Friday, December 29, 2006

புத்தம் புது பூ பூத்தது 2007!




எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த 2007 நம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைய ஆண்டவை வேண்டிக்கொள்கிறேன்! நல்லது பல நடக்கவேண்டும்! உலகத்தில் அமைதி நிலைபெறவேண்டும்!
எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்ககூடாது என்று ஆண்டவனிடம் முறையிடுகிறேன்...
மேலும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் அவர்கள் நினைத்தது போல எல்லா சுபகாரியங்களும் இந்த ஆண்டில் நடந்து... இந்த நூற்றாண்டின் சிறந்த ஆண்டாக இந்த 2007 தேர்வு பெற எல்லாம் வல்ல இறைவன் எல்லோருக்கும் அருளட்டும்! வாழ்க வையகம்! வாழ்க மனிதகுலம்! வாழ்த்துக்கள்!

Friday, December 15, 2006

நான் முன்னால போனா 'அது' எனக்கு முன்னால போகும்!







என்ன நண்பர்களே! தலைப்பை பார்த்ததும் தலையை சுற்றுதா, ஆமாங்க...

பொதுவா, நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்...இப்படித்தான் பாட்டு இருக்கு, ஆனா இது பாட்டு இல்லேங்க, என் பாடு எப்படியிருகுன்னு இப்படி சொன்னேன்!

அட., ஆமாங்க நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பாட்டு போட்டியில்ல பாட்டு போட்டு....என்ன போட்டின்னு கேட்குறீங்களா....அதாங்க நம்ம மீடியா கார்ப் ரேடியோக்காரங்க நம்ம ஒலி 96.8 நடத்தும் 100 பாடல்கள் COUNT DOWN நிகழ்ச்சி வருகின்ற 31 தேதி FORT CANNING PARK --ல் நடக்கப்போவுது தெரியுமா, அங்கே அந்த நிகழ்ச்சியில் KARAOKE போட்டி எல்லாம் வச்சிருக்காங்க....

அதனால என்ன, அட அந்த கரோக்கி போட்டியில் பங்கெடுக்கனும்னு ஆசைதான்... டேய், அதுக்கு பாட்டு பாடனும்டா....தெரியுங்க....நானும் நிறையா பாட்டு பாடியிருகேன்! எங்கேடா....எப்போ? வேற எங்கே குளியலறையில்தான்! அங்கே பாடுவதும்போதே வீட்டில் இருப்பவர்கள் ஏசுவார்கள்! இருந்தாலும் பாடி பார்போம் என்ற ஆசை! ஆனால் அந்த போட்டியில் பங்கேறபதற்கு முன்னாடி வருகின்ற 22ம் தேதி ஒலியின் ஒலிபரப்பு நிலையத்தில் நடக்கும் தகுதிச் சுற்றில் கலந்து வெற்றி பெற்றால்தான் போகமுடியும்....

பிரேம்குமார்(ஒலி) கிட்ட போன் செய்து பதிவு செய்தாகிவிட்டது! அப்புறம் என்ன போய் பாடிபாக்கலாம்தேனே.... நீங்க கேட்பது புரிகிறது....இப்பதான் அந்த பாடல் வரிகள் வேலை செய்யப்போகிறது.... என்ன்... என்னவேலை...

ஆமாப்பா...நான் 22 தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆர்வமா இருந்த வேலையில், நேற்று தான் நம்ம MR. இடஞ்சல் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது... ஆமாங்க... அதே தேதி... அதே நேரம்.... 22ம் தேதி மாலை 7 மணிக்கு எங்க அலுவலகத்தின் 2006 ஆண்டிற்கான STAFF ANNUAL DAY PARTY வச்சுட்டானுங்கப்பா... நான் இல்லாம இந்த பார்டியா.... இந்த நிருவனத்தில் இது என்னுடைய முதல் ஆண்டுவேற அதுமட்டுமல்லாமல் எங்க நிருவனத்தின் ஆக சிறியவன், செல்லப்பிள்ளை மாதிரி எல்லோருக்கும்... நான் வரமாட்டேன் என்று சொல்ல முடியாது... பரிசு எல்லாம் கிடைக்கும்....ம்ம்ம்ம்ம்...எப்படி நீங்களே சொல்லுங்க... விட்டுட்டு பாட்டுப் பாட் போகமுடியும்.... என்ன செய்வது ஒரு கதவு திறந்தா இன்னொரு கதவு மூடிவிடுகிறது! ஒரு வருடத்தில் இத்தனை நாட்கள் இருக்கும்போது, இந்த இரு நிகழ்ச்சியும் இப்படி ஒன்னா வந்து என்னை இம்சை செய்கிறது!

இப்ப இந்த பாடல் வரி சரிதானெ.... நாம ஒரு இலக்கை நோக்கி இரயிலில் சென்றால் நம்முடைய mr. இடஞ்சல் நமக்கு முன்னாடி இரயில் எஞ்ஜினில் செல்கிறார். என்ன செய்வது, நமக்கு அந்த வாய்ப்புக்கு வழியில்லாத காரண்த்தால் நம்முடைய இம்சையில்லாமல் நிறையா நல்ல பாடகர்கள் எல்லாம் பாடி நிகழ்ச்சி நல்லாயிருக்கும் என்ற சந்தோஷம் நம்மகிட்ட இருக்கு. அதுபோதும் நமக்கு! வருடம் பிறக்கும்போது நான் வேற ஏன் நிகழ்ச்சிக்கு வருகின்ற ரசிகர்களை தொந்தரவு செய்யனும். அதுதான் ஆண்டவனே பார்த்து அடக்கிவச்சுட்டான் ஆசையை! ஆர்வம் இன்னும் என்னிடம் என்றும்போல.........

Thursday, December 07, 2006

பூத்து..பூத்து குலுங்குதடி...பூவு!


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்து
பறந்து வரப்போகிறது!
எங்கே?
அட இங்கேதாப்பா!
எங்கள் அலுவலப்பகுதியில்
எங்கேயிருக்கு அது!
அட,
நம்ம SUNTEC CITY, SINGAPORE போதுமா!!
ஓ..அப்படியா? அங்கேதான் அடிக்கடி ஏதேதோ விழாக்கல் நடக்குதே, இப்ப என்ன நடக்கப்போவுது...
ஒரு நிமிஷம் இருங்க... நான் சொல்லுவதைவிட கீழேயிருப்பதை சொடுக்குங்க அது நிறையா கலர், கலரா சொல்லும்பா...என்ன ஆளவிடுங்க...