Tuesday, February 09, 2010

அட...படிச்சுட்டுத்தான் போங்களேன்...காசா...பணமா..

என்ன தமிழ் மக்களே.....மீண்டும் தமிழா என்று கேட்கிறீர்களா....தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ என்று சந்தோஷமாக இருக்கும் வேலையில் தமிழில் எழுதுவது தானே சிறப்பு! உங்களுக்கு எல்லாம் வருது சிரிப்பு! தயவுசெய்து சிரிக்கவேண்டாம். சரி விடுங்க...வந்த வேலையை பார்போம்!

அப்புறம் வாழ்க்கையெல்லாம் எப்படி போகுது! நல்லாயிருந்தா நல்லதுதான் நாட்டுக்கும் நமக்கும்!அட... நம்ம வாழ்க்கைகூட அப்படித்தான் ஏனோ தானோ என்று ஓடிக்கொண்டிருக்கு, ஆண்டவன் அருளில் எப்போதும்போல ஓடுவதால் சந்தோஷம்தான்!
ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்! ஒரு சில மாதங்களுக்கு முன் உள்ளூர் தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்ட என்னுடைய இரண்டு பட்டிமன்றமும் வெளியாகிவிட்டது, நான் உங்களுக்கு தகவல் தர மறந்துவிட்டேன், கூடிய சீக்கிரமே அதை பதிவில் போடுகிறேன்! பார்த்து நொந்துபோகலாம்! ஹா..ஹா.ஹா..

இல்லங்க. கொஞ்சம் நல்லாயிருந்ததா, நான் நினைத்தாலும், ரொம்ப நல்லா நான் பேசியிருந்ததா என் நண்பர்களும், அதில் இருக்கும் குறைகளை சுட்டிகாட்டி வேறு சில நல்ல நண்பர்களும் சொல்லியிருந்தார்கள். எப்படியோ இருந்தது என்னையும் ஒரு சில வாரங்கள் தினந்தோறும் பலமுறை தொலைக்காட்சியில் காட்டி காட்டி இங்கே இருக்க்கும் அனைத்து தமிழ்மக்களின் பார்வையில் படவைத்து, என்னை அடையாளம் காட்டிவிட்டார்கள். அதன் விளைவுகளையும் சில இடங்களில் காண முடிகிறடு! ஆட்டோகிராப் போட்டு போட்டு பேனா வாங்கமுடியவில்லை...ஹ..ஹா...ஹா...ஹா.... ரொம்ப ஓவரா இருக்கா....மன்னிக்கவும். இன்னும் ஏதேதோ தகவல்கள் எழுத நினைத்தேன், நேரமாகிவிட்டது, வீட்டுக்கு போகவேண்டும், துணியெல்ல்லாம் நானே துவைக்கவேண்டும்!ம்ம்ம்ம்ம்ம்ம்......என்ன...என்ன...நீங்க கேட்கும் கேள்வி எனக்கு கேட்கிறது! மனைவி துவைக்க மாட்டார்களா என்றுதானே கேட்கிறீர்கள். இப்பெல்லாம் எங்கெங்க மனைவி துவைக்கிறார்கள். வாசிங் மெசின் தான் நம்ம சொல்லுவதை கேட்குது. என் மனைவிதான் இந்தியாவில் இருக்காங்கலே. ஆமாம் அப்படியே இங்கே இருந்துட்டாலும்....அவளுடையதையும் நாந்தான் சேர்த்து துவைக்கவேண்டியிருக்கும்! சரி விடுங்க...இதெல்லாம் குடும்ப சாமாச்சாரம்! கல்யாணம் ஆனவர்களின் ஆதங்கம்! வாழ்க வணக்கம்!

3 comments:

Matangi Mawley said...

good blog!

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு பேராண்டி, உங்க டிவி புரோகிராம பாக்கோணுமே.

Kandumany Veluppillai Rudra said...

உங்களின் தமிழ் பற்றுக்குத் தலை வணக்குகிறேன்,தொடர்ந்து தமிழில் எழுத முயற்சி செய்யவும்.நன்றாக வாசிக்கவும்.குறைகள்,காணாமல் போய்விடும்.தலைப்பில் உள்ள பிழையைச் சரி செய்யவும்."போங்களேன்" என்று வரவேண்டும்,