சிங்கையின் சிறப்பு
தீபாவளியிலும் இருக்கு!
தித்திக்கும் இனிப்பு
தீபாவளியின் களிப்பு!
ஒளிவெல்லம் ஊரெல்லாம்
குட்டி இந்தியாவிலும்
கொட்டிக்கிடக்கிறது!
இந்தியர்களின்
இனிமை பெருமையை
இதுதாங்க எடுத்துகாட்டுது!
முகமெல்லாம்
மலர்ச்சி
அகத்தில் ஆயிரம்
குளிர்ச்சி!
வருடத்திற்கு ஒருமுறை
வந்தால்கூட
இதயத்தில் ஒரு
இதமான இடத்தை
இது வைத்திருக்கிறது!
இந்த விழாக்காலத்தில்
உலாப்போவதும்
விரும்பியதை உண்பதும்
வேடிக்கை பார்பதும்
வேதனைகளை துறப்பதும்
வேண்டியதை வாங்குவதும்
வெளிப்படையாக பேசுவதும்
பளபளப்பாக உடையனியவும்
பகலெல்லாம் சுத்தவும்
ஒளிவெல்லத்தை ரசிக்கவும்
ஒய்யாரமாக நடக்கவும்
பல கதைகள் பேசவும்
பல கடைகள் பார்க்கவும்
உறவினர்களை பார்கவும்
உளமாற பேசவும்
இனிப்பு பல வாங்கவும்
இதமாக இருக்கவும்
சுற்றி சுற்றி வரவும்
சுறுசுறுப்பை பெறவும்
அலங்காரங்களை ரசிக்கவும்
அசந்துபோய் நிற்கவும்
உற்சாகத்துடன் உழைக்கவும்
அச்சாரமாக அமைந்தது
இந்த தித்திக்கும் "தீபாவளி"
இனிதே கொண்டாடுவோம்!
தீபாவளி வாழ்த்துக்கள்!
என்றும்
பிரியமுடன்
பிரேம்குமார்:)
No comments:
Post a Comment