Wednesday, January 23, 2008

வரம் வேண்டா தவம்!


தலைப்பே தடுமாற்றமாக இருக்கா? இருக்காதா பின்னே! தவமே வரம் வேண்டிதானே இதில் என்ன வரம் வேண்டா தவம்! அட ஒன்னுமில்லீங்க, சும்மா ஒரு மாற்றத்திற்காக மாற்றி எழுதினேன்! ஆனால் இதன் மூலம் ஒன்று சொல்ல நினைக்கிறேன், அதுதான் தலைப்பில் சிறு குழப்பம்!

வரம் வேண்டி தவமிருந்து, கிடைத்ததைக்கொண்டு தான் நலமுடனும், மகிழ்வுடனும், புகழுடனும் வாழ்வதற்கு ஆசை கொண்டு தவமிருப்பது எனக்கு என்னவோ உடன்பாடில்லா செய்தியாக தோன்றுகிறது! எனவே எதுவுமே வேண்டாம் ஆளை சும்மா விட்டால் போதும் ஆண்டவா! கொஞ்ச காலம் வாழ்வில் அமைதியாக வாழ்ந்துவிடுகிறேனே! நீயாக பார்த்து என் தலையில் என்ன எழுதியிருக்கியோ அதன் படி எல்லாம் நடக்கட்டும், என்னுடைய தவத்திற்காக நீ எதையாவது கொடுத்து என்னை அசாதரண மனிதன் அந்தஸ்துக்கு உயர்த்திவிட வேண்டாம் என்பதுபோல சொல்வதற்காக இந்த தலைப்பு!

கொஞ்ச காலம் இரு கண்களையும் மூடி....இதயத்திற்குள் அடங்கி கிடக்கும் ஆயிரம் ஆயிரம் ஆசைகளையும், பாசங்களையும், அவைகளையும், இவைகளையும் மூட்டை கட்டிவிட்டு, அப்படியே அமைதியாக நம்ம புத்தர்போல இருந்தால், நம்முடைய மனதிற்கு ஒரு அமைதி கிடைக்குதோ இல்லையோ....நம்முடைய தொந்தரவு இல்லாமல் மற்ற ஜீவன்களாவது நிம்மதியாக இருக்கும் இல்லையா...எனவே மக்களே! உங்களுக்கென்று எழுதப்பட்ட வேலைகளையும், கடமைகளையும் மட்டும் கவனித்துக்கொண்டு, மற்ற விஷயங்களில் புத்தராக இருந்து, அடுத்தவர்களை சுதந்திரமாக சிந்திக்க வழி விடுங்கள்!

என்ன கதை சொல்கிற மாதிரி இருக்கா....அட...என்னவோ ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஏதோ எழுதியிருக்கிறேன்! மன்னிக்கவும், முடிந்தால் ஒருநாள் புத்தராக அமைதியாக இருக்க முற்படுங்கள்! அதில் யாருக்காவது நல்ல பிறக்கும்! என்ன முடியுமா? சற்று சிரமம்தான்! நாலு பேறு நல்ல்லாயிருக்கவேண்டும் என்றால் நீ சும்மா இருந்தாலே போதும்! இது கமல் சொல்லவில்லை.....நான் சொன்னது! ஹி...ஹி....ஹி....என்ன பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கா....பின்ன....பைத்தியக்காரன் பிலாக்குக்கு வந்துட்டு தெளிவா வெளியாக முடியுமா என்ன?!!!!!!

No comments: