Wednesday, September 13, 2006

பிடிச்சிருக்கு! சூர்யா உன்னை பிடிச்சிருக்கு!


இரு மனம் மட்டும்
இணைந்திருந்தது
இதுவரை!
இன்று இருவருமே
இணைந்துவிட்டோம்
இனிய திருமணத்தில்!
இனிவரும் காலத்தில்
இணைந்திருப்போம்
இருவரது உடலில்
இருப்பது ஓர் உயிராக!

சூர்யா!
சூரியன் இருக்கும்வரை
சூப்பராக வாழ்வாய்!
ஜோவுடன்
ஜோடி சேர்ந்து
ஜோராக வாழவேண்டும்!

நாம் இருவரும்
நல்லபடி வாழ்ந்து
நக்கல் செய்தவர்கள்
நாக்கை
நறுக்கவேண்டும்!

சினிமா நடிகர்கள்
சிதறிப்போவார்கள் என்ற
சிந்தனையைச்
சிதறடிக்கவேண்டும் -நம்
சிறந்த வாழ்க்கையால்!
சிந்தித்து செயல்படிவோம்
சிறப்பாக வாழ்ந்திடுவோம்!
வந்திருந்தோர்
வாழ்த்தியபடி
வம்பு சண்டையில்லாமல்
வாழ்ந்திடுவோம்
வையகம் உள்ளவரை!

சூர்யா!
என்னையே உனக்கு
எடுத்து கொடுத்துவிட்டேன்,
என் பசுமையான
எண்ணங்களில்
பாலை வார்க வா
பாசமானவனே!

பிரியமானவர்கள்
வாழ்தும் நேரத்தில்
பிரியமுடன் என்னை
பிடித்துக்கொள்
பிரியாமல் வாழ்ந்திடுவோம்!

ஆண்டவன் நமக்கு
அருள் புரியட்டும்
அனைத்து வரமும்
அமையட்டும்!
அமைதி நம்வாழ்வில்
அடித்தளம்
அமைக்கட்டும்!

No comments: