Tuesday, October 19, 2010

கடுப்பா எழுதிய கவிதை ( காரணமேயில்லாமல்)

உப்பு சப்பில்லா
உறவு!
உன்னிடத்தில் உணர்ந்தேன்!
உப்பில்லா பத்தியக்காரனாக
உண்மையில் பைத்தியக்காரனாகவும்
உலாவருகிறேன்!
நீ
உள்ளத்தில் இருப்பதால்
உயிராக இருக்கிறாய்
உப்பில்லாமல் இருந்தாலும்
உன் நினைவுகளில்
உலகில் வாழ்வதில்
தப்பில்லை என்று
தவறாமல் நினைக்கிறேன்!
இனிய குரலுக்கு
இனி இந்த குழல் அடிமை!
அந்த குரலை வைத்து
அடியேனை ஒருமுறை
அழைத்து அன்பே....என்பாயா?
ஆசையில் பாதி
ஆயுசே போய்விட்டது,
ஆனாலும்
கள்ளி நீ
கருணையே காட்டவில்லை!
உனக்கு
கவிதை ஒரு கேடா.....
ஓடிப்போய்விடு...
ஒருவரி கூட படிக்காதே....

No comments: