இன்றைய தகவலாக வருவது உணவு பழக்க வழக்கம் பற்றிய ஐயம்!
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் வானொலியான ஒலியின் கல..கல..ப்பான படைப்பாளர் செல்வி. விமலாதேவி அவர்கள் ஒரு உணவு குறிப்பு வானொலியில் தந்தார்கள். வழக்கம்போல எல்லோரையும் போல நானும் அதை கேட்டுவிட்டேன்.. அட எனக்கும் அந்த குறிப்பைத் தொடரவேண்டும் என்ற ஆசை வர அன்று முதலே கடைபிடிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் மனதுக்குள் ஏற்பட்ட ஒரு பெரிய ஐயத்தால், இதுவரை அந்த பழக்கத்தை நடைமுறை படித்தாமல் காத்திருக்கிறேன்... யாராவது தகுந்த விளக்கம் கொடுத்து என்னை தெளிவு படுத்தினால் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது!
அதுசரி... என்ன அந்த குறிப்பு என்றே நான் இன்னும் சொல்லவில்லையா.. மன்னிக்கவும்... இதோ..இதோ... விமலா சொன்னாங்க.... உடல் நிலையை ஆரோக்கியமா வைத்துக்கொள்ள உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் தேவை, கட்டுப்பாடுதேவை என்றும் அதை எப்படி கடைபிடிக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக சில செய்திகளைச் சொன்னார்கள்! அது என்ன...இதோ கீழே...
நாம் மூன்று வேலைகள் சாப்பிடுகிறொம் இல்லையா! அதை எவ்வாறு கடைபிடித்தால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதற்கு அவர் சொன்ன உதாரணங்கள்:
காலை: சக்கரவர்த்தி போல சாப்பிடவேண்டும்!
மதியம்: இளவரசர் போல சாப்பிடவேண்டும்!
இரவு : பிச்சைகாரன் போல சாப்பிடவேண்டும்!
இதில் என்ன இருக்கு சரியாதானே சொல்லியிருக்காங்க என்று நீங்க நினைப்பது சரிதான்... நான் கூட அப்படி நினைத்து காலை, மதியம் இருவேலையும் கடைபிடித்துப் பிறகு மூன்றாவதாக இரவு வந்ததும் சாப்பிட உட்காரும் முன், அவர்கள் சொன்னது ஞாபகம் வர ...பிச்சைக்காரன் போல என்றார்களே... அது எப்படி? சந்தேகம் வர... கடுமையாக யோசித்தேன்.. இரவில் பிச்சைக்காரன் போல என்றால்.. இரவில் பிச்சைக்காரன் எப்படி?!!!! இரவில் பிச்சை என்பது ராப்பிச்சை என்பார்களே அதுவா? அப்படியென்றால்,. இரவில் பிச்சைக்காரன் ராப்பிச்சை என்ற பெயரில் குறைந்தது ஒரு 5 அல்லது 6 வீடுகளில் சோறு வாங்கி மொத்தமாக வைத்துக்கொண்டு சாப்பிடுவான்.... அப்படியென்றால் நம்மை விமலா... 5,6 வீட்டில் பிச்சை எடுத்து சாப்பிட சொல்கிறாரா அல்லது அந்த இரவு பிச்சைக்காரன் சாப்பிடும் அளவிற்கு நிறையா சாப்பிட சொல்கிறாரா என்று தெரியாமல் இன்று வரை இரவு சாப்பாடே சாப்பிடுவதில்லை... அட உங்களில் யாருக்காவது இது எப்படின்னு சொல்லத்தெரிந்தால் சொல்லுங்க இன்று இரவாவது நிம்மதியா சாப்பிடனும்... தயவுசெய்து நீங்க யாரும் இரவு சாப்பிட போகும்போது... இந்த கதையை நினைக்காதீங்க. நினைத்தீங்கன்னா அப்புறம் என் கதைதான் உங்களுக்கும் சொல்லிபுட்டேன் ஆமாம்....