இன்றைய தகவலாக வருவது உணவு பழக்க வழக்கம் பற்றிய ஐயம்!
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் வானொலியான ஒலியின் கல..கல..ப்பான படைப்பாளர் செல்வி. விமலாதேவி அவர்கள் ஒரு உணவு குறிப்பு வானொலியில் தந்தார்கள். வழக்கம்போல எல்லோரையும் போல நானும் அதை கேட்டுவிட்டேன்.. அட எனக்கும் அந்த குறிப்பைத் தொடரவேண்டும் என்ற ஆசை வர அன்று முதலே கடைபிடிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் மனதுக்குள் ஏற்பட்ட ஒரு பெரிய ஐயத்தால், இதுவரை அந்த பழக்கத்தை நடைமுறை படித்தாமல் காத்திருக்கிறேன்... யாராவது தகுந்த விளக்கம் கொடுத்து என்னை தெளிவு படுத்தினால் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது!
அதுசரி... என்ன அந்த குறிப்பு என்றே நான் இன்னும் சொல்லவில்லையா.. மன்னிக்கவும்... இதோ..இதோ... விமலா சொன்னாங்க.... உடல் நிலையை ஆரோக்கியமா வைத்துக்கொள்ள உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் தேவை, கட்டுப்பாடுதேவை என்றும் அதை எப்படி கடைபிடிக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக சில செய்திகளைச் சொன்னார்கள்! அது என்ன...இதோ கீழே...
நாம் மூன்று வேலைகள் சாப்பிடுகிறொம் இல்லையா! அதை எவ்வாறு கடைபிடித்தால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதற்கு அவர் சொன்ன உதாரணங்கள்:
காலை: சக்கரவர்த்தி போல சாப்பிடவேண்டும்!
மதியம்: இளவரசர் போல சாப்பிடவேண்டும்!
இரவு : பிச்சைகாரன் போல சாப்பிடவேண்டும்!
இதில் என்ன இருக்கு சரியாதானே சொல்லியிருக்காங்க என்று நீங்க நினைப்பது சரிதான்... நான் கூட அப்படி நினைத்து காலை, மதியம் இருவேலையும் கடைபிடித்துப் பிறகு மூன்றாவதாக இரவு வந்ததும் சாப்பிட உட்காரும் முன், அவர்கள் சொன்னது ஞாபகம் வர ...பிச்சைக்காரன் போல என்றார்களே... அது எப்படி? சந்தேகம் வர... கடுமையாக யோசித்தேன்.. இரவில் பிச்சைக்காரன் போல என்றால்.. இரவில் பிச்சைக்காரன் எப்படி?!!!! இரவில் பிச்சை என்பது ராப்பிச்சை என்பார்களே அதுவா? அப்படியென்றால்,. இரவில் பிச்சைக்காரன் ராப்பிச்சை என்ற பெயரில் குறைந்தது ஒரு 5 அல்லது 6 வீடுகளில் சோறு வாங்கி மொத்தமாக வைத்துக்கொண்டு சாப்பிடுவான்.... அப்படியென்றால் நம்மை விமலா... 5,6 வீட்டில் பிச்சை எடுத்து சாப்பிட சொல்கிறாரா அல்லது அந்த இரவு பிச்சைக்காரன் சாப்பிடும் அளவிற்கு நிறையா சாப்பிட சொல்கிறாரா என்று தெரியாமல் இன்று வரை இரவு சாப்பாடே சாப்பிடுவதில்லை... அட உங்களில் யாருக்காவது இது எப்படின்னு சொல்லத்தெரிந்தால் சொல்லுங்க இன்று இரவாவது நிம்மதியா சாப்பிடனும்... தயவுசெய்து நீங்க யாரும் இரவு சாப்பிட போகும்போது... இந்த கதையை நினைக்காதீங்க. நினைத்தீங்கன்னா அப்புறம் என் கதைதான் உங்களுக்கும் சொல்லிபுட்டேன் ஆமாம்....
7 comments:
No, the theory is this:
1. Kaalai - you need energy for the day, and you do a lot of work during the day, so having a good breakfast gives you the energy, and also gets digested due to the work you do.
2. madhiyam - since you are approaching evening, where you are going to do less work when compared to the day, whatever you eat (if in excess) might not get digested, so alavoda ilavarasan madhiri sapidunga
3. Night - thoongadhane poreenga, then how will food get digested? So konjama sapidunga, appadiye alli alli kottikadheenga-nranga. Pichaikaranga wont have the necessary resources to have a hearty meal illaya, so romba konjama sapiduvanga in an ideal situation. That is what she meant.
நன்றி உஷா!
நல்லத் தகவல்கள்!
நம்புகிறேன்
நீங்க சொல்வதை!
கடைபிடிக்கிறேன்
கட்டாயம் இன்றுமுதல்!
கடைபிடியுங்கள்
நண்பர்களே!
ஆரோக்கிய உணவே
அருமருந்து உடலுக்கு!
இதே தகவலைத்தான்
விமலாவும் தந்தார்கள்
ஆனா...
மறந்துட்டேன்.ஹி...ஹி...ஹி..
இப்ப
நீங்க சொன்னதைக்கூட
சோத்த பாத்தா மறந்திடுவேன்.
இதுக்கு ஒரு குட்டி கதை இருக்கு அத
இங்க சொல்லனும்...
சிறு வயதில் வீட்டில் அம்மா
பாடம் சொல்லிகொடுக்கும்பொழுது
நடந்தவைகள்...
அம்மா, இங்கே வா..வா..
ஆசை முத்தம் தா..தா..
இலையில் சோறை போட்டு..
ஈ யை தூர ஓட்டு!
என்ற பாடல் பகுதியை என் தாய்
எனக்கு சொல்லித் தரும் வேலையில்
அந்த வரி (இலையில் சோறை போட்டு) வந்தவுடன்.. புத்தகத்தை
தள்ளிவிட்டுவிட்டு... அம்மாவிடம் சோறு போடச்சொல்லி அடம் பிடிபேன் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்!
குழந்தையா இருக்கச்சேயே ஆரம்பிச்சது இன்னும் நிறுத்தல..
ஆமாங்க...தொலைக்காட்சி தொடரில்கூட யாராவது சாப்பிடுவது போன்ற காட்சி வந்தால் உடனே சாப்பிட தோனுது...ஆன அந்த பழக்கத்தை எல்லாம் ஓரளவிற்கு குறைக்க காரணமாக இருந்தது...இந்த விமலாவின் ஆரோக்கிய குறிப்புகள்தான்.
இதை கேட்ட பிறகு நல்லாவே கடைபிடிக்கிறேன் என்றால் பாருங்களேன்.. எனவே இதை படிக்கும் அன்பர்கள் அனைவரும் கடைபிடிக்கத் தொடங்கினால்... அதுவே எனக்கு மகிழ்ச்சி! நன்றி விமலா, உஷா!
Prem: We need to keep our system in flow and not fill it up coz it may lead to many helath problems when you lack energy and exercise.
Morning breakfast shud never be avoided.
Afternoon lunch shud be not too heavy but fill the tummy half.
At night its good to sleep half empty and fill the remaining.
In India most of them after dinner just go to bed and we are rice eaters. When ther is so much starch stacked up/ piled up when u sleep its not good for ur body.
That why ppl' say eat less in the night and you can wake up early too.
Incase if u eat non-veg, u shud avoid all fats such as eating with skin in fries. Even fish with skin is fat for pp'l who have cholestral.
Nalla sapida solvaang aperiyavanga... :P
Avalavu dhaanunga boss enaku theriyum...nama adayum ozhung apanradhu illa :D
SO ippo naan jaga vangikren ;)
Anaanl- ingey irukra badhilhal romba vithyasama irukku...idha vida better'a sola mudiyumanu therila..
apala varen!! ;)
வணக்கம் பிரேம். என் கீறல்களில் கண்ணிமைத்து கவிதை புனைந்து..ஊக்கமளித்தமைக்கு நன்றிகள்...
காலை உணவு உண்பது மிக அவசியம். மதிய உணவு சிறிதளவு குறைத்து உண்ண வேண்டும். இரவு உணவு மிக எளிதானதாக உட்கொள்வது முக்கியம், காரணம் இரவு நீங்கள் அனைத்து சமிபாட்டு உறுப்புக்களுக்கும் வேலைப் பளு கொடுக்கக் கூடாது.
அதைவிட தொடர்ச்சியான உடற்பயிற்சியும் முக்கியம்.. இதனை உடற்பயிற்சி செய்வதாக நினைக்காமல் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் இணைத்துக் கொள்ளலாம். உதாரணமாக "லிfப்ற்" ஐப் பாவிப்பதற்குப் பதிலாக படிகளை உபயோகிக்கலாம். "பஸ்"இல் பயணம் செய்தால் ஒரு தரிப்பு முந்தியே இறங்கி நடந்து போகலாம்.
நல்ல சாப்பாடுகள் சாப்பாடு உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம். இல்லாவிட்டால் பல சுகாதாரக் கேடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.. இரத்தக் குழாய் நோய், இருதய நோய் (heart troubles- heart attack), நீரிழிவு நோய் (diabetes), என பல பல ஆரோக்கிய கேடு ஏற்படலாம்.
நிறைவான கொளுப்பு (saturated fat) உள்ள உணவுகளைத் தவிர்த்து [முழு ஆடைப் பால் (கொளுப்பு நீக்காத), நெய] நிறைவற்ற கொளுப்புக்களையும் (poly unsaturated or mono unsaturated) [fish, மீன் எண்ணெய், ஒமேகா 3 (omega 3)உள்ள உணவுகள்) அத்தோடு நிறைய தாவர தானியங்கள், இலைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள் சேர்ப்பது அவசியம்.
அஹா...அஹா..
அருமையான
ஆரோக்கிய குறிப்பு!
அத்தனையும்
அடியேன் கடைபிடிக்க
ஆசையாயிருக்கு
ஆனா
ஆனா என்ன ஆனா
கட்டாயம்
கடைபிடிப்பேன்!
நண்பர்களே இது
நமக்கு எல்லோருக்கும்தான்!
நன்றி! நன்றி! sweet chum!
நன்றி பிரியமுள்ள பிரேம்... ஆரோக்கியமாக உண்டு ஆரோக்கிமாக அனைவரும் வாழ்வோம்...
Post a Comment