வருகின்ற புத்தாண்டு
வளமான புத்தாண்டாக
வரப்போகிறது!
ஆண்டவனின் அருளில்
ஆனந்தமாகவும்
அமைதியாகவும் அமையும்
அடுத்த ஆண்டும்,
அடுத்து அடுத்து வரும்
அனைத்து ஆண்டுகளும்!
வாழ்த்துக்கள் கூறுகிறேன்
வயதில் மூத்தவர்களிடம்
வாழ்த்துக் கோறுகிறேன்!
இனிய புத்தாண்டு
இதோ பிறக்கப் போகிறது!
இணைந்து கொண்டாடுவோம்!
இறைவன் அருளால்
இனிவருவதெல்லாம்
இனியவைகளாகவே
இவ்வுலகத்திற்கு அமையட்டும்!
இருக்கின்ற இன்னல்கள் எல்லாம்
இன்றோடு தொலையட்டும்!
வருகின்ற வருடத்தில்
வசதிகளும் வாய்ப்புகளும்
ஆரோக்கியமும், ஆனந்தமும்
அனைவரது இல்லத்திலும்
அமையட்டும்!
அமைதியும் நிலவட்டும்!
அன்பும், அரவணைப்பும்
என்றும் எல்லோரிடமும்
எல்லையில்லாமல் இருக்கட்டும்!
வாழ்க எல்லோரும் வளமுடன்!!
எல்லாம் வல்ல இறைவன்
எல்லோரின் வாழ்க்கைக்கும்
எல்லாவற்றையும் அருளட்டும்!
வாழ்க...வாழ்க....வாழ்க வளமுடன்!
என்றும்
பிரியமுடன்
பிரேம்குமார் @ குடும்பம்
சிங்கப்பூர்.
4 comments:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பிரேம் :)
உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
HAPPY NEW YEAR!!!!
உங்கள் மனைவி, குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள்..
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Post a Comment