Friday, December 15, 2006

நான் முன்னால போனா 'அது' எனக்கு முன்னால போகும்!







என்ன நண்பர்களே! தலைப்பை பார்த்ததும் தலையை சுற்றுதா, ஆமாங்க...

பொதுவா, நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்...இப்படித்தான் பாட்டு இருக்கு, ஆனா இது பாட்டு இல்லேங்க, என் பாடு எப்படியிருகுன்னு இப்படி சொன்னேன்!

அட., ஆமாங்க நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பாட்டு போட்டியில்ல பாட்டு போட்டு....என்ன போட்டின்னு கேட்குறீங்களா....அதாங்க நம்ம மீடியா கார்ப் ரேடியோக்காரங்க நம்ம ஒலி 96.8 நடத்தும் 100 பாடல்கள் COUNT DOWN நிகழ்ச்சி வருகின்ற 31 தேதி FORT CANNING PARK --ல் நடக்கப்போவுது தெரியுமா, அங்கே அந்த நிகழ்ச்சியில் KARAOKE போட்டி எல்லாம் வச்சிருக்காங்க....

அதனால என்ன, அட அந்த கரோக்கி போட்டியில் பங்கெடுக்கனும்னு ஆசைதான்... டேய், அதுக்கு பாட்டு பாடனும்டா....தெரியுங்க....நானும் நிறையா பாட்டு பாடியிருகேன்! எங்கேடா....எப்போ? வேற எங்கே குளியலறையில்தான்! அங்கே பாடுவதும்போதே வீட்டில் இருப்பவர்கள் ஏசுவார்கள்! இருந்தாலும் பாடி பார்போம் என்ற ஆசை! ஆனால் அந்த போட்டியில் பங்கேறபதற்கு முன்னாடி வருகின்ற 22ம் தேதி ஒலியின் ஒலிபரப்பு நிலையத்தில் நடக்கும் தகுதிச் சுற்றில் கலந்து வெற்றி பெற்றால்தான் போகமுடியும்....

பிரேம்குமார்(ஒலி) கிட்ட போன் செய்து பதிவு செய்தாகிவிட்டது! அப்புறம் என்ன போய் பாடிபாக்கலாம்தேனே.... நீங்க கேட்பது புரிகிறது....இப்பதான் அந்த பாடல் வரிகள் வேலை செய்யப்போகிறது.... என்ன்... என்னவேலை...

ஆமாப்பா...நான் 22 தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆர்வமா இருந்த வேலையில், நேற்று தான் நம்ம MR. இடஞ்சல் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது... ஆமாங்க... அதே தேதி... அதே நேரம்.... 22ம் தேதி மாலை 7 மணிக்கு எங்க அலுவலகத்தின் 2006 ஆண்டிற்கான STAFF ANNUAL DAY PARTY வச்சுட்டானுங்கப்பா... நான் இல்லாம இந்த பார்டியா.... இந்த நிருவனத்தில் இது என்னுடைய முதல் ஆண்டுவேற அதுமட்டுமல்லாமல் எங்க நிருவனத்தின் ஆக சிறியவன், செல்லப்பிள்ளை மாதிரி எல்லோருக்கும்... நான் வரமாட்டேன் என்று சொல்ல முடியாது... பரிசு எல்லாம் கிடைக்கும்....ம்ம்ம்ம்ம்...எப்படி நீங்களே சொல்லுங்க... விட்டுட்டு பாட்டுப் பாட் போகமுடியும்.... என்ன செய்வது ஒரு கதவு திறந்தா இன்னொரு கதவு மூடிவிடுகிறது! ஒரு வருடத்தில் இத்தனை நாட்கள் இருக்கும்போது, இந்த இரு நிகழ்ச்சியும் இப்படி ஒன்னா வந்து என்னை இம்சை செய்கிறது!

இப்ப இந்த பாடல் வரி சரிதானெ.... நாம ஒரு இலக்கை நோக்கி இரயிலில் சென்றால் நம்முடைய mr. இடஞ்சல் நமக்கு முன்னாடி இரயில் எஞ்ஜினில் செல்கிறார். என்ன செய்வது, நமக்கு அந்த வாய்ப்புக்கு வழியில்லாத காரண்த்தால் நம்முடைய இம்சையில்லாமல் நிறையா நல்ல பாடகர்கள் எல்லாம் பாடி நிகழ்ச்சி நல்லாயிருக்கும் என்ற சந்தோஷம் நம்மகிட்ட இருக்கு. அதுபோதும் நமக்கு! வருடம் பிறக்கும்போது நான் வேற ஏன் நிகழ்ச்சிக்கு வருகின்ற ரசிகர்களை தொந்தரவு செய்யனும். அதுதான் ஆண்டவனே பார்த்து அடக்கிவச்சுட்டான் ஆசையை! ஆர்வம் இன்னும் என்னிடம் என்றும்போல.........

6 comments:

Anonymous said...

mmm
பாடாவிட்டாலும் பின்னிருந்து பாடலை ரசிக்க எனக்கும் விருப்பம்தான்.

Syam said...

பாடுங்க பிரேம் பாடுங்க உங்க பாடலை கேட்க ஓடோடி வந்த எங்களை ஏமாத்தி விடாதீங்க :-)

ஜி said...

//அங்கே பாடுவதும்போதே வீட்டில் இருப்பவர்கள் ஏசுவார்கள்!//

உங்களுக்கு தூத்துக்குடி பக்கமோ?

நல்லவேளை, கேக்குறவுங்க தப்பிச்சிட்டாங்க. just kidding :)

ஆமா, இங்கிலிஸ் கார தொர மாதிரி கோட் சட்டல்லாம் போட்டுக்கிட்டு நல்ல சோக்கா போஸ் கொடுத்திருக்கீங்க ப்ரேம் அந்த Right side Photoல...

பிரியமுடன்... said...

வணக்கம் ஜி! வருகைக்கு நன்றி!
நான் தூத்துக்குடியும் அல்ல சாத்துக்குடியும் அல்ல.. இது சிங்கப்பூர் பாஜை! சரி அந்த போட்டோவில் இருப்பவரை நான் என்று நினைத்துவிட்டீர்களா? அவ்வளவு இளமையாவா நான் இருப்பேன்னு நினைக்கிறீங்க! அட அவரு ரொம்ப பெரிய ஆள்... அவரை பற்றி தெரியனுமா... அவர்தான்பா உலகத்தின் 2 வது பணக்காரர் WARREN BUFFET! அவரை பற்றி தெரியனுமா? அதுதான் இருக்கவே இருக்கே google... நன்றி! மீண்டும் வருக!

Anonymous said...

உங்களுக்கு எனது மனமார்ந்த நத்தார்+புதுவருட வாழ்த்துக்கள்..
புதிய வருடம் புதுமைச் செழிப்புடன் உங்களுக்கு வளங்களை அள்ளி வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...

Porkodi (பொற்கொடி) said...

பாடறதுக்கு முன்னாடி காதுல வெச்சுக்க பஞ்சு??? :)