Friday, September 08, 2006

பண்னாட்டு நிதி நிறுவன, உலக வங்கி கூட்டங்கள்!


<எங்கள் இடத்தில் விழாக்கோலம்! ஆம், உலக வங்கி, IMF கூட்டங்கள் நடந்தேறி வருகின்றது!
எங்கள் Tower -ஐ சுற்றியும் Steel Barricades கொண்டு அரண் அமைக்கப்பட்டுள்ளது. பார்பதற்கு சற்று அச்சமாகக் கூட இருக்கிறது. ஆனாலும் எந்தவித அசம்பாவிதமும் நம் இடத்தில் நடந்துவிட கூடாது என்ற எண்ணம், நம்மிடையே தைரியத்தை ஊட்டுகிறது.
உண்மையில் சொல்லப்போனால், நம் நாட்டில் இந்த மாநாடு நடப்பது நமக்கெல்லாம் பெருமைதான்!அதுமட்டுமல்ல, அழகான நாடு என்ற பெருமையுடன் சேர்ந்து ஆபத்தில்லா நாடு என்ற பெருமையுடனும், நிம்மதியுடனும் நாம் வாழலாம்!
SUNTEC CITY -ஐ சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் சும்மா பூத்து குலுங்குகிறது. அவ்வளவு அழகு! நான் இங்கிருக்கும் Tower 2 உள்ள ஒரு அலுவலகத்தில் பணி. ஆகவே நான் இங்குள்ள அழகான சூழ்நிலையை தினந்தோரும் ரசிப்பதுபோல நீங்களும் எங்க பகுதிக்கு ஓய்வாக இருக்கும் பொழுது வந்து பார்து செல்லலாமே! ஆனால் மாநாடு நடக்கும் பகுதிக்கு வருவது சிரமம், ஆனால் car or public transports பயன்படுத்தி இந்த பகுதியின் அழகை கண்டுரசித்து செல்லமுடியும்! வண்ண வண்ண பூக்கள் கண்களுக்கு நல்ல விருந்து!

No comments: