Wednesday, February 11, 2009
காதலே....நிம்மதி!!
காதலர் தினம் வருகிறது!
கவிதையும் வந்திருக்கிறது!
படிப்பதற்கு உங்களுக்கு
ஆர்வம் வரவில்லை என்றால்
அபத்தம் இல்லை!
படித்துவிட்டு
ஆத்திரம் வந்தால்
அதற்கு நான் பொறுப்பில்லை!
இதோ கவிதை.....
சொந்த வேரோடு
தான் கொண்ட காதலை
சொன்னால்தான்
தெரியுமா?
சொன்னால்தான் காதலா?
சொன்னால் காதல்
சுடுகாட்டோடு எரிக்கப்படுகிறது
சொல்லாவிட்டால்
சொர்க்கத்திலும்
சுவைக்கிறது!
இருக்கும்போது
இனிக்கவைக்காத காதல்
இனி சொர்கம்வரை சென்று
என்ன கிழிக்கப்போகிற்து
கேட்பது புரிகிறது!
சொல்லாத காதலுக்கு
சொல்லப்படும் நியதி இது!
எல்லோரையும்போல்
இவனும்!
இதில் சில
சுட்டவரிகளும்
சுவையூட்டப்பட்டிருக்கிறது
இனித்தால் சுவைக்கவும்
இல்லையேல் சும்மா இருக்கவும்!
காதலிக்கிறீங்களா என்றெல்லாம்
கேட்கப்பிடாது!
என் மனைவி காதில் விழுந்தது
எனக்கு காது இருக்காது!!
இருந்தாலும்
காதோடு..காது வைத்ததுபோல
காதல் ஓடிக்கிட்டுதான் இருக்கு!
ஹி...ஹி...ஹி...ஹீ...
உண்மையான காதலுக்கு
உயிரை கொடுக்காதீர்கள்!
வெறொருவன் வந்துவிடுவான்
வாழ்வதற்கு!!
உன்னை கொடு
இல்லையென்றால்
காதலிப்பதை
சொர்கத்தில் தொடரவும்!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பின்னிட்டீங்க மச்சான்.. காதல் கவிதை யாரு எழுதுனாலும் நல்லாவே இருக்கு..
உங்க போட்டோதான் கொஞ்சம் பாக்க பயமா இருக்கு..
மத்தவங்க மெர்சல் ஆகுறதுக்குள்ள நல்ல போட்டோ புடிச்சு போடுங்க..
வணக்கம் பிரியமுடன். உங்கள் புதிய நட்பு நான். உங்கள் கவிதை அற்புதம், அருமை. எப்படி அது....? உண்மையான காதலுக்கு உயிரை கொடுக்காதீர்கள்! வேறொருவன் வந்துவிடுவான் வாழ்வதற்கு!! வறேவாா !!!! பொலந்துட்டீங்க நண்பா... அப்புறம் அடுத்த வரி உன்னை கொடு இல்லையென்றால் காதலிப்பதை சொர்க்கத்தில் தொடரவும்........ தூள், சூப்பர். வாழ்த்துக்கள். உங்கள் கவிதை மேன்மேலும் புதிய வேலைப்பாடுகளுடன் வரும் என்ற எதிர்பார்ப்புடன்
பிரியா.
வணக்கம் பிரியமுடன். உங்கள் கவிதை அருமை, அற்புதம். அந்த கடைசி வரிகள் சூப்பர்.
புதிய நட்பு,
பிரியா.
super...
Post a Comment