Monday, November 20, 2006
இப்படியொரு ஆசையும் வந்துட்டா!
அட என்னங்க செய்வது நீண்ட நாள் விருப்பமும் ஆசையும் கூட, நீண்ட நாட்களுக்கு பிறகு காலம் கூடி வர, ஓடிப்போய் நின்னுட்டேன் நானும், எங்கேன்னு தெரியனுமா! அட நம்ம சிங்கப்பூர் மிடியா கார்ப் அலுவலகத்தில் கடந்த ஞாயிறு (19-11-06) நடந்த TV12 DRAMA AUDITION 2006 -ல் தான்!
அங்கே நமக்கு என்ன வேலைன்னு கேட்கிறீங்களா, அட நடிக்க போனேப்பா! என்ன்னனனன..நடிக்கவா?!!!!!! ம்ம்ம்ம்ம்ம்...ஆமாப்பா! சரி...சரி.. நடந்ததை சொல்லித்தொல..
அது! இங்கிருந்து போனேனா, போன உடனேயே அங்கே வரவேற்பறையில் 2 பெண்கள் இருந்தாங்கப்பா, அவுங்ககிட்ட போய் நின்றதும், அவுங்க விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள், நான் பூர்த்தி செய்து கொடுத்தவுடன் ஒரு ஒட்டும் தாளில் என்னுடைய அடையாள அட்டை எண்னையும், ஒரு ref No. ம் எழுதி கைதி நம்பர் மாதிரி எழுதி மார்பு பகுதியில் சட்டையில் ஒட்டிவிட்டுவிட்டார்கள். என்னுடைய திருப்பம் வந்தவுடன் என்கூட 10 பேரையும் உள்ளுக்குள்ளே அழைத்துச்சென்று, புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
பிறகு ஒவ்வொருவராக உள்ளே அழைத்து அவர் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதா பாத்திரத்தில் வசனங்களை பேசி நடிக்கவேண்டும்! இருங்க...இருங்க....எனக்கு என்ன பாத்திரம், என்ன காட்சி என்று கேட்கிறீங்களா!...சொல்றேப்பா....இங்கே சொல்லாம வேற யாருகிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்கப்போறேன்....
என் கதாபாத்திரத்தின் பெயர் 'SIVA' நான் உள்ளே போய் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் (அந்த பெண் அவுங்க ஆளுப்பா, ரொம்ப அனுபவம் வாய்ந்தவங்கன்னு நினைக்கிறேன்) சென்று இணைந்து நடிக்க வேண்டும்... காட்சி நேரம் குறைவுதான்... ஏதோ செஞ்சுட்டு வந்தேன்... வெளியில் இருந்து பாத்தவங்க, நல்லா செஞ்சதா சொல்றாங்கப்பா.....ம்ம்ம்... யாருக்கு தெரியும்.....ஒருவேலை தேர்வு செஞ்சா நான் சந்தோஷப்படுவேன்... தேர்வு செய்யாட்டா தொலைக்காட்சி பார்க்கும் நேயர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
/ஒருவேலை தேர்வு செஞ்சா நான் சந்தோஷப்படுவேன்... தேர்வு செய்யாட்டா தொலைக்காட்சி பார்க்கும் நேயர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!/
ரொம்ப சரி.இப்டியே எல்லா நடிகரும் நினைத்தால்..........
ஸ்ருதீ
ஹாஹா.. அட பிரேம் ரொம்ப காமெடியா எழுதுறீங்க...
நீங்க நடிச்சு முடிச்சி வந்தபிறகு, நல்லா இருந்ததுனு சொன்ன ஆளுங்ககிட்ட இந்த டையலாக்கை சொல்லி இருக்கலாம்..
(வடிவேலு பாணியில்)
"என்னை வச்சு காமெடிகிமிடி பண்ணலையே"!
ஹாஹாஹா...
நீங்க எல்லாம் ஆசைப்பட்டதுபோலவே
நேயர்கள் ஜெயித்துவிட்டார்கள்!
நேயர்கள் தப்பித்துகொண்டார்கள், ஆமாங்க நமக்கு ஊத்திகிச்சுங்க....தேர்வு செய்யவில்லை.. ஒருவகையில் எனக்கும்கூட சந்தோஷம்தான்...
நான் நடிக்கப்போறதை நிறையபேர் விரும்பமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்... அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி எதுக்கு நம்ம நம்ம ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்... வேண்டாம்..இந்த ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது.
Post a Comment