Monday, January 22, 2007

பணியிடம் மாற்றம்!

என வரைப்பூவுக்குள் தேன் எடுக்க தினந்தோறும் வந்துபோகும் தேனி நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்! என்னுடைய நிர்வாகம் என்னுடைய பணியிடத்தை சில வாரங்களுக்கு இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.... என்னுடைய நிருவனம் இந்தியாவில் ஒரு Project எடுத்து உள்ளார்கள்....அதற்கு என்னையும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.... இந்தியனாக இருப்பதுமட்டுமே அதற்கு காரணம்... நான் உள்ளூர் வாசிதான் என்றாலும் ஒரு நிருவனத்தில் மாட்டிக்கொண்டால் அவர்கள் சொல்வதெல்லாம் செய்யத்தான் வேண்டியுள்ளது....இந்தியாவும் நம்முடைய தாயகம்தானே....சென்றுவரலாம் என்று நானும் சம்மதித்துவிட்டேன்... எனவே பயணம் இன்னும் இரண்டொரு நாளில் இருக்கும்.... அங்கு சென்றபிறகு பதிவுக்கு எல்லாம் நேரமிருக்கா தெரியாது....எனவே.... அனபர்கள் அனைவரும்.....நினைவுகளோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்....
என்னுடைய மின்னஞ்சல் இருக்கிறது...நன்றி!
poopremkumar@gmail.com

Friday, January 12, 2007

கதை மாறிப்போன கதை...கடியாக மீண்டும்!



வணக்கம் நண்பர்களே! என்னடா!!! கதை எழுதுறேன்...எழுதுறேன்னு கதைவிட்டுபுட்டு இப்ப என்ன எழுத வந்திருக்கிறாய் என்று கேட்பது புரிகிறது....
அய்யா சாமி...மன்னிச்சுக்குங்கோ....கதை எழுத, கதை வேணும்ல...நம்ம கிட்ட அது எங்கே இருக்கு! இருந்தாலும் என் மனதில் தோன்றிய செய்திகளை ஒரு கடியாக அதுவும் சில திரைப்பட நகைச்சுவைகளை நினைவுகூரும் வகையில் எழுதுகிறேன்... சும்மா சிரிக்க முடிந்தா சிரிச்சுட்டு போங்க... யாரும் சீரியஸாக எடுத்துகிட்டு பின்னூட்டம் போடாதீங்க....வேண்டும் என்றால் ரெண்டு கிக்கு விட்டுட்டு போங்க வாங்கிகொள்கிறேன்....ஹ...ஹ...ஹாஅ...இதோகதை......

முன்னுரை: கதை என்றால் இது இருக்கனும்ல...அட...இந்த கதைக்கு(கடி) காரணம்... கடந்த ஆண்டின் இறுதி நாளன்று நடந்த, சிங்கப்பூர் ரேடியோவான ஒலி 96.8 நடத்திய COUNT DOWN 2007 நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்... நீங்கள் நினைப்பது புரிகிறது.. என்னடா இவன் எப்ப பார்த்தலும் ஒலி..ஒலி..ன்னு சொல்லிகிட்டே இருக்கான்னு கேட்பது கேட்கிறது... அய்யா... இந்த ஊரில் இத விட்டா நம்ம தமிழர்களுக்கு வேறு நாதி இல்லை... இவுங்கதான் எங்களுடைய கதி! சின்ன நாடு... வேற என்ன இருக்கு தமிழர்களுக்கு... இவுங்க நடந்துர நிகழ்ச்சிகள்தான் ஏதோ கொஞ்சம் இங்கு வாழும் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கு... இவர்களை விட்டா கோவில் குளம்தான் இருக்கு... அதனாலதான் இவுங்க பின்னாடியேயயயயயய போய்கிட்டு இருக்கிறோம்... இப்ப புரியுதா....

அந்த வகையில் அன்று அந்த நிகழ்ச்சிக்கு போனேனா... அப்ப அங்கே நடந்த நிகழ்சிகளை பார்த்துவிட்டு வந்து வீட்டில் படுத்தவுடன் அந்த நிகழ்ச்சி பற்றி சில கர்பனன எனக்குள் ஒடியது.. எனக்குள் உதித்த நகைச்சுவையான கர்ப்பனையை ஒரு கப்சா கட்டுரையாக எழுதலாம் என்ற எண்ணம்தான் அது...

சரி... இப்ப என்ன நடக்கபோவுதுன்னா.. அந்த நிகழ்ச்சியை ஒரு திருமணம் ஆகாத ஒரு அழகான திறமையான படைப்பாளர் வழி நடத்துவதாக கற்பனை... அப்போது... நிகழ்ச்சியில் ஆண்களுக்கான பாட்டு போட்டி நடத்த சில ஆண்களை மேடைக்கு அழைகிறார் அந்த பெண் படைப்பாளர்... அவர் பெயர் கமலா!

இப்பொழுது ஒவ்வொரு ஆணாக மேடை ஏறுகிறார்கள்.. ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் சில கேள்விக் கனைகளை தொடுத்துவிட்டு அவர்களை திக்குமுக்காட செய்துதான் பிறகு பாட அனுமதிக்கிறார் அந்த படைப்பாளர்.... இதை பார்த்துகொண்டிருந்த நம்ம நண்பர் அதாங்க இந்த கதையின் கதாநாயகன் மிஸ்டர் போக்கிரி!( அட இப்ப Hero வுக்கு இப்படித்தான் பேர் வைத்தால்தான் எடுப்பா இருக்கும்!) என்னடா நம்ம ரசிகர்கள் படையை இந்த காச்சு காச்சுறாங்களே இவுங்க, என்ற கடுப்போடு அடுத்த பங்கேற்பாளராக நம்ம போக்கிரி மேடை ஏற....

கமலா: வணக்கம்!
போக்கிரி: வணக்கம்!
கமலா: சரி, எங்கிருந்து வர்றீங்க?
போ: வீட்டிலிருந்து!
கமலா: அது தெரியாதா, வீடு எங்கேயிருக்கு?
போ: நான் எங்கே இருக்கேனோ அங்கேயத்தான் இருக்கு!
கமலா: ய்ய்ய்ய்ய்ய்... சரி, நீங்க எங்கே இருக்கீங்க?
போ: என் வீடு எங்கே இருக்கோ, அங்கேதான் நானும் இருக்கேன்!
கமலா: கடவுளே...காப்பாத்து! சரி..சரி...இப்ப சரியா கேட்கிறேன்..
நீங்களும், உங்க வீடும் எங்கே இருக்கீங்க..?
போ: இப்ப நான் சரியா சொல்லிவிடுகிறேன்...நானும், என் வீடும் எங்கே இருக்கிறோமோ
அங்கேயத்தான் நானும் என் வீடும் இருக்கிறோம்!
கமலா: அய்ய்யய்ய்ய்யோ.....ஆள விடுங்க.....
போ: ஹலோ..ஹலோ...இருங்க..இருங்க... உங்களுக்கு என்ன தேவ... என்னுடைய
அட்ரஸ் வேணுமா? அட்ரஸ் என்னன்னு கேட்கவேண்டியதுதானே... ஏன் குழப்புறீங்க
சரி... இதோ என்னுடைய அட்ரஸ்
நம்பர் 6, சுவாமி கமலானந்தா தெரு
சிங்கப்பூர் குறுக்கு சந்து,
சிங்கப்பூர் மெயின் ரோடு,
சிங்கப்பூர். 600006
கமலா: ஹாங்...ஹாங்...ய்ய்ய்ய்ய்ய்... என்ன இது....
போ: என்ன புரியலையா? வேண்டுமென்றால் திருப்பிச்சொல்லட்டா....திருப்பி..திருப்பி..
கமலா: அய்யோ...வேண்டாம்..வேண்டாம்... நம்ம இப்ப நிகழ்ச்சிக்கு போகலாம்..
போ: என்ன நிகழ்ச்சிக்கு இனிமேதான் போறோமா.. அப்ப இவ்வளவு நேரம் என்னை ரேகிங்க் செய்தீங்களா... சரி சரி... பரவாயில்லை... கேளுங்க.....
கமலா: சரி..அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்ன பாட்டு பாட வந்திருக்கீங்க...
போ: என்ன பாட்டா....சினிமா பாட்டுதான்...
கமலா: ஆகா...ஆரம்பிச்சிட்டீங்களா...அது தெரியுது, எந்த சினிமாவிலிருந்து எந்த பாட்டுடுடு?
போ : ஓ...அதுவா.... தமிழ் சினிமாவிலிருந்து, தமிழ் பாட்டு!
கமலா: அய்யோ... என்னால முடியாது வேற படைப்பாளரை மேடைக்கு அனுப்புறேன்....
போ: ஹலோ..ஹலோ... இருங்க...இருங்க.... என்னங்க இதுக்கெல்லாம் போய்...
நீங்க மட்டும் ரேடியோவில யாராவது பேச தெரியாத ஆள் மாட்டிகிட்டா அவனை டர்ர்ர்... ஆங்கிவிடுவதில்லையா? இதுக்குபோய் இப்படி ஜகா வாங்குவது ஒங்கல மாதிரி திறமையான படைப்பாளருக்கு அழகா...அதுவும் அழகான படைப்பாளருக்கு!!!!
கமலா: சரி..சரி... ரொம்பத்தான் ஐஸ் வைக்கிறீங்க... போனா போவுது...உங்களை பாடவிடறேன்... பாடிட்டு ஓடிவிடுங்க சரியா?
போ : ரொம்ப நன்றி கமலா மேடம்! நான் பாடிட்டு நீங்க சொன்னமாதிரியே ஓடிவிடுகிறேன்...
கமலா: சரி.. பாடலாம்... இருங்க,இருங்க.. என்ன.... பாட்டு முழுசா தெரியுமா... இல்ல நாலு வரிமட்டும் பாடுவீங்களா? ஏன் கேட்கிறேன் என்றால்.. இப்படி அதிகமாக பேசுபவர்கள் எல்லோருக்கும் சரியா பாடத் தெரியாதுன்னு யாரோ சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்... அதான் கேட்கிறேன்....
போ: அதுதான் எனக்கு நல்லா தெரியுமே!
கமலா; என்ன...என்ன தெரியும்!
போ: அதாங்க...அதிகம் லொட...லொடன்னு பேசுபவர்களுக்கு பாட்டு வராது... பாடவும் தெரியாதுன்னு தெரியும்ன்னு சொன்னேன்!
கமலா: எத வச்சு உறுதியா இப்படி சொல்றீங்க.....
போ: எல்லாம் உங்கள வச்சுத்தான்... அப்படின்னு சொன்னா கோச்சுகுவீங்க...அதனால என்னை வைத்துதான்ன்னு வச்சுகுங்களேன்...
கமலா: ஆமாம்... இந்த லொள்ளு பேசுறீங்களே உங்களுக்கு எந்த கம்பெணி வேலை
கொடுத்திருக்காங்க....ங்ங்ங்....
சரி... பாடுவதற்கு முன் ஒரே ஒரு கேள்வி இருக்கு அதையும் கேட்கனும்.. ஏன்னா இந்த கேள்வி எல்லோரிடம் கேட்டேன் அதுதான்... உங்களிடமும் கேட்கனும்...
போ: சரி...கேளுங்க... என் பாட்டை கேட்பதைவிட உங்கள் கேள்வியை கேட்கதான் மக்கள்
ஆசைப்படுகிறார்கள்... கேளுங்க..
கமலா: சரி, எங்க வேலை பாக்குறீங்க?
போ: எங்க...வேலை பாக்கிறோம்... சும்மா அலுவலகத்தில் போய் உட்காந்துவிட்டு நேரம்
ஆனா... வீட்டுக்கு போவதுதான் வேலை!
கமலா: சரி..சரி... இங்க உங்களுடைய வேலை பற்றியெல்லாம் கேட்கவில்லை கேட்ட கேள்விக்கு புரிந்துகொண்டு சரியா பதில சொல்லுங்க...
போ: சாரி மேடம்.... மன்னிச்சுக்குங்க.... எ..எ...என்ன... கேட்டீங்க....
கமலா: ம்ம்ம்ம்ம்...எங்கே வேலை செய்றீங்க...
போ : வேற எங்கே அலுவலகத்தில்தான்!
கமலா: அட...அட... அது தெரியுது எந்த அலுவலகத்தில்
போ; நான் வேலை செய்றேன்ல அந்த அலுவலகத்தில்!
கமலா: போச்சுடா...கெளம்பிட்டீங்களா...சரி....உங்க அலுவலகம் எங்கே இருக்கு?
போ: நான் வேலை செய்யுற எடத்தில்தான் இருக்கு!
கமலா: உஹிம்...உஹிம்...ம்ம்ம்ம்ம்ம்ம்......அம்ம.....ம்ம்ம்ம்ம்ம்...
போ: ஹலோ..ஹலோ...கமலா...கமலாமேடம்.. ஏன்...ஏன் அழுவுறீங்க..
கமலா: சும்மா இருங்க... அழுவாம என்ன செய்றது... எந்த கேள்வி கேட்டாலும் இப்படியா
பதில் சொல்றது.....
போ: ஹலோ... என்ன... என் பதிலுக்கு என்ன கொறை... இத பாருங்க... உங்களுக்கு
சரியா கேட்க தெரியலைன்னு சொல்லுங்க....
கமலா: ஹாங்....ஹி...ஹிங்ங்....எனக்கு கேட்க தெரியலையா?!!!!!
போ: அட..ஆமாங்க நீங்க குண்டக்க மண்டக்க கேள்வியைத்தான் தெளிவா கேட்குறீங்க....
ஆனா... தெளிவா கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் குண்டக்க மண்டக்க கேட்டா
இப்படித்தான் பதில் சொல்ல முடியும்...
கமலா: இனிமே... உங்க கிட்ட கேள்வி எதுவும் கேட்பதற்கு இல்லை... நீங்க பாடலாம்
வணக்கம்!
போ: சரிங்க... அப்படியே நடக்கட்டும்... கமலா மேடம்... உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்!
அதுவும் ரகசியமா... கொஞ்சம் ஒலிவாங்கியை பின்னாடி வைத்துகொண்டு உங்க காதை
என் முன்னாடி கொண்டு வரமுடியுமா?
கமலா: அதெல்லாம் முடியாது.... நீங்க இவ்வளவு நேரம் கடித்தது போதாதுன்னு என் காதை
கடிக்கலான்னு நினைக்கிறீங்களா...
போ: அப்படி ஒன்னும் இல்ல... சரி.. போனா போவுது விடுங்க... வேற யாருகிட்டையாவது
அந்த விஷயத்தை சொல்லிகிறேன்.... சரி...நீங்க இறங்கி போங்க நான் பாடனும்....

அ...அ...ஆஅ....ஆஅ......
ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்....
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவதை நீ!
...............................
(ஒரு வழியா பாடி முடித்தான் நம்மபோக்கிரி, சொல்லப்போனால் ரொம்ப நல்லாவே பாடினான்)
பாடிமுடித்ததும்... படைப்பாளர் கமலா... சிரித்த முகத்துடன் மேடைக்கு வந்து ...
வாழ்த்து தெரிவித்து....
கமலா: ரொம்ம நல்லாவே பாடுனீங்க...வாழ்த்துக்கள்...
ஆமாம் ஏதோ சொல்றேன்னு சொன்னீங்களே...
(என்று கேட்டவாறே ஒலிவாங்கியை கீழிறக்கிக் கொண்டார்)

போக்கிரி: இல்ல....வருஷம் வேற பொறக்க போவுது இப்ப போய் ஒரு பொய் சொல்லனுமான்னு நினைச்சேன், அதான் வேண்டான்னு விட்டுட்டேன்..
கமலா: அப்படி ஏன் நினைக்கிறீங்க... இன்னும்தான் இந்த வருடம் முடியவில்லையே.. நீங்க சொல்லப்போகும் பொய் இந்த ஆண்டின் இறுதி பொய்யாக இருக்கட்டுமே... அது என்னதான்னு தெரிந்துகொண்டால்தான் இங்கே வந்திருக்கும் வருகையாளர்களுக்கு நிம்மதியிருக்கும் எனவே சும்மா தைரியமா சொல்லுங்க...

போக்கிரி: நீங்களே ரொம்ம ஆவலா கேட்கும்போது சொல்லித்தான் ஆகனும், சரி அந்த விஷயம் என்ன தெரியுமா.... அதுவந்து...அதுவந்து.... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...ம்ம்ம்ம்

கமலா: அய்யே....ரொம்பத்தான்.... வழியுது தொடச்சுகுங்க....இதெல்லாம் அருந்த பழசு...இதெல்லாம் எப்பவோ சினிமாவில வந்திருச்சு....புதுசா எதாவது சொல்லுப்பா...
போக்கிரி: என்ன.....சினிமாவில வந்திருச்சா...இது நான் சிந்திச்சு வச்ச டலயாக் ஆச்சே அதுக்குள்ள இது எப்படி கோடம்பாக்கம் போனது.... இதுக்குத்தான்... இந்த மாதிரி காமெடி விஷயங்களை எல்லாம் பப்ளிக்கா யாரிடமும் பேசக்கூடாது என்கிறது.... இப்ப பாருங்க என்னுடைய காமெடியை யாரோ எடுத்து எந்த படத்திலொயோ போட்டுவிட்டானுங்க....
கமலா: ஹலோ...ஹலோ.... நிறுத்துங்க...நிறுத்துங்க.... இந்த கதையெல்லாம் இங்கே வேணாம்.. இது பாட்டா கூட வந்திருச்சு...

போக்கிரி: என்ன்ன்ன்ன.....பாட்டா கூட எழுதிவிட்டார்களா....ம்ம்ம்ம்ம்ம்....என்னடா இந்த போக்கிரிக்கு வந்த சோதனை! எத சிந்திச்சாலும் நமக்கு முன்னாடி கண்டுபிடிச்சு இப்படி நம்ம சரக்கையெல்லாம் இவனுங்க வித்துகிட்டு இருக்கானுங்க....கட்டாயம் கன்சூமர் கோர்ட் போகனும்....

போக்கிரி:
கமலா மேடம்.... இதுவரை நான் ஒரு நகைச்சுவைக்காகத்தான் இப்படியெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டேன்... தயவுசெய்து பெரிய மனதுகொண்டு மன்னிக்கவும்....என்ன இருந்தாலும் என் போன்ற ஒரு நல்ல ரசிகர்களுக்கு நீங்கள் எப்போதுமே ஒரு கலங்கரை விளக்கம்தான்... அதில் எந்த கலங்கமும் என்றுமே வராது....உங்களுடைய படைப்புக்கு முன நாங்கள் அனைவரும் நல்ல நேயர்களாகவே கடைசிவரை இருந்து உங்களுக்கு நல் ஆதரவு வழங்க விரும்புகிறோம்... எங்களுடைய ஆரோக்கியமான ஆதரவு உங்களை போன்ற திறனாளர்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இனி இருக்காது..... நன்றி!

கமலா: அட...நீங்க வேற மிஸ்டர் போக்கிரி! நான் எதுவும் தப்பா நினைக்கவில்லை, நீங்க இப்படி பேசியதைகூட நம் நேயர்கள் நன்றாக ரசித்து கைதட்டியதை பார்த்தீர்கள் அல்லவா, எனவேதான் நானும் உங்களை இதுபோன்று பேச விட்டுவிட்டேன்.... என்னை பொறுத்தவரை மக்களை சந்தோஷப்படுத்தும் பணியை நான் செய்தாலும் அல்லது உங்களைப் போன்ற நல்ல நேயர்கள் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்... எனவே எந்த வருத்தமும் இல்லாம இருங்கள்... இதோ உங்களுடைய சிறந்த பாட்டுக்கான... எங்கள் சிறப்பு பரிசு...
இதில் இருக்கும் பரிசை கண்டு நிச்சயம் நீங்கள் மகிழ்வீர்கள்...வீட்டில் சென்று திறந்து பாருங்கள்...வாழ்த்துக்கள்...நன்றி!

நல்லிரவில் வருடம் பிறந்ததும்....கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய போக்கிரி....அவசரம்...அவசரமாக...அந்த பரிசு பொட்டலத்தை பிரித்தான்....
கிர்..........கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
அலார சத்தம்....அதில் இருந்தது அலாரம் இல்லை...அங்கே அடித்ததுதான் அலராம்....
அப்படின்னா அதில் இருந்தது....அட அதுதான் நம்ம கனவு கலைந்துவிட்டதே....அப்புறம் அதில் என்ன இருந்துச்சுன்னு எனக்கு என்ன தெரியும்....வேண்டும் என்றால் போக்கிரி கிட்ட கேட்டுச் சொல்றேன்... ஓகேவா.......
சரி...சரி....படம் முடிஞ்சு போச்சு.... எல்லோரும் எழுந்துபோய்.... புதுசா யாரோ நம்ம கதை கதாநாயகன் பேரை சுட்டு படத்துக்கு பெயராக வைத்து படம் எடுத்திருக்காங்கலாம் அத போய் பாருங்க.....என்ன வர்டா.......டா...டா....

Friday, January 05, 2007

புத்தாண்டில் புது முயற்சி!


என் இனிய தமிழ் மக்களே! இதுவரை ஒரு பயனும் இல்லாத பதிவுகளை போட்டுவந்த இந்த பிரியமுடன் பிரேம்குமார் இப்பொழுது சுத்தமாக ஒரு பயனும் இல்லாத பதிவுகளை போட முடிவெடுத்துள்ளான்!

வணக்கம் மக்களே! நண்பர்களே! உங்களுக்கெல்லாம் புத்தாண்டு எப்படி பூத்துள்ளது? சந்தோஷமா பிறந்திருக்கா? எனக்கு உண்மையிலேயே குதுகலத்துடன் பிறந்ததது....
நான் புத்தாண்டு பிறந்த போது... சிங்கப்பூர் ரேடியோ ஒலி 96.8 நடத்திய கவுண்ட் டவுன் நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்தோடு இருந்தேன்....
ஒரு நாள் முழுவது நடந்த நிகழ்ச்சி அது... அதில் பல்வேறு அங்கங்கள் படைக்கப்பட்டது...
அப்படி அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்த எனக்கு இரவில் படுக்கும்போது ஒரு கற்பனை உதித்தது.... அந்த கற்பனையின் படி ஒரு கதை எழுதலாமே என்று கூட தோன்றியது... நம்ம என்ன பட்டுக்கோட்டை பிரபாகரா அல்லது பாலகுமாரா கிரைம் நாவல் எழுதுவதற்கு... சும்மா நம்ம பிளாக்கில் கப்சா விடலாம் என்று எண்ணியிருகிறேன்....


விரைவில் முடிந்தால் நாளைக்கு நான் அலுவலகம் வந்தால் நாளையே எழுதிவிடுகிறேன்...
அப்படி என்ன இருக்கும் அந்த கதையில் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது
சில கற்பனை, கதை, காமெடி.....அப்புறம் கதைக்கா ஒரு சின்ன காதல் அவ்வளவுதான்
பாட்டு கூட இருக்கும் ஆனா சண்டை இருக்காது! விரைவில்......