Thursday, May 08, 2008

குண்டக்க மண்டக்க விருந்து!

வணக்கம் நண்பர்களே.... நீண்ட நாட்களுக்கு பிறகு பிரேம் எதையோ பெரிய விஷயத்தை எழுத வந்துவிட்டதாக் நீங்கள் நினைதால் அது உங்கள் பெருந்தன்மை, ஆனால் இங்கே ஓன்னும் இல்லை, சும்மா ஒரு சின்ன குட்டி கதை, அட நடந்த சம்பவம்தான்! நமக்கு நடக்கும் சிறு சிறு சம்பவங்களை எழுதுவதற்குதானே இந்த பிலாக்ஸ்பாட் வைத்திருக்கிறோம்! வந்து படிப்பவர்கள் தலைவிதியெல்லாம் பற்றி கவலைப்படக்கூடாது, நாம கூப்பிட்டோமா.....அவர்களாக வருகிறார்கள் படிக்கிறார்கள், பிடிக்கவில்லையென்றால் யார் என்ன செய்வது! ஹ...ஹ.... கோச்சுகாதீங்க நண்பர்களே....உங்களிடம் இப்படி உதார் விடாம, வேற யாரிடம் கலாய்ப்பது! ஓகேவா கதைக்கு போவோமா.....

ம்ம்ம்ம்...சரி....எல்லோரும் கல்லை கீழே போடுங்க அப்பதான் கதை சொல்வேன்! நல்ல பிள்ளைங்க சரியா....

ஒரு ஊர்ல...கமலா..கமலான்னு இரண்டு....சாரி ஒரு வானொலி படைப்பாளர் இருந்தாங்கலாம், அவுங்க எப்ப பார்தாலும் தன்னுடைய படைப்பு அங்கத்தின் ஒரு பகுதியாக, குண்டக்க மண்டக்க என்ற ஒரு அங்கத்தை வைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பார்கள், நாங்களும் அடித்து பிடித்து கொண்டு, அலுவலகத்தில் யாருக்கும் தெரியாம திருட்டு தனமா உட்கார்ந்து யோசித்து பதில் சொல்வோம்!

அன்று வழக்கம்போல் அவர்களுடைய குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்பட்டது, ஆனால் ஒரு போட்டி அங்கமும் இருந்தது, ஆதாவது முதலில் அந்த கேள்விக்கு பதில் அளிப்பவருக்கு 50 டாலர் பற்றுச்சீட்டு பரிசு!

பொதுவாகவே அந்த அங்கத்திற்கு சரியான பதில் அனுப்பும் ஒருசிலர்களில் நானும் ஒருவன் என்று சொல்லாம், சொல்லமலும் இருக்கலாம்! அந்தவகையில் அன்று நாந்தான் முதலில் அனுப்பியதாக அந்த படைப்பாளர் அறிவித்தார், இதில் என்ன கொடுமை என்றால் முதலில் அனுப்பியவர்களிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுவது வழக்கம், நம்ம அதிஷ்டம்....அப்படி ஒன்றும் நடக்கவில்லை! பிறகு குறுஞ்செய்தி மூலம் என்னுடைய தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார்!

இந்த கூத்தை ரேடியோவில் கேட்டுகொண்டிருந்த என் நண்பர்களில் ஒருவர் உடனேயே மற்ற 3 நெருங்கிய நண்பர்களிடமும் தகவலை தெரிவித்துவிட்டார்< எப்படி தெரியுமா>>> ஒலியில் பிரேமுக்கு 50 வெள்ளி கிடைத்திருக்கு என்று சொல்லிவிட்டார்!

என்ன நடந்தது!!! அடுத்த நாள் மாலை ஆப்பு காத்திருந்தது, என் கெரகம்...அன்று மாலை அந்த நண்பர்களில் 3 பேர் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருந்தனர், அலுவலகம் முடிந்து அங்கே சென்றேன்....வழக்கத்துக்கு மாறா இருந்தது அவர்களுடைய வரவேற்பு! வரவேற்பு என்று நினைத்து நானும் ஏமாத்து போய்விட்டேன்...அது வரவேற்பு இல்லை ஆப்பு என்று அப்புறம்தான் தெரிந்தது!

டேய்..பிரேம்! கமலா உனக்கு 50 டாலர் கொடுத்ததாமே! வாங்கிட்டாயா....சரி, நீ வாங்கு வாங்காமல் போய். முதலில் இதற்கு பார்டி வைத்துவிட்டு போ! என்று பிடித்த பிடியில் நின்றுவிட்டார்கள்! அன்பாய் வேறு கேட்டுவிட்டதால், நானும் கொஞ்சமும் யோசிக்காமல் இதுக்கு என்ன இருக்கு, உங்களுக்கு இல்லாத பார்டியா வாங்க எல்லோரும் என்று சொல்லி கடல் உணவகம் சென்றுவிட்டோம்!

வழக்கம்போல் சாப்பிடாமல் சற்று குறைவாகவே பாவிகள் சாப்பிட்டார்கள்....சாரி நண்பர்கள் சாப்பிட்டார்கள்! இதில் பீர் வேற ஊத்திகிட்டார்கள்! நான் ஒரே ஒரு பிரைட் ரைஸ், ஒரு வாட்டர் மெலன் சூஸ்! கொஞ்சம் பெப்பர் சிக்கன் அவ்வளவுதான், மற்றவைகள் அனைத்தையும் அன்பு நண்பர்கள்தான் கட்டினார்கள்!

கடைசியில் பில் வரும்ல...பின்ன வராதா...அதெல்லாம் வரும்! மன்னிக்கனும் நீங்க நினைப்பது புரிகிறது, அந்த கடையில் மாவாட்ட முடியாது, வேண்டுமென்றால் இறாலுக்கு தோல் உரிக்கலாம்! 76 டாலர் பில்! பெரிய தொகை இல்லைதான், இருந்தாலும் இந்த பார்ட்டி எதுக்கு என்று பார்த்தால்தான் உங்களுக்கு இது பெரிசா இல்லையா என்று புரியும்!

வெறும் 50 டாலர் பற்றுச்சீட்டு வாங்கியதற்கு பார்டி 76 டாலருக்கு! இப்ப சொல்லுங்க இது பெரிசா இல்லையா! இல்லங்க எனக்கு பெரிசா தெரியல...என் நண்பர்களுடன் உட்காந்து ஒன்னா சாப்பிடும் பாக்கியத்திற்கு என்னால் இயன்ற எவ்வளவு வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருந்ததால்தான் அந்த பார்டி!

சரி...பற்றுச்சீட்டு வாங்கியாச்சா....நீங்க கேட்பது கேட்கிறது, யாருக்கு தெரியும். அட...எதுக்கு அந்த பற்றுச்சீட்டு, எங்கே போய் வாங்குவது என்று கூட எனக்கு இன்றுவரை தெரியாது! இந்த 50 டாலருக்காக மீண்டும் அந்த வானொலி படைப்பாளர் அக்காவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை!

என்னைப் பொறுத்தவரை எனக்கு வானொலியில் பரிசு கிடைத்தது என் நண்பர்களுக்கு மகிழ்ச்சி, என் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தது எனக்கு மகிழ்ச்சி அது போதும்! நன்றி