Friday, November 07, 2008
வருடா வருடம் வந்தாலும் வயதாகவில்லை உனக்கு!
உலக நாயகனே
உலகில் இன்று நீ
உதித்த நாள்!
உளமாற வாழ்த்துகிறேன்
உன்னை!
வயதில்லை
வாழ்துவதற்கு
அதனால் உன்
அடிபணிந்து
ஆசிர்வாதம் பெறுகிறேன்!
சினிமாவில் நீ ஒரு
சிகரம்!
நடிப்பில் நீ ஒரு
நவரசம்!!
அன்பில் நீ ஒரு
அம்மா!
பாசத்தில் நீ ஒரு
பசு!
அதனால்தான் என்னவோ இந்த வருடம் பிறந்தநாளை இலங்கை தமிழர்களின் துயரத்தை மனதில்கொண்டு கொண்டாடாமல் விட்டுவிட்டாய்! இருந்தாலும் எல்லா உள்ளங்களும் உன் பிறந்தநாளை உள்ளதில் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்! வாழ்த்துக்கள் நாயகரே!
இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து, எல்லோரையும் மகிழ்விக்க ஆண்டவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தந்து ஆசிர்வதிக்கட்டும்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment