாதிரி அங்கே பயன்பாட்டில் இருந்தால், நீ வாங்கிகொண்டு போகும் புது பொருளை கொடுத்துவிட்டு அங்கே ஏற்கனவே இருக்கும் அதை எடுத்துகொண்டு வந்துவிடு.....என்று cool ஆக பதில் சொன்னதுதான் மிச்சம்....அங்கிருந்த அனைவரின் சிரிப்பையும் அடக்க அரைமணி நேரம் ஆகிவிட்டது...அட நாந்தான் எப்பவும் அவர்களை மணி கணக்கில் சிரிக்கவைத்துகொண்டே இருப்பேன்...ஆனால் அன்று அவர் அடித்த ஜோக்கை...இன்று நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.....உங்களுக்கு எப்படி? சிரிப்பு வரவில்லையா?! அட இன்னும் நான் ஜோக்கே சொல்லவில்லையே......இது எப்படி இருக்கு!!!

2 comments:

தென்றல்sankar said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!

Anonymous said...

இது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர்... அவ்வ்வ்வ்வ்வ்வ் :'(