Tuesday, November 28, 2006

புரியாதத் தகவல் புரியுதா உங்களுக்கு!



இன்றைய தகவலாக வருவது உணவு பழக்க வழக்கம் பற்றிய ஐயம்!
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் வானொலியான ஒலியின் கல..கல..ப்பான படைப்பாளர் செல்வி. விமலாதேவி அவர்கள் ஒரு உணவு குறிப்பு வானொலியில் தந்தார்கள். வழக்கம்போல எல்லோரையும் போல நானும் அதை கேட்டுவிட்டேன்.. அட எனக்கும் அந்த குறிப்பைத் தொடரவேண்டும் என்ற ஆசை வர அன்று முதலே கடைபிடிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் மனதுக்குள் ஏற்பட்ட ஒரு பெரிய ஐயத்தால், இதுவரை அந்த பழக்கத்தை நடைமுறை படித்தாமல் காத்திருக்கிறேன்... யாராவது தகுந்த விளக்கம் கொடுத்து என்னை தெளிவு படுத்தினால் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது!
அதுசரி... என்ன அந்த குறிப்பு என்றே நான் இன்னும் சொல்லவில்லையா.. மன்னிக்கவும்... இதோ..இதோ... விமலா சொன்னாங்க.... உடல் நிலையை ஆரோக்கியமா வைத்துக்கொள்ள உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் தேவை, கட்டுப்பாடுதேவை என்றும் அதை எப்படி கடைபிடிக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக சில செய்திகளைச் சொன்னார்கள்! அது என்ன...இதோ கீழே...
நாம் மூன்று வேலைகள் சாப்பிடுகிறொம் இல்லையா! அதை எவ்வாறு கடைபிடித்தால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதற்கு அவர் சொன்ன உதாரணங்கள்:
காலை: சக்கரவர்த்தி போல சாப்பிடவேண்டும்!
மதியம்: இளவரசர் போல சாப்பிடவேண்டும்!
இரவு : பிச்சைகாரன் போல சாப்பிடவேண்டும்!
இதில் என்ன இருக்கு சரியாதானே சொல்லியிருக்காங்க என்று நீங்க நினைப்பது சரிதான்... நான் கூட அப்படி நினைத்து காலை, மதியம் இருவேலையும் கடைபிடித்துப் பிறகு மூன்றாவதாக இரவு வந்ததும் சாப்பிட உட்காரும் முன், அவர்கள் சொன்னது ஞாபகம் வர ...பிச்சைக்காரன் போல என்றார்களே... அது எப்படி? சந்தேகம் வர... கடுமையாக யோசித்தேன்.. இரவில் பிச்சைக்காரன் போல என்றால்.. இரவில் பிச்சைக்காரன் எப்படி?!!!! இரவில் பிச்சை என்பது ராப்பிச்சை என்பார்களே அதுவா? அப்படியென்றால்,. இரவில் பிச்சைக்காரன் ராப்பிச்சை என்ற பெயரில் குறைந்தது ஒரு 5 அல்லது 6 வீடுகளில் சோறு வாங்கி மொத்தமாக வைத்துக்கொண்டு சாப்பிடுவான்.... அப்படியென்றால் நம்மை விமலா... 5,6 வீட்டில் பிச்சை எடுத்து சாப்பிட சொல்கிறாரா அல்லது அந்த இரவு பிச்சைக்காரன் சாப்பிடும் அளவிற்கு நிறையா சாப்பிட சொல்கிறாரா என்று தெரியாமல் இன்று வரை இரவு சாப்பாடே சாப்பிடுவதில்லை... அட உங்களில் யாருக்காவது இது எப்படின்னு சொல்லத்தெரிந்தால் சொல்லுங்க இன்று இரவாவது நிம்மதியா சாப்பிடனும்... தயவுசெய்து நீங்க யாரும் இரவு சாப்பிட போகும்போது... இந்த கதையை நினைக்காதீங்க. நினைத்தீங்கன்னா அப்புறம் என் கதைதான் உங்களுக்கும் சொல்லிபுட்டேன் ஆமாம்....

Monday, November 20, 2006

வருக! வருக! வணக்கம்!

என் வலைப்பூ விற்கு வருகை தந்துள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் தலை வணங்கி வரவேற்கிறேன்! சிறுபிள்ளைத்தனமான சில கிறுக்கல்களை பெரிய மனதுகொண்டு மன்னிக்கவும்!

இப்படியொரு ஆசையும் வந்துட்டா!


அட என்னங்க செய்வது நீண்ட நாள் விருப்பமும் ஆசையும் கூட, நீண்ட நாட்களுக்கு பிறகு காலம் கூடி வர, ஓடிப்போய் நின்னுட்டேன் நானும், எங்கேன்னு தெரியனுமா! அட நம்ம சிங்கப்பூர் மிடியா கார்ப் அலுவலகத்தில் கடந்த ஞாயிறு (19-11-06) நடந்த TV12 DRAMA AUDITION 2006 -ல் தான்!

அங்கே நமக்கு என்ன வேலைன்னு கேட்கிறீங்களா, அட நடிக்க போனேப்பா! என்ன்னனனன..நடிக்கவா?!!!!!! ம்ம்ம்ம்ம்ம்...ஆமாப்பா! சரி...சரி.. நடந்ததை சொல்லித்தொல..

அது! இங்கிருந்து போனேனா, போன உடனேயே அங்கே வரவேற்பறையில் 2 பெண்கள் இருந்தாங்கப்பா, அவுங்ககிட்ட போய் நின்றதும், அவுங்க விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள், நான் பூர்த்தி செய்து கொடுத்தவுடன் ஒரு ஒட்டும் தாளில் என்னுடைய அடையாள அட்டை எண்னையும், ஒரு ref No. ம் எழுதி கைதி நம்பர் மாதிரி எழுதி மார்பு பகுதியில் சட்டையில் ஒட்டிவிட்டுவிட்டார்கள். என்னுடைய திருப்பம் வந்தவுடன் என்கூட 10 பேரையும் உள்ளுக்குள்ளே அழைத்துச்சென்று, புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

பிறகு ஒவ்வொருவராக உள்ளே அழைத்து அவர் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதா பாத்திரத்தில் வசனங்களை பேசி நடிக்கவேண்டும்! இருங்க...இருங்க....எனக்கு என்ன பாத்திரம், என்ன காட்சி என்று கேட்கிறீங்களா!...சொல்றேப்பா....இங்கே சொல்லாம வேற யாருகிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்கப்போறேன்....

என் கதாபாத்திரத்தின் பெயர் 'SIVA' நான் உள்ளே போய் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் (அந்த பெண் அவுங்க ஆளுப்பா, ரொம்ப அனுபவம் வாய்ந்தவங்கன்னு நினைக்கிறேன்) சென்று இணைந்து நடிக்க வேண்டும்... காட்சி நேரம் குறைவுதான்... ஏதோ செஞ்சுட்டு வந்தேன்... வெளியில் இருந்து பாத்தவங்க, நல்லா செஞ்சதா சொல்றாங்கப்பா.....ம்ம்ம்... யாருக்கு தெரியும்.....ஒருவேலை தேர்வு செஞ்சா நான் சந்தோஷப்படுவேன்... தேர்வு செய்யாட்டா தொலைக்காட்சி பார்க்கும் நேயர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!

Friday, November 17, 2006

கவியரசு கண்ணதாசன் விழா 2006, சிங்கப்பூர்.

உன் எழுத்து ஒவ்வொன்றும் உனக்கு நீயே கட்டிக்கொண்ட தாஜ்மஹால்!- வைரமுத்து!

கடந்த சனிக்கிழமை இரவு அருள்மிகு சிங்கப்பூர் தெண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செல்லும் வாய்ப்பு இத்துனை ஆண்டுகளுக்கு பிறகு அன்று அடியேனுக்கு கிடைத்தது ஆண்டவன் அருளால்!

தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி சில குழந்தைகள் நடனமாட கவிஞர் பல கவிபாட பாட்டுப்போட்டியில் பல குயில்பாட படு ஜோராய் சென்றது விழா!
நிகழ்ச்சியின் இருதியாக சிறப்பு சொற்பொழிவு ஆற்றியது யார் தெரியுமா, super star ரஜினியை மட்டும் வைத்து 25 படங்களுக்கு மேல் இயக்கி மொத்தத்தில் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள பிரபல இயக்குனர் திரு. SP. முத்துராமன் அவர்கள்தான். அதிகநேரம் பேசி அசத்திவிட்டார். மீண்டும் கண்ணதாசனை பார்த்தோம் அவரது சொற்பொழிவில்! அருமை! அருமை!

கூட்டம் மண்டபம் முழுவது நிரம்பிவிட்டது! பல முக்கிய பிரமுகர்களும், கண்ணதாசன் உறவினர்களும், சிங்கப்பூர் பிரபலங்களும் வந்திருந்தனர் அவர்களுள் ஒலி குடும்பத்தார்களான, பொன்.மகாலிங்கம், உமா கணபதி, v.s. ஹரி ஆகியோர்களும் கூட வந்திருந்தனர்.
அருமையான நிகழ்ச்சி அது முடிந்ததும் அருமையான இரவு உணவு.. செவி இனித்து பின் நாவினிக்க நல்லா நடந்த நிகழ்சியை உங்கள் விழியினிக்க விருந்தாக்குகிறேன்..

'கவியரசை' பாராட்டி வரிகள் தந்திருந்தார், மேலே இருக்கும் வைரமுத்து தன்னுடைய மேன்மையான வரிகளினால்! அடித்தளத்தில் இருக்கும் அடியேனுக்கும் அது போன்று எழுத ஆசை வந்தாலும், ஏதோ என் அளவிற்கு முடிந்த இந்த எளிய வரிகளை தருகிறேன், கவிப்பேரரசின் வரிகளை தழுவிக்கொண்டு...

"உன்னுடைய ஒவ்வொரு எழுத்துக்களும், இக்கால இளைஞர்கள் கவிமலையின் உச்சியை கஷ்டப்படாமல் சென்றடைய நீ கட்டிக்கொடுத்த படிக்கட்டுகள்!"

Saturday, November 11, 2006

ஒலி 96.8 ல் தீபாவளி இரவு கொண்டாட்டங்கள்!




வணக்கம் நண்பர்களே! இங்கே இரண்டு செய்திகள் இருக்கிறது, இரண்டாவதாக The Pines ல் நடந்த நிகழ்ச்சி, முதலாவதாக, நிகழ்ச்சிக்கு டிக்கட் வாங்க சென்றபோது MEDIA CORP அலுவலகத்தில் நடந்த சுவையான நிகழ்வுகள்!


முதல்பகுதி: - நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்ற ஆவல் இருந்தது, கடைசி நேரத்தில் முடிவெடுத்து செல்லமே பிரேமிடம் டிக்கட் கேட்டால் waiting list என்று சொல்லிவிட்டார், கடைசியில் வெள்ளிக்கிழமை காலை அழைத்து டிக்கட் வந்து வாங்கிக்கொள்ள சொன்னார்... அலுவலக நேரத்தில் எப்படி செல்லமுடியும்... எப்படியோ ஒரு வாய்ப்பு கிடைக்க எங்க company chairman car ஐ எடுத்துக்கொண்டு சைக்கிள் கேப்பில் சென்றுவிட்டு வரலாம் என்று சென்றால், அங்கே போனா பிரேம்குமார் எங்கேயோ போய்விட்டார்.. கடைசியில் Reception போய் நிற்றுவிட்டேன். வரவேற்பு பகுதியில் சேவையில் இருந்த அந்த மலாய் அம்மணியிடம் பிரேம்குமாரை பார்க்கவேண்டும் என்றேன்..உடனே அவர் டிக்கட் வாங்கவா என்று கேட்க, ஆம் என்று நான் சொல்ல எந்த பெயரில் டிக்கட் எடுக்க வந்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்க நான் பிரேம்குமார் என்று சொல்ல, மீண்டும் அந்த அம்மணி அதே கேள்வியை திரும்ப கேட்க நானும் பிரேம்குமார் என்று திரும்ப சொல்ல அவருக்கு பதட்டம் அதிகரித்து, அந்த நேரத்தில் அங்கே வந்த இன்னோரு பெண்ணிடம் அதை சொல்ல, அவர் கேட்க கேள்வி சற்று வித்தியாசமாக ஆதாவது உங்கள் பெயர் என்ன என்று கேட்க நான் பிரேம்குமார் என்று சொல்ல பலத்த சிரிப்பு இருவரிடமும், எனக்கு பாதியிலேயெ நடப்பது என்னவென்று தெரிந்துவிட்டாலும் நான் அப்படியே கடைசிவரை என்பதிலில் மாற்றம் செய்யவில்லை. உடனே அந்த பெண் என்னிடம் நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லும்பொழுது My name is Premkumar என்று சொல்லவேண்டும் என்று கூறியவுடனே என்பதில் என்னதெரியுமா! நான் என்ன Kindergarten going Kid ஆ அப்படி பதில் சொல்ல மறுமுறையும் சிரிப்பு..பிறகு யாரிடமோ பேசினார்கள், சரி police ஐ தான் கூப்பிடுகிறார்களோ என்று நினைக்க சிரித்த முகத்துடன் சுசிலா வந்தார்கள்...அட அட அப்படி ஒரு சிரித்த முகத்துடன் என்னை வரவேற்று டிக்கட் கொடுத்து மழை பெய்கிறதே எப்படி போவீர்கள் என்று அன்புடன் கேட்க.. நான் car ல்தான் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், நனையாமல் செல்லமுடியுமே என்று நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டு வழியனுப்பிவைத்தார்கள்!அவருக்கு என் நன்றி!
இப்பொழுது முக்கியமான

Second Part: தனியே செல்கிறோமே என்ற தயக்கம் இருந்தாலும், அந்த அழகான அறையில் சென்று அமர்ந்தவுடன் அருகிலிருந்த அன்பர்களை என் நண்பர்களாக்கிக் கொண்டேன் அனைவரும் சற்று முதியவர்கள் என்பதால் என்னை தன் மகன் போல பாவித்தார்கள்! குளிர் பானங்களுடன் குளிர்ச்சியாக தொடங்கியது நிகழ்ச்சி! அதன்பின் அருமையான பல அங்கத்துடன் நிகழ்ச்சி கலை கட்டியது, இடையிடையே சூடான உணவு வழங்கப்பட்டது really it was sumptuous ! ருசியான உணவு ரசிக்க கூடிய நிகழ்ச்சி என நல்லா போனது! ஆனால் இடையிலே இரண்டுமுறை எனக்கு ஆப்பு காத்திருந்தது...திடீரென்று என்முன்னே வசந்தம் சென்ரல் காமிரா மேனும் ஒலிவாங்கியுடன் ஒருவருமாக என் முன் தோன்றி என் முகத்திற்கு முன் ஒலிவாங்கியை நீட்டி நிகழ்ச்சி பற்றிய கருத்தைக்கேட்டால் என்ன சொல்வது ஆடிப்போனாலும் சமாளித்துக்கொண்டு ஏதோ அடிச்சுவிட்டேன்! இப்படியாக நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கும் பொழுது இறுதி அங்கமாக பாட்டுக்கு பாட்டு போட்டி வந்தது, பங்குபெரும் விருந்தினர்களும் கலந்து கொண்டனர். ஒலிவாங்கியை தூங்கிகொண்டு ஒவ்வொரு மேசையாக ஓடிவந்த பாலா என் அருகே வந்தவுடன் என்கிட்ட கொடுத்து பாடச்சொல்லிவிட்டார், எனக்கு வந்த எழுத்து 'மா' திடீரென்று கொடுத்து பாடச் சொன்னால் என்ன பாடுவது பதட்டம்வேறு அதைவிட குளிர்பானம் குடித்து தொண்டைவேறு கட்டிவிட்டது. உடனே ஒரு பாட்டு நினைவில் வந்து ஆரம்பிக்க..சலசலப்பாக இருந்த அந்த அரங்கம் திடீரென்று அமைதியாகி அனைத்து தலைகளும் என்பக்கம் திரும்ப வெட்கம் என்னை கவ்விக்கொள்ள வார்த்தை மாறியது, வாயில் வந்த சொல்லையெல்லாம் போட்டு பாடவேண்டயதாயிற்று, அதற்குள் எதிர் அணியினர் பாட்டில் பிழை இருப்பதாகச் சத்தம் போட நிறுத்திவிட்டேன்.. இதனை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிலர் தலையை குனிந்துகொண்டனர்... இப்படி நம்ம நிலம போச்சு அங்கே! கடைசியாக நிகழ்ச்சி முடியும்வரை இருந்துவிட்டு! escape and Run away! வெளியே ஓடிவந்த நொடிமுதல் ஒட்டிக்கொண்டது ஒரு ஏக்கம்! என்று பார்க்கப்போகிறோம் இனிமேல்...(நிகழ்ச்சியை) என்ற ஏக்கத்துடன்!
அடுத்த நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திக்கும்வரை இந்த இனிமையான நினைவுகளோடு....

Friday, November 10, 2006

கண்களை குளிரச்செய்த காமரன் ஹைலாண்ட்ஸ்!


எங்கு பார்த்தாலும் இனிமையான இயற்கை! பார்க்கும் இடமெல்லாம் பச்சை கம்பளங்கள்! இப்ப நினைத்தாலும் குளிர்ச்சி மனதுக்குள்!
அங்கே மலர்ந்திருந்த ஆயிரம் வகை மலர்களில் இதும் ஒரு வகைதாங்க! மனதை மலரச்செய்கிறதல்லவா!
இந்த அருவிகூட அசத்தலாகத்தான் இருந்தது! குழிப்பது அரிது என்பதால் கண்களை மட்டும் அந்த இயற்கையால் கழுவிவிட்டு வந்தோம்!
மலேசிய விரைவுச் சாலையில் எங்களை முதலிலி அசத்தியவர்.. அட ஆள் இல்லேங்க... மனிதபொம்மைங்க அது!