Friday, January 05, 2007

புத்தாண்டில் புது முயற்சி!


என் இனிய தமிழ் மக்களே! இதுவரை ஒரு பயனும் இல்லாத பதிவுகளை போட்டுவந்த இந்த பிரியமுடன் பிரேம்குமார் இப்பொழுது சுத்தமாக ஒரு பயனும் இல்லாத பதிவுகளை போட முடிவெடுத்துள்ளான்!

வணக்கம் மக்களே! நண்பர்களே! உங்களுக்கெல்லாம் புத்தாண்டு எப்படி பூத்துள்ளது? சந்தோஷமா பிறந்திருக்கா? எனக்கு உண்மையிலேயே குதுகலத்துடன் பிறந்ததது....
நான் புத்தாண்டு பிறந்த போது... சிங்கப்பூர் ரேடியோ ஒலி 96.8 நடத்திய கவுண்ட் டவுன் நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்தோடு இருந்தேன்....
ஒரு நாள் முழுவது நடந்த நிகழ்ச்சி அது... அதில் பல்வேறு அங்கங்கள் படைக்கப்பட்டது...
அப்படி அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்த எனக்கு இரவில் படுக்கும்போது ஒரு கற்பனை உதித்தது.... அந்த கற்பனையின் படி ஒரு கதை எழுதலாமே என்று கூட தோன்றியது... நம்ம என்ன பட்டுக்கோட்டை பிரபாகரா அல்லது பாலகுமாரா கிரைம் நாவல் எழுதுவதற்கு... சும்மா நம்ம பிளாக்கில் கப்சா விடலாம் என்று எண்ணியிருகிறேன்....


விரைவில் முடிந்தால் நாளைக்கு நான் அலுவலகம் வந்தால் நாளையே எழுதிவிடுகிறேன்...
அப்படி என்ன இருக்கும் அந்த கதையில் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது
சில கற்பனை, கதை, காமெடி.....அப்புறம் கதைக்கா ஒரு சின்ன காதல் அவ்வளவுதான்
பாட்டு கூட இருக்கும் ஆனா சண்டை இருக்காது! விரைவில்......

3 comments:

Anonymous said...

அப்படியா ப்ரேம்...
தொடருங்கள் பார்ப்போம்... அறிய ஆவல்..
என்கதைபோல் சோகமயமானதாக இருக்காதுதானே...

பிரியமுடன்... said...

கவலை வேண்டாம்! அதில்
கதையே இருக்காது
பிறகு எங்கே
சோகம் இருக்கப்போகிறது!
நம்ம கதையெல்லாம்
சும்மா கற்பனை மட்டும்தான்!
ஏதோ எழுதவேண்டும்
என்பதற்காகத்தான் எழுதவிருக்கிறேன்!
எழுதுவோமா வேண்டாமா என்று கூட
தயக்கமா இருக்கு!
எதிர்பார்பு இல்லை என்றால் எழுதலாம்
எதிர்பார்பு வந்துவிட்டால் நன்றாக
எழுதவேண்டும்... அதுக்கு நம்மகிட்ட
சரக்கு லேது!
எனவே...சும்மா நாலுவரியில் ஒரு
கப்சா விட்டுவிட்டு செல்லாம் என்பது எண்ணம்... சற்று பொறுத்திருங்கள்!
வருகைக்கு நன்றி!

Illa said...

தாய்மொழி தமிழாக இருந்தாலும் நான் யோசித்து யோசித்து எழுதுவேன்.நீங்கள் எப்படி இவ்வளவு எளிதாக இனிமையாக எழுதுகிறீர்க்ள்? நீங்கள் தமிழில் எழுதுவதைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.