என்ன என் இனிய நண்பர்களே! புதியதாக வந்தவர்களே! வணக்கம்! அடிக்கடி வராவிட்டாலும் ஆடிக்கும் அமாவாசைக்குமாக வருவது தவறுதான் மன்னிக்கவும்! ஆசை இருந்தாலும் நேரம் நம்மை கையை கட்டி போட்டுவிடுகிறது....அட ஆர்வம் கூட அவ்வளவாக இல்லாமல் போய்விட்டது என்பதும் உண்மைதானோ! சரி உங்கள் நேரத்தை வீணடிக்காமல் எதையாவது எழுதிவிடுகிறேன். என்ன நம்ம அனுபவங்கள்தான்......
வழக்கம் போல உள்ளூர் தொலைக்காட்சி வசந்தம் தான் மீண்டும். அட என்ன செய்வது சிங்கப்பூர் தமிழ் மக்களுக்கு ஒரே விஷயம் உள்ளூர் தமிழ் தொலைக்காட்சிதான். அதில் அவ்வப்போது இடம் பெறுவது வாடிக்கையாக வந்துவிட்டது. எனக்கு இதை விட்டா எழுதுவதற்கு ஒன்றும் தெரியவில்லை. சரி என்ன நடந்தது.
இப்பொழுதெல்லாம் சற்று அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றுவதாக நண்பர் என்னை பெருமை படுத்த நினைத்தாலும், நான் முடிந்த அளவு எல்லாவற்றையும் சுருக்கி கொள்ளத்தான் ஆசைப்படுகிறேன். அந்த வகையில் ஒரு சில நாடக தாயாரிப்பு குழுக்கள் என்னை அழைத்தபோதும், இருக்கின்ற நிரந்தர வேலைக்கு இடையூரு வரும் என்ற அச்சத்தில் எந்த வித ஒப்பந்தத்திலும் கையெழுத்திட தயங்கி வருகின்ற வாய்புகளை விட்டுவிடுவதில் கவனமாக இருக்கிறென். இருந்தபொழுதும், கடந்த மாதம் ஒரு பாட்டு போட்டி வசந்தத்தில் நடந்துவருகிறது, அதுதான் இது என்ன பாட்டு, இதில் பங்கெடுத்து மாபெரும் தோல்வியை முதல் சுற்றில் பெற்று வீடு திரும்பியது சந்தோஷம்! அடுத்த சுற்றுவரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது! இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 7.30 மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. முடிந்தால் அதை இங்கே பதிவில் போடுகிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது.....ஒன்றே ஒன்று....ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது...அது சம்மந்தமாக அடுத்த பதிவில்...மீண்டும் சந்திப்போம்....
Friday, May 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment