Tuesday, June 03, 2008
பாடும் வானம்பாடி...வாழ்க...வாழ்க!
பாட்டுத்தலைவனுக்கு இன்று 04 ஜுன் 2008 பிறந்தநாள்! இவர் இவ்வுலகில் ஒருமுறை பிறந்ததால் என்னைபோன்ற இசைப் பிரியர்களுக்கு இன்பம் இவர் பாடலை ஒவ்வொருமுறையும் கேட்கும்போதும் பிறக்கிறது!
எல்லோரும் பாடுகிறார்கள், எல்லோருமே ரசிக்கிறார்கள்! என்னை பொறுத்தவரை இவரைவிட இனிமையாக யாரும் பாடிவிட்டதாகவோ இனிமேல் பாடிவிட முடியுமோ என்று தோன்றவில்லை!
எண்ணில் அடங்கா எத்தனைப் பாடல்கள்....தித்திக்கும் தேனாகவும், மெய்மறக்கும் வஸ்தாகவும், இதயம் நெகிழும் இனிமை! தமிழ் பாடல் ரசிகர்களுக்கு எத்தனையோ இனிமைகளை இவர் குரல் ஏற்படுத்திவருகிறது என்று சொன்னால் மிகையாகாது!
பாடும் நிலா பாலா என்றால் எல்லோருக்கும் மனதில் ஒரு இனிமை பிறக்கிறது! அவருடைய நாதத்தில் பிறக்கும் ஓசை அவருடைய குரல்வளையும் தாட்டும்போது ஏனோ தேனாக மாறிவிடுகிறது! இறைவனுடைய இணையற்ற படைப்பு இவர்!
சிறுவயதிலிருந்தே எனக்கு இவரை எக்க சக்கமாக பிடித்துவிட்டது! நான் பிறந்த 70 -80 காலகட்டத்தில்தான் இவருடைய பாடல்கள் இனிமை பெற தொடங்கி 80 களில் சக்கைபோடு போட்டது! 80 களில்தான் எனக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கும் வயது தொடங்கியது என்பதால் ஆரம்ப காலத்திலிருந்தே அவருடைய பாடல்கள்களை ரசிக்க கற்றுக்கொண்டதின் காரண்மாக இன்றுவரை பாலா என்றால் மனதில் பாலை வார்பதுபோன்ற உணர்வு உள்ளத்தில் ஊற்றெடுக்கிறது!
ஒரு காலகட்டதில் அவருடைய பாடல்களை சதா வீட்டில் பாடிக்கொண்டே இருப்பது கூட உண்டு! ஏன் இன்றுவரை நான் பதிவுசெய்து வைத்துகொண்டு கேட்கும் பாடல்களில் 90 சதவீதம் அவர் பாடல்கள்தான்! அவர் மீது ஒரு பக்திகூட உண்டு என்று சொல்லலாம்! அதற்கு சில காரணங்களும் உண்டு! கல்லூரி, பல்கலை கழகங்களில் படித்த கால கட்டங்களில் அவருடைய பாடல்களை சிறப்பாக இல்லையென்றாலும் சுமாராக பாடி பரிசுகள் வாங்கியிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள பெருமைபடுகிறேன்! ஆனால் இன்று அந்த குரல்வளம் முழுவதும் எங்கேபோய்விட்டது எனக்கு என்று எனக்கே தெரியவில்லை!
இவர்மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக என்னுடைய பெயரின் சுருக்கத்தையே மாற்றி அமைத்துக்கொண்டேன் என்றால் பாருங்கள்! இவருடைய பெயர் சுருக்கம் sP.B தானே. என்னுடைய பெயரில் எப்படி மாற்றம் என்றால்... ஏற்கனவே என்னுடைய பெயரை ஆங்கிலத்தில் என் தத்தை BREM என்று பள்ளியில் சேர்க்கும்போதோ கொடுத்துவிட்டதால் அதில் B அமைந்துவிட்டது, அப்பா பெயர் P என்ற எழுத்தில் தொடங்கும் எனவே P.B என்று இயற்கையிலேயே அமைந்துவிட்டது! இப்ப "S" தேவை என்ன செய்வது, பெரிய கஷ்டமில்லாமல் போய்விட்டது! ஏனெனில் என்னுடைய அம்மா பெயர் S ல் தான் ஆரம்பிக்கும், அதை முன்னே போட்டேன். எனக்கு முன் என் அம்மா அப்பா இருப்பதால் என்னுடைய பெயர் SP.B ஆகிவிட்டது! அதற்காக நான் sp.B மாதிரி பாடிவிட முடியுமா என்றால் வாய்பே இல்ல! அவரு அவருதான், இவரு இவருதான்! ஹி..ஹி..ஹீ....
இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால்! அக்டோபரில் பிறப்பவர்கள் அழகாக இருப்பார்கள் என்பதைபோல், ஜூன் மாதம் பிறப்பவர்கள் நல்லா பாடுவார்கள் என்பது தெரிகிறது ஏனென்றால் நான் பிறந்ததும் இதே மாதத்தில்தான் இன்னும் ஒரு சில நாட்களில் நம்ம பொறந்தநாளும் வருதுல்ல! என்ன....எஸ்.பி.பி சாருக்கு 66 முடிந்து 67 ஆரம்பமாகிறது! நமக்கு 32 வயது முடிந்து 31 ஆரம்பமாகிறது அவ்வளவுதான் வித்தியாசம்.......
எப்படியோ...இப்படியெல்லாம் கலக்கிவரும் நம்ம இசைசகாப்தம், பாடலரசர்! பத்மஸ்ரீ, டாக்டர் மரியாதைக்குரிய SP.B அய்யா அவர்கள் என்றுமே நல்லாயிருக்க என்னுடைய எண்ணங்கள் என்றுமே இறைவனை வேண்டியபடியே இருக்கும்! இவ்வுலகம் இருக்கும்வரை அவரும் அவருடைய பாடல்களும் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆண்டவன் ஆசிர்வதிப்பார்!
டாக்டர் சார்.....பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு! வளர்க உமது புகழ்!
பாடும் நிலவே உமக்கு
தேன் கவிதை ஒன்று!
தேனே...தேனே!
உன் பாடலை ரசித்தேனே!
மானே...மானே!
உன் பாடலை கேட்டால்
மனம் மாறி மானாக
துள்ளி குதிக்குது தினமும்தானே!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
I LOVE SPB
@இனியவள் புனிதா.....
not only u, everyone loves him while listen his sweet voice! ஆமாம்...எ...எந்த sP.B இது! ஒரு நிமிடம் ஆடிப்போட்டேன்...யப்பா!
Post a Comment