Tuesday, October 28, 2008

உனைப்பார்த பின்பு நான்!

என்ன, என் இனிய நண்பர்களே! எப்படி இருக்கீங்க, எப்படி போனது தீபாவளி எல்லாம்? ஒரு வலியும் இல்லாமல் சென்றிருந்தால் சரி!! அப்புறம் என்ன! எல்லோருக்கும் என் இனிய அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்! நாட்கள் போகிற வேகத்தில அடுத்த நாளே அதுவும் வந்துவிடும்போலவே அதுக்குத்தான் சொல்லி வச்சேன்!

மூன்றுநாள் விடுமுறை, மூன்று மணி நேரம்போல பறந்துபோச்சு! இருந்தாலும் இந்த நாட்களில் என்ன என்ன நடந்தது என்று எழுத ஆசைதான், ஆனால் தமிழில் எனக்குபிடிக்காதது....அதிகம் எழுதுவது படிப்பது!! எனவே நச்சுன்னு...ஓகேவா...

கடந்த சனிக்கிழமை இரவு சினிமா பார்கலாம் என்ற ஆசை வர நண்பனும் அதை ஆமோதிக்க, இருவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு நள்ளிரவு காட்சிக்கு சென்றோம்!! என்ன படம்....அட அதுதான் நம்ம தல நடிச்ச...ஏகன்!!

பில்லா பார்த்த பீதியில் இருந்த எனக்கு ஏகன் எப்படியிருக்குமோ என்ற ஏக்கம் இருந்தது! ஆனாலும் அடுத்த இரு நாட்கள் விடுப்பு என்ற சந்தோஷம்...சூப்பர் இரவு உணவு சாப்பிட்ட சந்தோஷம்...நல்ல திரையயரங்கம், பக்கத்தில் என்னுடைய நல்ல சினேகிதன்....இதுபோன்ற சிறப்பு அம்சங்களுடன் திரையரங்கத்தில் அமர்ந்து படம் பார்ததால் ஏகன் எனக்கு என்னவோ ரொம்ப பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்!!

படம் பார்பதற்கு நல்ல மனநிலை வேண்டும் என்பது என்னவோ உண்மைதான் போலிருக்கு! ஆனால் அதற்கு பின் சில நண்பர்களிடம் படத்தை பற்றி கருத்து கேட்கும்போது அவ்வளவாக நல்ல கருத்து வரவில்லை! எனக்கு பிடிச்சிருக்குப்பா....
என்ன சிறப்பு அம்சங்கள் என்று கேட்டால்...சொல்வதற்கு ஒன்னுமில்லைதான்!!
1. நல்ல கேமரா!
இதில் ஒரு காமடி இருக்கு, திரைப்படம் பார்த்துகொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையை பக்கத்தில் இருக்கும் என் நண்பரிடம் சொன்னபோது, எனக்கு வலதுபக்கம் உட்காந்திருந்த ஒரு முந்திரிகொட்டை நபர் என்னிடம் சொன்னது, ஆமான்னே....இப்ப எல்லாம் டிஸிட்டல் கேமராதான் பயன்படுத்துகிறார்கள்! அவரிடம் அதுக்குமேல நான் பேச விரும்பவில்லை!
2. அஜித் நடிப்பு எப்போதும் போல இருந்தாலும் ரசிக்கும்படியும் இருந்தது!!
3. முக்கியமான அம்சம்...நம்ம நயன்ஸ்தான்....அட...அட....சொல்லும்படி ஒன்னும் இல்லீங்க.....அட..ஒன்னும் இல்லேன்னு சொல்றேன்ல...திரும்ப திரும்ப....என்ன என்னன்னு கேட்டா என்னத்த சொல்வது....போய் பருங்கப்பா.....
இப்படி பல நல்ல விஷயங்களும் கதையில்லா சூப்பர் கதையும் இருந்தது! எனக்கு பிடிச்சிருக்கு......




உன்னை பார்த்த பின்பு நான்...நானாக இல்லையே! என்னை மறந்து இன்று நான்......அட நான் பாடலீங்க...அப்புறம் ஆறு...பாடுறது? சொல்வோம்ல...









அட...நாந்தாங்க அஜித்குமார்! என்ன பாட்டுன்னு கேட்குறீங்களா! அட ஒன்னுமில்லீங்கோ....என்னுடைய "ஏகன்" படத்தில் அந்த நயன்ஸ் வருகின்ற அழகை பார்த்துதான் இப்படி பாடுகிறேன்!




அதுக்காக ஏகன் படத்தில் இப்படியெல்லாம் இருப்பேன்னு நினைத்து அதிர்ந்து போய்விடாதீங்க!! சும்மா....சும்மா....அப்படித்தான் இருக்கேன்? எப்படி இருக்கீங்க! அதான் சொன்னோம்ல....."சும்மா"




கெளம்புங்க...எல்லாரும் கெளம்புங்க...இன்றே போய் என் படத்தை எல்லோரும் பார்கனும்.. இல்லேன்னா......சுட்டுவிடுவேன்! இதுதான் நம்ம புது கெட்டப்பு, எப்படியப்பு இருக்கு?





என்ன....ஏகன் பார்க தயாராகிவிட்டீங்கலா! தலமேல உங்களுக்கு நம்பிக்கையிருந்தா வந்து பாருங்க....ரொம்ப நன்றி!

Friday, October 24, 2008

தீபாவளி தித்திக்கட்டும்! வாழ்த்துக்கள்!


நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வாழ்த்து அனுப்பி வைக்கவேண்டும் என்ற ஆசை வருடா வருடம் வருகிறது! ஆனா.....இயலாமல் போய்விடுகிறது, எனவே வழக்கம்போல வரைப்பூவில் வாழ்த்துச் சொல்லிவிடுகிறேன்!!
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!




இந்தியர்களின் கூட்டம்
இந்த அகல் விளக்குபோன்று
இவ்வுலகில் என்றும்
இனிதாய் ஒளிவீச
இவனின் வாழ்த்துக்கள்!

கூட்டமாக இருந்தாலும்
இது குதுகலம்குறையாத
இனியதமிழர் கூட்டத்தின்
அடையாளம்!




வானத்தை தொட்டுவரும்
வான வேடிக்கையை
வாடிக்கையாக கொண்டு
வருடா வருடம்
வந்து நிற்கும் இந்த
வளமான திருநாளை
வாழ்நாள் முழுவதும்
வளமாக வாழ்ந்துகொண்டாட
வாழ்த்துகிறேன்!

எல்லோருக்கும் என் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்! எல்லோரும் கொண்டாடுவோம்!
தீபத்திருநாளை கொண்டாடும்வேலையில் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை கொடுத்தால் ஆனந்தம் அனைவருக்கும் திகட்டாத தித்திப்பாக இருக்கும்! சந்தோஷமாயிருங்க!! சங்கடங்களை நினைக்காதீர்கள்! வருடத்திற்கு ஒருமுறை வரும் நல்லநாளை நல்லமுறையாக ஆனந்தத்துடன் அனுபவிக்கவும்! ஆண்டவன் ஆசிர்வதிப்பார்!! வாழ்த்துக்கள்!

Friday, October 10, 2008

பாதையை மாற்றிய பாதகன்! (கப்சா கவிதை)


நீ
கனியைப் போன்று
இனிமையானவள்!





உன்னை எனக்கு
ரொம்ப பிடிக்கும்
உன்னை மட்டும்
என்று கூட சொல்லலாம்!





அந்த அக்கறையில்
சொல்கிறேன்!
பாதை மாறி
பயணம் செய்கிறாய்!
ஊர் வந்து சேரப்போவதில்ல!





திசையை மாற்றிய
காவலன் இந்த
திருடனாக கூட இருக்கலாம்!





பாதையை மாற்றி காட்டிவிட்டு
ஒன்னும் தெரியாதவனாய்
ஒக்காந்திருக்கான் பாருங்கள்!
இதற்குமேல் வழியில்லை
என்பது என்னவோ உண்மைதான்!






இதற்குமேலும்
இப்பாதையில் செல்வதில்
இனிமையேது
இறைவன் இங்கே
அமைத்துக்கொடுத்திருக்கும்
இறுதி U திருப்பத்தை
இப்பொழுதேனும் பயன்படுத்தி
புதியவழியில்
புறப்படுவது புத்திசாலிகளுக்கு அழகு!






என் இதயத்துக்குள்
என்றுமே நீ
குறுதியாய் இருக்கப்போகிறாய்!
என்ற எண்ணத்தில் சொல்கிறேன்
என் இதயம் நல்லாயிருக்க
எனக்கு ஆசையாயிருக்கு!






ஆண்டவன் உன்னை
ஆசிர்வதிப்பார்
வாழ்க்கை இனி உனக்கு
வளமாய் அமையும்!






நான் சொன்ன 'U'திருப்பம் வேறு....
மீண்டுமா.....