Monday, January 28, 2008

மீண்டும் மலாக்கா!



அன்புள்ள அன்பர்களே....நண்பர்களே! வம்பர்களே! அனைவருக்கும் என் வணக்கம்! தலைப்பு பார்ததும் புரிந்திருக்குமே! ஆமாம்...ஆமாம்! ரொம்ப சரியா கண்டுபிடிச்சுட்டீங்க!

வெள்ளிக்கிழமை இரவு, என்னுடைய நெருக்கமான நண்பர்களில் ஒருவர் என்னை அழைத்து, என்ன பிரேம், வார இறுதியில் என்ன புரோக்கிராம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க, நானும் சற்று அவசரப்பட்டு வழக்கம்போல உண்மையைச் சொன்னேன்! அட ஒன்னும் வேலை இல்லை இரண்டு நாட்களுக்கும் நல்லா சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்தவாறு வீட்டில் தூங்க வேண்டியதுதான் என்றேன்! இதுதான் தக்க தருணம் என்று நினைத்த என் நண்பர், ஒரு போடு போட்டார், நாளை காலை மலாக்கா வரைக்கும் போய்விட்டு வரலாம் வருகிறீர்களா, என்னுடைய தங்கைக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்று அவருடைய கணவர் இப்போதுதான் போன் செய்தார். எனக்கும் மனசு சரியில்லை, ஒரு எட்டு போய்விட்டு வரலாம் என்று நினைக்கிறேன், எனவே நீங்களும் ஓய்வாதான் இருக்கீங்க வாங்கலேன் அப்படியே ஜாலியா இரு பயணம் போய்விட்டு வரலாம் என்று அழைக்க....

எனக்கு வார இறுதியில் வீட்டில் அமர்ந்து வெட்டி பொழுது போக்குவதைவிட நானும் கூட அந்த அன்புச் சகோதரியை கண்டு நேரில் நலம் விசாரித்துவிட்டு வரலாமே என்ற நோக்கத்தில் ஓகே சொல்லிவிட்டேன்!

திட்டபடி, சனிக்கிழமை காலை லிட்டில் இந்தியா தொகுதியில் இருவரும் பசியாறிவிட்டு அப்படியே மலேசியாவுக்கு பேருந்தில் புறப்பட்டு இருநாட்டு எல்லைகளையும் கடந்து மலாக்கா சென்றடைந்தோம்! மதியம் அருமையான சாப்பாடு தங்கை சமைத்திருந்தார், உடல் நிலை தேரியிருந்தது அவருடைய நல்ல சமையலில் தெரிந்தது! சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல தூக்கம், பொதுவாக பகலில் தூங்குவதில்லை நீண்ட நாட்களுக்குபிறகு ஒரு குட்டி பகல் தூக்கம்!

மாலை எழுந்து அப்படியே ஷாப்பிங்க் சென்றோம்! ஷஸ்கோ என்ற நிருவணம் வீட்டுக்கு அருகில் இருந்தது அதில் ஒரு சுத்து...பெருசா ஒன்னும் வாங்கவில்லை! அதற்கு பிறகு அங்கிருந்து நீண்ட தொலைவில் இருந்த ஒரு உணவகத்திற்கு இரவு உணவுக்காக அழைத்துச் சென்றார்கள்! " பாக் புத்ரா " அந்த உணவகத்தின் பெயர்...தந்தூரி உணவகம்! சுவையான உணவு, ரொம்பவே நல்லாயிருந்தது! ஒரு கட்டு கட்டிவிட்டு வீடு திரும்பினோம்! இப்படியாக இரண்டு தினங்கள் ஓடிவிட்டது, ஞாயிறு மாலை கிளம்பி சிங்கப்பூர் வந்துவிட்டோம்!

மலேசியா எனக்கு மிகவும் பிடித்த நாடு அதிலும் மலாக்கா செல்வதென்றால் ரொம்பவும் பிடித்திருக்கிறது! இப்ப மலாக்கா போன விஷயத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் கூட என்னை நக்கல் செய்தார்கள்....ஏய்..ஏய்....அங்கே நண்பரின் தங்கை மட்டும்தான் இருக்காங்கலா....அல்லது ஏதாவது மச்சினிச்சி யாராவது இருக்காங்களா? என்று கலாய்த்தார்கள்! நான் அப்படியாபட்ட ஆள் இல்லை என்று அவர்களுக்கு தெரியும், இருந்தாலும் நண்பர்கள் ஒருவரையொருவர் கலாய்ப்பது ஜாலிதானே! ஆமாம்...நீங்க இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க??!!!!! என்ன? கதை படிக்கிறீங்களா? ஏங்க எனக்குதான் பொழுதுபோகவில்லை சும்மா இதை எழுதினேன்....உங்களுக்கு இருக்கிற ஆயிரம் வேலையில இதையெல்லாம் போய் படித்துகிட்டு அய்யே....போங்க...போங்க..போய் உறுப்படியா யாராவது எழுதியிருப்பாங்க அத படிச்சு அறிவாளி ஆகுங்கப்பா...என்னுடைய பதிவை படிச்சா, கடுப்புதான் ஆவீங்க! இருந்தாலும் ஒரு பெரிய நன்றி! வந்ததுக்கும் படித்ததுக்கும்! மீண்டும் சந்திப்போம்!

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சூப்பர்! கலக்கிட்டீங்களே!!



அன்புடன் ஜோதிபாரதி

Anonymous said...

ஆனாலும் என்னுடைய அடுத்த விசிட் மலாக்காத்தான்... முடிஞ்சா ஏதாவது உருப்படியா எழுத முடியுமான்னு பாக்குறேன்... :P