Thursday, October 26, 2006

CAMERON HIGHLANDS, MALAYSIA

இந்த ஆண்டு தீபாவளிக்கு 4 நாட்கள் விடுப்பு எடுக்கும் வாய்ப்பு வர நண்பர்களுடன் கலந்தாலோசிக்க காமரன் ஹைலாண்ட்ஸ் போகலாம் என் திட்டம் தீட்டப்பட்டது. நீண்ட்தூர பயணம் என்பதால் சற்று யோசித்தாலும் வாடகைக்கு நல்ல பெரிய வசதியான "HYUNDAI TRAJET" எடுத்துக்கொண்டு கிளம்பியாச்சு.. நானும் என் நணபனும் மாற்றி மாற்றி காரை செலுத்தினோம்...மலேசிய விரைவுச் சாலைக்கும் தேர்வு செய்யப்பட்ட பாடல் தொகுப்புக்கும் பயணம் அப்படித்தான் இருந்தது போங்க...சூப்பரப்பு! காமரன் உண்மையிலேயே பார்கவேண்டிய இடம்... நிறைய போட்டோ சுட்டோம்.. ஒரு சில மட்டும் இங்கே! 3 நாட்களில் நிறைய விஷயம் தெரிந்துகொண்டோம்... இது சம்மந்தமாக ஏதாவது பயணக்குறிப்பு நண்பர்கள் யாருக்காவது தேவைப்பட்டால் தயக்கமின்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்..
சிங்கப்பூரிலிருந்து அங்கே எங்களைப் போன்று நிறையப் பேர் வாகனத்தில் வந்திருந்ததைப் பார்த்தோம்... எனவே ஒரு முறை போயிட்டுத்தான் வாங்கலேன்! சிங்கப்பூரிலிந்து குறைந்த பட்சம் 650 கி.மி தூரத்தில் இருக்கிறது அழகிய காமரன் ஹைலாண்ட்ஸ்!

Wednesday, October 18, 2006

தித்திக்கும் தீபப்பெருநாள்! சிங்கப்பூர் 2006





சிங்கையின் சிறப்பு
தீபாவளியிலும் இருக்கு!
தித்திக்கும் இனிப்பு
தீபாவளியின் களிப்பு!
ஒளிவெல்லம் ஊரெல்லாம்
குட்டி இந்தியாவிலும்
கொட்டிக்கிடக்கிறது!

இந்தியர்களின்
இனிமை பெருமையை
இதுதாங்க எடுத்துகாட்டுது!

முகமெல்லாம்
மலர்ச்சி
அகத்தில் ஆயிரம்
குளிர்ச்சி!

வருடத்திற்கு ஒருமுறை
வந்தால்கூட
இதயத்தில் ஒரு
இதமான இடத்தை
இது வைத்திருக்கிறது
!

இந்த விழாக்காலத்தில்
உலாப்போவதும்
விரும்பியதை உண்பதும்
வேடிக்கை பார்பதும்
வேதனைகளை துறப்பதும்
வேண்டியதை வாங்குவதும்
வெளிப்படையாக பேசுவதும்
பளபளப்பாக உடையனியவும்
பகலெல்லாம் சுத்தவும்
ஒளிவெல்லத்தை ரசிக்கவும்
ஒய்யாரமாக நடக்கவும்
பல கதைகள் பேசவும்
பல கடைகள் பார்க்கவும்
உறவினர்களை பார்கவும்
உளமாற பேசவும்
இனிப்பு பல வாங்கவும்
இதமாக இருக்கவும்
சுற்றி சுற்றி வரவும்
சுறுசுறுப்பை பெறவும்
அலங்காரங்களை ரசிக்கவும்
அசந்துபோய் நிற்கவும்
உற்சாகத்துடன் உழைக்கவும்
அச்சாரமாக அமைந்தது
இந்த தித்திக்கும் "தீபாவளி"
இனிதே கொண்டாடுவோம்!
தீபாவளி வாழ்த்துக்கள்!

என்றும்
பிரியமுடன்
பிரேம்குமார்
:)

Tuesday, October 10, 2006

நான் யார்?




இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தலப்பா, மீசை, தாடிக்குள் ஒலிந்திருக்கும் இவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு நமது அரசர் 1975-ம் ரவாகேசரி அவர்கள் ஆயிரம் கூமுட்டைகளை பரிசாக வழங்குவார்!

ஒருவரை கண்டுபிடித்தால் பரிசு கொடுக்கப்படும் இன்னொருவரை கண்டுபிடித்தால் கொடுத்த கூமுட்டைகள் திருப்பி பெற்றுக்கொள்ளப்படும்! முயற்ச்சி செய்ய விருப்பம் இருக்கா? இல்லையென்றால் இந்த இரு பறவைகளையாவது பிடித்து அவர் யார் என்று காட்டுங்கப்பா! அழகான இயற்கையின் இடையில் அந்த முகம் தெரிவதைவிட இப்படி இருப்பதே மேல்! என்ன சரியா?

Monday, October 02, 2006

கல..கல..கலக்கும் ஒலி படைப்பாளர்!

பலே...பலே! இந்த ஆண்டும் இவுங்கதான் லக்க...லக்க....sorry கல..கல..ப்பான படைப்பாளராமே!
நமக்குத்தான் முன்பே தெரியுமே! நம்மெல்லாம் ஓட்டு போட்டிருக்கோமில்ல....
எனக்கும் பிடித்த படைப்பாளரை என்னைப் போலவே ஓட்டு போட்டு வெற்றியடையச் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ஒரு ஆயிரம் நன்றி! ம்ம்ம்ம்ம்...இல்ல இல்ல கோடி நன்றி! (காசா, பணமா) போதுமா, பத்தாதா? அதுக்கு மேலே வேண்டுமென்றால் வெற்றி பெற்றவரை கேளுங்கப்பா....