Friday, September 26, 2008

இரவைக் கிழிக்கும் இயந்திரங்கள்!



ஏன், எதுவுமே இத்தனை நாளா எழுதவில்லை என்று கேட்க நினைத்தவர்களுக்கு, எதையாவது எழுதி கிழிக்கவேண்டும் என்றுதான் இந்த இரவைக் கிழிக்கும் இயந்திரங்கள். தலைப்பு என்ன தலைவர் படம் மாதிரி எந்திரம் கிந்திரம் என்று வருகின்றதே என்று நினைத்தால், அதில் தவறில்லை!

நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவர் படம் மாதிரி வந்து உங்களை தடுமாற வைக்க விருப்பமில்லை. சொல்லவந்ததை சட்டுன்னு சொல்லிவிடுகிறேன்..... சொல்லவந்ததை சொல்லாமல் இருந்தால் வருடங்கள் கூட வாரம் போல போய்கிட்டேல்ல இருக்கும்!

அட...ஒன்னும் இல்லீங்க சாமிகளா....எங்க ஊர விசேஷமுங்க....அட...பார்முலா ஒன்று கார்பந்தயம் நடக்குதுல்ல அதை பற்றிதான் சொனேன்....

என் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வெகு அருகில்தான் இந்த பந்தயம் நடக்கிறது. இன்றுதான் சோதனை ஓட்டம் ஆரம்பம், மாலை மணி 4 லிருந்தே ஒரே சத்தம்...எங்கள் அலுவலகம் இருப்பது 25 மாடி, நடப்பது கிட்டதட்ட ஒரு ஒரு கிலோமீட்டர் தூரம்தான் இருந்தாலும், சத்தம் வ்வ்வ்வ்வ்வ்வ்...வாஆஆஆ...வ்வ்வ்வ்வ்வ்வ்......ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....வ்வ்வ்வ்ய்ய்ய்ய்ய்ய்.....ஆஆஆஆச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... சும்மா கிழிக்கிது!

சரி..அலுவலகத்தில் இருந்து இறங்கி அது நடக்கும் இடத்திற்கு சென்றால், செவிப்பறை கிழிந்துவிடும் சத்தம்.....பெரிய கூட்டம் நின்று பார்கிறது....மன்னிக்கவும்...சத்தத்தை கேட்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பந்தயம் முழு பாதுகாப்பு அரண்களுடன் பொதுமக்கள் சிறுதுகூட பார்த்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடனும் அமைக்கப்பட்டுள்ளதால், வெறும் சத்தம் மட்டுமே கேட்கமுடிகிறது! ஆனால்ல்ல்ல்.....ஆனால் என்ன இது சம்மந்தமான் முழு கதையும் மிகவிரைவில் புகைப்படங்களுடன் போடுகிறேன் சரியா....சுவையான தகவல்கள் பல காத்திருக்கு! எனவே நீங்களும் கொஞ்ச நாள் காத்திருங்கள்...அந்த பார்முலா ஒன்று தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்...வர்டா.....வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........வ்வ்வ்வ்வ்வ்வ்......வ்வ்வ்வ்வ்வ்....

No comments: