Tuesday, October 23, 2007

உலகம் ஒரு நாடகமேடை

வந்துட்டேன்....சொல்லுவோம்ல...என்ன அவசரம்! கடந்த போஸ்ட்ல என்னமோ சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல, அதப்பத்திதான் இப்ப, என்ன சரியா! ஆனா நீங்க எதிர்பார்க்கும் அளவிற்கு சுவராஸ்சியம் இல்லாம போய்விட்டது அந்த நிகழ்ச்சி!

அட, ஆமாங்க! சில நாட்களுக்கு முன் இங்கே இயங்கிகொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி சானலுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் ஒரு நிருவனம், தாங்கள் படபிடிப்பு நடத்தவிருக்கும் நாடகத்தில் நடிக்க ஆட்களை தேடும் வகையில் ஒரு ஆடிசன்( திறமையரியும் சோதனை) நடத்தினார்கள்...

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நான் கூட போக விரும்பாமல் இருந்து கடைசி நேரத்தில் வீட்டில் போர் அடித்ததால் கிளம்பி சென்றேன். அங்கே நான் சென்றபோது கிட்டதட்ட ஆடிசன் முடியும் தருவாயில் இருந்தது, எனவே வந்தவர்களும் எந்த வசன குறிப்பும் கொடுக்காமல் செய்துகாட்டச் சொன்னார்கள்! அந்தவகையில் எனக்கு முன் நிறையப்பேர் போனார்கள் கேமரா முன் நின்றார்கள் ஏதேதோ செய்ய முற்பட்டார்கள், சிலர் சுமாராக செய்தார்கள், சிலர் திகைத்து நின்றார்கள் சிலர் நிற்பதை பார்தே அவர்கள் போகச் சொல்லிவிட்டார்கள்!

நடப்பவற்றை வெளியிலிருந்து பார்த்துகொண்டிருந்த எனக்கு அடிக்கடி கழிவறை நோக்கி ஓடவேண்டியதாயிற்று! ஒரு கட்டத்தில் திரும்பி ஓடிவிடலாமா என்று கூட தோன்றியது, ஆனால் கூட இருந்த என் நண்பர்கள் டேய்...இருடா...எல்லோரையும் போல நீயும் போய்விட்டு ஒரு சின்ன அறிமுகச் செய்துவிட்டு வாடா என்று தைரியம் சொன்னார்கள்! சரி என்று நின்றுவிட்டேன்!

என் திருப்பம் வந்தது, என்னை அழைத்தார்கள், போய் நின்றேன், லைட்ஸ் ஆன், புகைப்படம் எடுத்தார்கள், சுய அறிமுகம் செய்துகொண்டேன். திடீர் என்று ஏதாவது நடித்துக்காட்டுங்கள் என்றதும் எனக்கு டர்....ஆகிவிட்டது! அதுவும் சூழ்நிலை எதுவும் அவர்கள் தருவதாக இல்லை.. உடனே எனக்கு ஒரு யோசனை வர. நானே ஒரு சூழ்நிலையை எடுத்துக்கொண்டு, அதை பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டு......ஆரம்பித்தேன் பாருங்கள்....
அட...அட...எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை....என்னை அரியாமேலே சும்மா சீன் அப்படித்தான் போனது. எனக்கே தெரிந்துவிட்டது நம்ம அசத்துகிறோம் என்று, செய்துகாட்டிவிட்டு நிறுத்தியதும் அங்கிருந்த சோதனையாளர்கள், கேமராமென்கள் எல்லோரும் வெகுவாக பாராட்டியதோடு, தயாரிப்பாளரும் வெளியில் வரும் போது ரொம்ப நல்லா செய்தீர்கள் என்று பாராட்டி அனுப்பினார்கள்... அதைவிட பிறகு தொலைபேசியில் கூப்பிடுவதாகவும் சொல்லி அனுப்பினார்கள்!

ஆனால், நேற்று வரை எந்த தகவலும் அவர்களிடமிருந்து வராததால், நான் அழைத்து கேட்டேன், அதற்கு அவர்கள் சொன்ன பதில் எனக்கு சந்தோஷத்தை தரவில்லை! அவர்கள் ஒரு சில மாதம் கழித்து நாடகம் உருவாக்க போகிறார்களாம், அதில் எனக்கு ஏற்ற கேரக்டர் இருந்தால் என்னை கட்டாயம் கூப்பிடுகிறார்களாம்! நான் போவதாக இல்லை! ஏன் என்று கேட்கிறீர்களா! வாழ்க்கையே ஒரு நாடகமேடை இதில் தினமும் தினமும் நடிக்கவேண்டியுள்ளது, இதில் நாடகத்தில் நடிப்பதற்காகவெல்லாம் காத்திருக்க முடியாது, ஒருவேலை உடனே அழைத்திருந்தால் நடித்திருப்பேன்! காத்திருந்து நடிக்கவெல்லாம் விருப்பமில்லை!

புரியுது, புரியுது, நீங்க கேட்பது புரியுது, ஏன்டா கேமராவில் முகத்தை காட்ட கிளம்பிட்டியே அதுக்கு முன்னாடி கண்ணாடியில் ஒருமுறை உன் முகத்தை நீயே பாத்துகிட்டாயா என்று நீங்கள் கேட்பது புரிகிறது! சத்தியமா பாத்திருக்கிறேன். ஊஹும்...ஒன்னுமில்லை...இருந்தாலும் முகத்தில் 0 இருந்தாலும் அகத்தில் ஒரு சின்ன நம்பிக்கை! சினிமாவிலேயே பார்க்க போனால் கதாநாயகனை தவிர வேற யாரும் அழகாக இருப்பதாகத் தெரியவில்லையே, அட சில காதாநாயகன்களே அழகு இல்லையே!

சரி என்ன இப்ப....என் முகத்தையும் இங்கே ஒருநாள் போஸ்ட் செய்கிறேன் நீங்க பாத்துவிட்டு ஓகே சொல்லுங்கள் அப்பறம் பார்போம்! எனக்கு என்ன பயமாயிருகுன்னா...நான் என் முகத்தை இங்கே போட...அதை நீங்க எல்லாம் பார்க்க அப்புறம் பயந்துகிட்டு நீங்க யாரும் என் பிலாக் பக்கமே வாராமல் போய்விட்டால்.....என்ன செய்வது...சரி சரி...போடுறேன்...ஏன்னா நீங்க எல்லோரும் இந்து பிரேம்குமாரின் முகத்துக்கு ஒருநாளும் முக்கியத்துவம் கொடுக்காமல் என் எழுத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்து இங்கு வந்து போகிறீர்கள் என்று தெரியும். என்வே துனிந்து என் முகத்தையும் விரைவில் வெளியிடுகிறேன்!
அப்படியே எடுத்துகிட்டு போய் வீட்டு வாசலில் திருஷ்டியாக மாட்டிவைத்துக்கொள்ளுங்கள்!

3 comments:

Rose said...

Hi Prem,

i'm very surprised by the organisers reply when you called to check whether you are selected for acting in that particular drama....if they don't require actors now, why are they having an audition now? Strange.....

பிரியமுடன்... said...

வணக்கம் ரோஸ்!
வருகைக்கு நன்றி! தமிழில் எழுதுவது விளங்குதா? நீங்கள் சொல்வது மிகச்சரி! எதற்கு அந்த ஆடிசன் என்றே தெரியவில்லை! நான் நினைக்கிறேன் அவுங்க ஒரு டுபாக்கூர் கம்பெனியா இருப்பாங்கன்னு! அவர்களுடை விலாசம் கேட்டதற்கு கூட சொல்ல தயங்கினார்கள்! பிறகு தந்துவிட்டு வந்துவிடாதீர்கள் என்றார்களே வந்தது வேகம்! சரி விடுங்க!
நான் நடிகருமில்லை! நல்ல கவிஞருமில்லை! அப்பறம் ஏன் நமக்கு அந்த கூத்தெல்லாம்! ஏதோ வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்பதால் சும்மா இருக்கமுடியாமல் போய்பார்க்கச் சென்றேன் இப்படி ஆயிட்டு! பரவாயில்லை வேற ஏதாவது சம்பாதிக்கிற வேலையிருந்தா பார்போம்!

Divya said...

\\சினிமாவிலேயே பார்க்க போனால் கதாநாயகனை தவிர வேற யாரும் அழகாக இருப்பதாகத் தெரியவில்லையே, அட சில காதாநாயகன்களே அழகு இல்லையே!\\

ரொம்ப சரியா சொல்லியிருக்கிறீங்க!