Thursday, May 08, 2008

குண்டக்க மண்டக்க விருந்து!

வணக்கம் நண்பர்களே.... நீண்ட நாட்களுக்கு பிறகு பிரேம் எதையோ பெரிய விஷயத்தை எழுத வந்துவிட்டதாக் நீங்கள் நினைதால் அது உங்கள் பெருந்தன்மை, ஆனால் இங்கே ஓன்னும் இல்லை, சும்மா ஒரு சின்ன குட்டி கதை, அட நடந்த சம்பவம்தான்! நமக்கு நடக்கும் சிறு சிறு சம்பவங்களை எழுதுவதற்குதானே இந்த பிலாக்ஸ்பாட் வைத்திருக்கிறோம்! வந்து படிப்பவர்கள் தலைவிதியெல்லாம் பற்றி கவலைப்படக்கூடாது, நாம கூப்பிட்டோமா.....அவர்களாக வருகிறார்கள் படிக்கிறார்கள், பிடிக்கவில்லையென்றால் யார் என்ன செய்வது! ஹ...ஹ.... கோச்சுகாதீங்க நண்பர்களே....உங்களிடம் இப்படி உதார் விடாம, வேற யாரிடம் கலாய்ப்பது! ஓகேவா கதைக்கு போவோமா.....

ம்ம்ம்ம்...சரி....எல்லோரும் கல்லை கீழே போடுங்க அப்பதான் கதை சொல்வேன்! நல்ல பிள்ளைங்க சரியா....

ஒரு ஊர்ல...கமலா..கமலான்னு இரண்டு....சாரி ஒரு வானொலி படைப்பாளர் இருந்தாங்கலாம், அவுங்க எப்ப பார்தாலும் தன்னுடைய படைப்பு அங்கத்தின் ஒரு பகுதியாக, குண்டக்க மண்டக்க என்ற ஒரு அங்கத்தை வைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பார்கள், நாங்களும் அடித்து பிடித்து கொண்டு, அலுவலகத்தில் யாருக்கும் தெரியாம திருட்டு தனமா உட்கார்ந்து யோசித்து பதில் சொல்வோம்!

அன்று வழக்கம்போல் அவர்களுடைய குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்பட்டது, ஆனால் ஒரு போட்டி அங்கமும் இருந்தது, ஆதாவது முதலில் அந்த கேள்விக்கு பதில் அளிப்பவருக்கு 50 டாலர் பற்றுச்சீட்டு பரிசு!

பொதுவாகவே அந்த அங்கத்திற்கு சரியான பதில் அனுப்பும் ஒருசிலர்களில் நானும் ஒருவன் என்று சொல்லாம், சொல்லமலும் இருக்கலாம்! அந்தவகையில் அன்று நாந்தான் முதலில் அனுப்பியதாக அந்த படைப்பாளர் அறிவித்தார், இதில் என்ன கொடுமை என்றால் முதலில் அனுப்பியவர்களிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுவது வழக்கம், நம்ம அதிஷ்டம்....அப்படி ஒன்றும் நடக்கவில்லை! பிறகு குறுஞ்செய்தி மூலம் என்னுடைய தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார்!

இந்த கூத்தை ரேடியோவில் கேட்டுகொண்டிருந்த என் நண்பர்களில் ஒருவர் உடனேயே மற்ற 3 நெருங்கிய நண்பர்களிடமும் தகவலை தெரிவித்துவிட்டார்< எப்படி தெரியுமா>>> ஒலியில் பிரேமுக்கு 50 வெள்ளி கிடைத்திருக்கு என்று சொல்லிவிட்டார்!

என்ன நடந்தது!!! அடுத்த நாள் மாலை ஆப்பு காத்திருந்தது, என் கெரகம்...அன்று மாலை அந்த நண்பர்களில் 3 பேர் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருந்தனர், அலுவலகம் முடிந்து அங்கே சென்றேன்....வழக்கத்துக்கு மாறா இருந்தது அவர்களுடைய வரவேற்பு! வரவேற்பு என்று நினைத்து நானும் ஏமாத்து போய்விட்டேன்...அது வரவேற்பு இல்லை ஆப்பு என்று அப்புறம்தான் தெரிந்தது!

டேய்..பிரேம்! கமலா உனக்கு 50 டாலர் கொடுத்ததாமே! வாங்கிட்டாயா....சரி, நீ வாங்கு வாங்காமல் போய். முதலில் இதற்கு பார்டி வைத்துவிட்டு போ! என்று பிடித்த பிடியில் நின்றுவிட்டார்கள்! அன்பாய் வேறு கேட்டுவிட்டதால், நானும் கொஞ்சமும் யோசிக்காமல் இதுக்கு என்ன இருக்கு, உங்களுக்கு இல்லாத பார்டியா வாங்க எல்லோரும் என்று சொல்லி கடல் உணவகம் சென்றுவிட்டோம்!

வழக்கம்போல் சாப்பிடாமல் சற்று குறைவாகவே பாவிகள் சாப்பிட்டார்கள்....சாரி நண்பர்கள் சாப்பிட்டார்கள்! இதில் பீர் வேற ஊத்திகிட்டார்கள்! நான் ஒரே ஒரு பிரைட் ரைஸ், ஒரு வாட்டர் மெலன் சூஸ்! கொஞ்சம் பெப்பர் சிக்கன் அவ்வளவுதான், மற்றவைகள் அனைத்தையும் அன்பு நண்பர்கள்தான் கட்டினார்கள்!

கடைசியில் பில் வரும்ல...பின்ன வராதா...அதெல்லாம் வரும்! மன்னிக்கனும் நீங்க நினைப்பது புரிகிறது, அந்த கடையில் மாவாட்ட முடியாது, வேண்டுமென்றால் இறாலுக்கு தோல் உரிக்கலாம்! 76 டாலர் பில்! பெரிய தொகை இல்லைதான், இருந்தாலும் இந்த பார்ட்டி எதுக்கு என்று பார்த்தால்தான் உங்களுக்கு இது பெரிசா இல்லையா என்று புரியும்!

வெறும் 50 டாலர் பற்றுச்சீட்டு வாங்கியதற்கு பார்டி 76 டாலருக்கு! இப்ப சொல்லுங்க இது பெரிசா இல்லையா! இல்லங்க எனக்கு பெரிசா தெரியல...என் நண்பர்களுடன் உட்காந்து ஒன்னா சாப்பிடும் பாக்கியத்திற்கு என்னால் இயன்ற எவ்வளவு வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருந்ததால்தான் அந்த பார்டி!

சரி...பற்றுச்சீட்டு வாங்கியாச்சா....நீங்க கேட்பது கேட்கிறது, யாருக்கு தெரியும். அட...எதுக்கு அந்த பற்றுச்சீட்டு, எங்கே போய் வாங்குவது என்று கூட எனக்கு இன்றுவரை தெரியாது! இந்த 50 டாலருக்காக மீண்டும் அந்த வானொலி படைப்பாளர் அக்காவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை!

என்னைப் பொறுத்தவரை எனக்கு வானொலியில் பரிசு கிடைத்தது என் நண்பர்களுக்கு மகிழ்ச்சி, என் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தது எனக்கு மகிழ்ச்சி அது போதும்! நன்றி

Wednesday, April 30, 2008

உழைப்பின் வாரா உயர்வும் உண்டோ!





உழைத்து உழைத்து
உலகத்தை
உறுதியாக்கிவிட்டு
களைத்துப்போய்விட்ட
காளையர், கன்னியர்களுக்கு
இன்று ஒருநாள்
இன்பத்தையும் ஓய்வையும்
இனிதே தரட்டும்!

எல்லோருக்கும்
ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து
டயர்ட் ஆகியவர்களை தவிர
எல்லோருக்கும்
என்னுடைய
உளம் கனிந்த
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!

உழைப்பு உழைப்பு என்று
உரைக்கும் போதுதான்
உழைக்க ஆர்வமாயிருக்கிறது
ஆனால் இன்று விடுமுறை....ஹ..ஹா..ஹா...
வாழ்த்துக்கள்!

Friday, April 18, 2008

படிங்க....முடிஞ்சா சிரிங்க!

கவிதைகளுக்கு மத்தியில் சில கடிகளையும் அவ்வப்போது தந்தால்தான் இங்கே வந்துபோகிறவர்கள் நொந்துபோக ஏதுவாக இருக்கும்! வந்தாச்சுல்ல...அப்புறம் என்ன முழுசா படிச்சுட வேண்டியதுதானே! வேற வழியேயில்லை.....


சரி..என்ன நடந்தது, இப்ப சொல்லப்போகிற கடி, உண்மையிலேயே நடந்ததுப்பா! கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் என்னுடைய நண்பர்களில் ஒருவர் செங்காங் பகுதியில் வீடு வாங்கி குடிபுகுந்தார், குடிநுழையும் விழாவிற்கு (House warming) என்னையும் அழைத்திருந்தார். நெருங்கிய நண்பர் என்பதால் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓய்வுதான், பகலில் நல்ல ஓய்வுஎடுத்துவிட்டு மாலையில் அங்கே செல்ல முடிவெடுத்திருந்தேன்!

அன்று, மாலை நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகும் வேலையில், என்ன வாங்கிச் செல்லவது, திடீர் குழப்பம், நானும் மாற்றி மாற்றி யோசித்தேன் ஒன்றும் மனதில் தெளிவாக தெரியவில்லை! விலை மதிப்புமிக்க பொருள் வாங்கவேண்டிய அளவிற்கு அவசியமில்லை என்றிருந்தபோதும், சரி...என்னதான் வாங்குவது......குழப்பத்துடன் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்றேன். வழக்கம்போல என்னுடைய நண்பர்களை சந்தித்தேன். அவர்களிடம் நிகழ்ச்சிக்கு செல்லவேண்டியது பற்றி கூறினேன். அவர்களும் ஆளுக்கு ஒரு ஐடியா தந்தார்கள். ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை.

கடைசியில் நானே முடிவெடுத்து, அவர்களிடம் கூறினேன்! என்ன கூறினேன்....இப்படியே கடையோரமாக செல்கிறேன் வழியில் என்ன என் மனதுக்கு பிடிக்கிறதோ அதை வாங்கி கொண்டுபோகிறேன் என்று சொன்னேன். முக்கிய விஷயம் என்னவென்றால் அதோடு நான் நிறுத்தவில்லை....அப்படி சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு நண்பரிடம்..... சரி....நான் ஒருபொருளை வாங்கி சென்றால் , அதே போன்ற பொருள் ஏறகனவே அவர்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வது அண்ணே! என்று என் நண்பரிடம் கேட்க.......
அவர், கொஞ்சமும் தயங்காமல்.....நீ வாங்கிகொண்டு போகும் பொருள் மாதிரி அங்கே பயன்பாட்டில் இருந்தால், நீ வாங்கிகொண்டு போகும் புது பொருளை கொடுத்துவிட்டு அங்கே ஏற்கனவே இருக்கும் அதை எடுத்துகொண்டு வந்துவிடு.....என்று cool ஆக பதில் சொன்னதுதான் மிச்சம்....அங்கிருந்த அனைவரின் சிரிப்பையும் அடக்க அரைமணி நேரம் ஆகிவிட்டது...அட நாந்தான் எப்பவும் அவர்களை மணி கணக்கில் சிரிக்கவைத்துகொண்டே இருப்பேன்...ஆனால் அன்று அவர் அடித்த ஜோக்கை...இன்று நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.....உங்களுக்கு எப்படி? சிரிப்பு வரவில்லையா?! அட இன்னும் நான் ஜோக்கே சொல்லவில்லையே......இது எப்படி இருக்கு!!!

Thursday, April 10, 2008

என்ன எழுதுவது என்று யோசித்தபோது...

காலத்தின்
நொடி,
நொடிப்பொழுதில்
நிமிடமாகி
மணியாகி
நாளாகி நாளாகி
மாதமாகி
மாதம் பலவாகி
வருடமாகி
வருடம் பலவாகி!

எத்தனை
வருடங்களாகியும்
என் இதயம்
எங்கிருக்கிறதோ
என்றும் அங்கேயே!
இதயத்திற்கு
இடமாற்றம் என்றும்
இருந்ததில்லை!
இதயத்திற்குள்ளும்
இடமாற்றம்
இருந்துவிட்டால்
இறந்துவிடுமே
இதயம்
என்று தெரிந்து
என் இதயத்தை
என்றோ உன்னிடம்!


என்ன நண்பர்களே...கவிதையை படித்தீர்களா? கவிதை எங்கிருக்கு என்று கேட்ககூடாது, என் பிலாக் வந்துட்டா நான் சொல்கிற பொய் எல்லாவற்றையும் கேட்டுகனும் சரியா! அது! அப்புறம் என் கவிதை படித்துவிட்டு.....கரகாட்டக்காரனில் செந்தில் கவுண்டரிடம் கேட்பதுபோன்று, இதயத்தை வச்சிருந்த உடம்பு இங்கிருக்கு.....இப்ப இதயதை யாரு வச்சிருக்கா என்றெல்லாம் கேட்க பிடாது ஓகேவா!!! யார்..யாரு காரை....சாரி இதயத்தை எங்கே வச்சிருக்காங்க என்று கணக்கெடுப்பதா என்வேலை...படிச்சாச்சுதானே...அப்புறம் என்ன! என்ன பார்ட்டி வைக்கனுமா? எதுக்கு? படிச்சதுக்கா?!! எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!

Wednesday, April 02, 2008

கவிதை கவிதையா....வருதுப்பா!!!

மறுபடியும்
வரவேண்டும்
வரம் வேண்டும்!
கரம் வேண்டும்
தர வேண்டும்!
மனதிற்கு,
உரம் வேண்டும்
உடன் வேண்டும்!
மதிமயக்கும்,
சுரம் வேண்டும்
சரமா வேண்டும்!
குரல் வேண்டும்!


எனக்கு
சம்மந்தமில்லா
என் வரிகள்
என்னை இங்கே
சந்தோஷப் படுத்தி...
எனக்கு
சம்மந்தப்பட்ட
என் வலிகள்
என்றுமே என்னை
சங்கடப்படுத்தியே....


நான்
பிடித்த பேனா
எனக்கு
பிடித்த வரிகளை
எழுதித் தந்தது!
என்னை
பிடிக்காதவருக்கு
எழுதுகிறேன்
என்று தெரிந்தும்!

ஆஹா..ஆஹா...கவிஞன் ஆகிட்டேனோ?!
ஏதோ வந்தா இதெல்லாம் வருமாமே!
எனக்கென்னவோ இதெல்லாம் வருகிறது ஆனா
அது வந்தமாதிரி தெரியலையே!!

என்னது அதுவல்லையா,
ஏழு கழுதை வயசாச்சு அது வரலையா...ஆசையப்பாரு....எடு செருப்ப...

Monday, February 04, 2008

இது என்ன மாயம்! எதுவரை போகும்!

உயிரை
விலகச் சொல்ல
உடலுக்கு
உரிமையில்லை!
உரிமையில்லா
உடலில்
உயிர் இருந்தும்
உறவுமில்லை!

தூரத்தில் சென்றுவிட்டால்
துயரம்
தூரமாகிவிடாது!
துயரத்தின் வேகம்
தூரயிருந்தால்
தூரமாயிருக்கும்!

என்ன எழுதியிருக்கிறேன்
எனக்கே புரியவில்லை!
இப்படி
எழுதிவிட்டால்
இது கவிதை என்று
எவன் சொன்னது!
நீங்க யாரும் சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நன்றி! நன்றி! நன்றி! அட அடிக்கடி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பார்கிறோம்ல....

Monday, January 28, 2008

மீண்டும் மலாக்கா!



அன்புள்ள அன்பர்களே....நண்பர்களே! வம்பர்களே! அனைவருக்கும் என் வணக்கம்! தலைப்பு பார்ததும் புரிந்திருக்குமே! ஆமாம்...ஆமாம்! ரொம்ப சரியா கண்டுபிடிச்சுட்டீங்க!

வெள்ளிக்கிழமை இரவு, என்னுடைய நெருக்கமான நண்பர்களில் ஒருவர் என்னை அழைத்து, என்ன பிரேம், வார இறுதியில் என்ன புரோக்கிராம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க, நானும் சற்று அவசரப்பட்டு வழக்கம்போல உண்மையைச் சொன்னேன்! அட ஒன்னும் வேலை இல்லை இரண்டு நாட்களுக்கும் நல்லா சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்தவாறு வீட்டில் தூங்க வேண்டியதுதான் என்றேன்! இதுதான் தக்க தருணம் என்று நினைத்த என் நண்பர், ஒரு போடு போட்டார், நாளை காலை மலாக்கா வரைக்கும் போய்விட்டு வரலாம் வருகிறீர்களா, என்னுடைய தங்கைக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்று அவருடைய கணவர் இப்போதுதான் போன் செய்தார். எனக்கும் மனசு சரியில்லை, ஒரு எட்டு போய்விட்டு வரலாம் என்று நினைக்கிறேன், எனவே நீங்களும் ஓய்வாதான் இருக்கீங்க வாங்கலேன் அப்படியே ஜாலியா இரு பயணம் போய்விட்டு வரலாம் என்று அழைக்க....

எனக்கு வார இறுதியில் வீட்டில் அமர்ந்து வெட்டி பொழுது போக்குவதைவிட நானும் கூட அந்த அன்புச் சகோதரியை கண்டு நேரில் நலம் விசாரித்துவிட்டு வரலாமே என்ற நோக்கத்தில் ஓகே சொல்லிவிட்டேன்!

திட்டபடி, சனிக்கிழமை காலை லிட்டில் இந்தியா தொகுதியில் இருவரும் பசியாறிவிட்டு அப்படியே மலேசியாவுக்கு பேருந்தில் புறப்பட்டு இருநாட்டு எல்லைகளையும் கடந்து மலாக்கா சென்றடைந்தோம்! மதியம் அருமையான சாப்பாடு தங்கை சமைத்திருந்தார், உடல் நிலை தேரியிருந்தது அவருடைய நல்ல சமையலில் தெரிந்தது! சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல தூக்கம், பொதுவாக பகலில் தூங்குவதில்லை நீண்ட நாட்களுக்குபிறகு ஒரு குட்டி பகல் தூக்கம்!

மாலை எழுந்து அப்படியே ஷாப்பிங்க் சென்றோம்! ஷஸ்கோ என்ற நிருவணம் வீட்டுக்கு அருகில் இருந்தது அதில் ஒரு சுத்து...பெருசா ஒன்னும் வாங்கவில்லை! அதற்கு பிறகு அங்கிருந்து நீண்ட தொலைவில் இருந்த ஒரு உணவகத்திற்கு இரவு உணவுக்காக அழைத்துச் சென்றார்கள்! " பாக் புத்ரா " அந்த உணவகத்தின் பெயர்...தந்தூரி உணவகம்! சுவையான உணவு, ரொம்பவே நல்லாயிருந்தது! ஒரு கட்டு கட்டிவிட்டு வீடு திரும்பினோம்! இப்படியாக இரண்டு தினங்கள் ஓடிவிட்டது, ஞாயிறு மாலை கிளம்பி சிங்கப்பூர் வந்துவிட்டோம்!

மலேசியா எனக்கு மிகவும் பிடித்த நாடு அதிலும் மலாக்கா செல்வதென்றால் ரொம்பவும் பிடித்திருக்கிறது! இப்ப மலாக்கா போன விஷயத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் கூட என்னை நக்கல் செய்தார்கள்....ஏய்..ஏய்....அங்கே நண்பரின் தங்கை மட்டும்தான் இருக்காங்கலா....அல்லது ஏதாவது மச்சினிச்சி யாராவது இருக்காங்களா? என்று கலாய்த்தார்கள்! நான் அப்படியாபட்ட ஆள் இல்லை என்று அவர்களுக்கு தெரியும், இருந்தாலும் நண்பர்கள் ஒருவரையொருவர் கலாய்ப்பது ஜாலிதானே! ஆமாம்...நீங்க இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க??!!!!! என்ன? கதை படிக்கிறீங்களா? ஏங்க எனக்குதான் பொழுதுபோகவில்லை சும்மா இதை எழுதினேன்....உங்களுக்கு இருக்கிற ஆயிரம் வேலையில இதையெல்லாம் போய் படித்துகிட்டு அய்யே....போங்க...போங்க..போய் உறுப்படியா யாராவது எழுதியிருப்பாங்க அத படிச்சு அறிவாளி ஆகுங்கப்பா...என்னுடைய பதிவை படிச்சா, கடுப்புதான் ஆவீங்க! இருந்தாலும் ஒரு பெரிய நன்றி! வந்ததுக்கும் படித்ததுக்கும்! மீண்டும் சந்திப்போம்!

Wednesday, January 23, 2008

வரம் வேண்டா தவம்!


தலைப்பே தடுமாற்றமாக இருக்கா? இருக்காதா பின்னே! தவமே வரம் வேண்டிதானே இதில் என்ன வரம் வேண்டா தவம்! அட ஒன்னுமில்லீங்க, சும்மா ஒரு மாற்றத்திற்காக மாற்றி எழுதினேன்! ஆனால் இதன் மூலம் ஒன்று சொல்ல நினைக்கிறேன், அதுதான் தலைப்பில் சிறு குழப்பம்!

வரம் வேண்டி தவமிருந்து, கிடைத்ததைக்கொண்டு தான் நலமுடனும், மகிழ்வுடனும், புகழுடனும் வாழ்வதற்கு ஆசை கொண்டு தவமிருப்பது எனக்கு என்னவோ உடன்பாடில்லா செய்தியாக தோன்றுகிறது! எனவே எதுவுமே வேண்டாம் ஆளை சும்மா விட்டால் போதும் ஆண்டவா! கொஞ்ச காலம் வாழ்வில் அமைதியாக வாழ்ந்துவிடுகிறேனே! நீயாக பார்த்து என் தலையில் என்ன எழுதியிருக்கியோ அதன் படி எல்லாம் நடக்கட்டும், என்னுடைய தவத்திற்காக நீ எதையாவது கொடுத்து என்னை அசாதரண மனிதன் அந்தஸ்துக்கு உயர்த்திவிட வேண்டாம் என்பதுபோல சொல்வதற்காக இந்த தலைப்பு!

கொஞ்ச காலம் இரு கண்களையும் மூடி....இதயத்திற்குள் அடங்கி கிடக்கும் ஆயிரம் ஆயிரம் ஆசைகளையும், பாசங்களையும், அவைகளையும், இவைகளையும் மூட்டை கட்டிவிட்டு, அப்படியே அமைதியாக நம்ம புத்தர்போல இருந்தால், நம்முடைய மனதிற்கு ஒரு அமைதி கிடைக்குதோ இல்லையோ....நம்முடைய தொந்தரவு இல்லாமல் மற்ற ஜீவன்களாவது நிம்மதியாக இருக்கும் இல்லையா...எனவே மக்களே! உங்களுக்கென்று எழுதப்பட்ட வேலைகளையும், கடமைகளையும் மட்டும் கவனித்துக்கொண்டு, மற்ற விஷயங்களில் புத்தராக இருந்து, அடுத்தவர்களை சுதந்திரமாக சிந்திக்க வழி விடுங்கள்!

என்ன கதை சொல்கிற மாதிரி இருக்கா....அட...என்னவோ ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஏதோ எழுதியிருக்கிறேன்! மன்னிக்கவும், முடிந்தால் ஒருநாள் புத்தராக அமைதியாக இருக்க முற்படுங்கள்! அதில் யாருக்காவது நல்ல பிறக்கும்! என்ன முடியுமா? சற்று சிரமம்தான்! நாலு பேறு நல்ல்லாயிருக்கவேண்டும் என்றால் நீ சும்மா இருந்தாலே போதும்! இது கமல் சொல்லவில்லை.....நான் சொன்னது! ஹி...ஹி....ஹி....என்ன பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கா....பின்ன....பைத்தியக்காரன் பிலாக்குக்கு வந்துட்டு தெளிவா வெளியாக முடியுமா என்ன?!!!!!!

Thursday, January 17, 2008

பொங்கல்....சும்மா...பொங்குதுல்ல...




என்ன இனிய தமிழ் மக்களே! பொங்கல் வந்துட்டா....பொங்கல் என்றதுமே, மனதில் ஒரு மகிழ்ச்சி பொங்குவது என்னவோ உண்மைதான்! தமிழர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒர் விழா என்றால் மிகையாகாது!

தமிழர்களுக்கும், தமிழர்களுக்கு அவர்களது உழவு தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் நல்ல மக்களுக்கும், நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Friday, December 28, 2007

அடட....ட...ட...டா....2008 வந்துட்டாங்கய்யா....



வருடா வருடம் பிறக்கும்
இப்பூவுலகின் புதியக் குழந்தை!
இதோ பிறக்கிறது!
இந்த குழந்தைக்கு
பெயர் சூட்டுவிழா வரும்
01.01.2008 ல் உலகம் முழுவதும் நடைபெறுகிறது!
என்ன பெயர் தெரியுமா!
இனிய 2008!!!!!
என்ன பெயர் நல்லாயிருக்கா?
பெயர் நல்லாயிருக்கோ இல்லையோ தெரியாது,
2008 நல்லாயிருக்க வேண்டும்!
ஒரு கெட்ட செய்திகூட இப்புவிக்கு வரகூடாது என்று
ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்!

எல்லோருடைய வாழ்விலும், இந்த 2008 ஒரு மறக்கமுடியாத
இனிய, வளமான, நிறைவான நிகழ்வுகளை நிகழ்த்த
நித்தமும் ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்!

என் இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இனிக்கட்டும் இனி எல்லோருடைய வாழ்வும்!
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

இனிய 2008 க்கு என் அன்பு முத்தங்கள்!

Friday, November 23, 2007

வந்தாஜி.....வந்தாச்சு.....வாங்க எல்லோரும்!

போக்கிரி: ஹாய்...ஹாய்....ஹாய் சரகணன்! எப்படி இருக்கீங்க!
சாகா : ஹாலோ...நான் ரொம்ப நல்லாயிருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க!
போ : நான் நலம் சரகணன்! ஆமாம், படம் போட்டாச்சா!?
சாகா : என்ன...படமா?! என்ன படம் போட்டாச்சான்னு கேட்குறீங்க?
போ : சரி...சரி...கலாய்காதீங்க சரகணன்! ஒரு டிக்கட் கொடுங்க பிளிஸ்!
சாகா : டிக்கட் தருகிறேன். ஆனால் ஏதோ படம், கிடம்னு சொன்னீங்க...
போ : ஆமாம், சரன்! இங்கே சிவாஜி படம் இலவசமா காட்டுறீங்கன்னு என்னுடைய நண்பர்கள் சொன்னாங்க, அதுதான் அவசரம் அவசரமா என்னுடைய பாஸ் காடியை எடுத்துகிட்டு ஓடிவந்தேன்! விளையாடம டிக்கட் கொடுங்க சாகா!
சாகா : ஹலோ..ஹலோ...என்ன காமடி செய்றீங்களா...இங்கே சிவாஜிக்கு டிக்கட் கொடுக்குறாங்கன்னு யாரோ உங்களை ஏமாத்தியிருக்காங்க அத மொதல்ல தெரிஞ்சுக்குங்க பிளிஸ்!
போ : ஆமாவா...என்னலா...என்னையவே ஏமாத்திபுட்டானுங்க படுபாவி பசங்க! சரி...சாகா..இங்கே என்ன டிக்கட் கொடுக்கிறீங்க!
சாகா : ம்ம்ம்ம்...அப்படி கேளுங்க...இங்கே ஒலிமயம் நடந்தும் தீபாவளி நிகழ்ச்சிக்குதான் டிக்கட் வித்துகிட்டு இருக்கோம்!
போ : ஹ...ஹா...ஹா...ஹா... என்ன கொடுமை சரகணன் இது! சும்மா ஒரு பீலா..விட்டுபாத்தேன்...உடனே நம்பிட்டீங்களே! தெரியும் சாகா, தெரிந்துதான் வந்திருக்கேன், இன்னைக்கு கொஞ்சம் அலுவலகத்தில் வேலையிருந்தது அதுதான் கொஞ்சம் தாமதமா வந்திருக்கேன்! பாஸ் வேற ஊரில் இல்லை, அதனால் வேலை அதிகமாயிருந்தது! அதுதான் கடைசி நேரத்தில் வந்துள்ளேன்...சரி...எனக்கு 3 டிக்கட் கொடுங்க!
சாகா : பாத்தீங்களா...கொஞ்ச நேரம் எனக்கே அல்வா கொடுத்தீட்டீங்க...சரி பேரு சொல்லுங்க!
போ : சரகணன்!
சாகா : அட...உங்க பேரும் இதுதானா!
போ : அட நீங்க வேற...இது என்னுடைய பேருன்னு யாரு சொன்னது, நான் இவ்வளவு நேரம் பேசியதால் உங்க பேறே உங்களுக்கு மறந்து என்கிட்ட கேட்கிறீங்கன்னு நெனச்சு உங்க பேறே உங்ககிட்ட சொன்னேன்!
சாகா : அய்யோ கடிக்காதீங்க...நேரம் ஆகிவிட்டது, கெளம்பவேண்டும், சரி, உங்க பேர் சொல்லுங்க பிளிஸ்!
போ : சாரி சரகணன்! நீண்ட நேரமா இங்கேயே அமர்ந்து சோர்வடைந்திருப்பீங்க என்றுதான் ஒரு நகைச்சுவையா இருப்பதற்காக குண்டக்க மண்டக்க பேசுகிறேன்! மன்னிக்கவும்!
சாகா : சரி..பரவாயில்லை...பேர் சொல்லுங்க, எத்தனை டிக்கட் பதிவு செய்திருத்தீங்க?
போ : போக்கிரி! பதிவு செய்தது எனக்கு, என் தங்கை மற்றும் அவரது கண்வர் ஆக 3 டிக்கட்
சாகா : இதோ இருக்கு டிக்கட் தொகையை கொடுங்க பிளிஸ்!
போ : சரகணன்! டிக்கட் நான் கிளியர் செய்வதற்கு முன்னுக்கு நீங்க ஒரு விஷயத்தை எனக்கு கிளியர் செய்யமுடியுமா?
சாகா : ஆ...ஆகா...ஆரம்பிச்சுடீங்களா....என்ன சார் வேண்டும் உங்களுக்கு கேளுங்க சார், வீட்டுக்கு போக விடமாட்டீங்க போலயிருக்கே!
போ : சாரி...சரகணன்! இந்த நிகழ்ச்சி பத்திதான் கேட்கணும்! கோச்சுகாதீங்க சரகணன்!
ஆமாம்...உங்களுக்கு, சித்ரா, சிரேயா கோஷல், மதுமிதா, ஹரிணி, சாலினி இவுங்கல்லாம் யாருன்னு தெரியுமா?
சாகா : ஓ...இவுங்க எல்லாம் பாடகிகள் சரிதானே!
போ : ஆமாம் சாகா! முன்னணி பின்னணி பாடகிகள், இவுங்க எல்லாம் முன்னணி பாடகிகளாக வருவதற்கு பின்னணியில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பாங்கன்னு உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, ஆனா... நிறைய பாடல்களை பாடி கஷ்டபட்டுதான் வந்திருக்காங்ன்னு எல்லோருக்கும் தெரியும்தானே!
சாகா : ஆமாம்...அதுக்கு இப்ப என்ன சார்!
போ : இருங்க சொல்கிறேன்....இப்படி பின்னணியில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடித்தான் அந்த பாடகிகள் பிரபலமாகியிருக்காங்க...ஆனா இந்த சிங்கப்பூரில...இரண்டு பாடகிகள் இருக்காங்கப்பா...அதுவும் இரண்டே இரண்டு வரிகள்தான்....பாடுறாங்க....இரண்டு வரிகள் பாடியே...டோட்டல் சிங்கப்பூரையுமே சிரிக்க வைத்து பெரிய புகழ் பெற்றுவிட்டார்களே.. பேய் புடிச்சு..... ஆடுதம்ம்மா.......ம்ம்ம்ம்ம் ராத்திரியில் இந்த பாட்டை நினைத்தால் பயமாயிருக்கு தூக்கம் வரமாட்டேங்குது! எப்படி சார் ஒரு பேய் கூட குடும்பம் நடத்துவது! அப்படின்னு நான் கவலை படவில்லை...வந்தாஜி கவலைப் படுகிறார்!
சாகா : ஹ..ஹ...சரி ..சரி...இதுக்கு என்னால ஒன்னும் சொல்லமுடியாது, நீங்க நிகழ்ச்சிக்கு வந்து பாருங்க பிறகு எல்லாமே புரியும்! இந்தாங்க டிக்கட் புடிங்க ஆள விடுங்கப்பா...எஸ்கேப்!
போ : ஓகே சாகா...நிகழ்ச்சி நல்லபடியா நடக்க ஆண்டவன் உங்க எல்லோருக்கும் நல்ல உடல், உள்ள ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். நிகழ்ச்சியில் சந்திப்போம்! குட் நைட்! ஆல் த பெஸ்ட்!

Tuesday, November 13, 2007

Wednesday, November 07, 2007

தித்திக்கட்டும் இந்த தீபாவளி!


என் வரைப்பூவின் வாசம் தேடி வந்த வாசகர்களே! தமிழ்தாயின் மக்களே! உங்கள் அனைவருக்கும் இந்த பிரியமுடன் பிரேம்குமாரின் பிரியமான.....தித்திக்கும் தீப ஒளி பெருநாள் வாழ்த்துக்கள்! ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் விரைவில் நல்லொளி பிறக்கட்டும்! நல்வாழ்வு கிட்டட்டும்! நலம் பல கிடைக்கட்டும்! வாழ்வில் நிம்மதி தொடரட்டும்!
இந்த தீபாவளி எல்லையில்லா இன்பத்தை எல்லோருக்கும் இறைவன் தந்து அருளட்டும்! உலகம் அமைதியாக இருக்கட்டும்! வாழ்க மக்கள்! பெருகுக மக்களிடம் இன்பம்! தீபாவளி வாழ்த்துக்கள்!

எல்லோரின் மனதிலும் நிம்மதி நிலைக்கட்டும்!

Wednesday, October 24, 2007

இதயத்தை இதமாக்கும் இவர்களுக்கு வாழ்த்துக்கள்!

எல்லா புகழும் இவர்களுக்கு கிடைக்க என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



உள்ளூர் வானொலியில் தேனொலி கேட்க காரணமான ஒலி விமலாவுக்கும், பச்சை தமிழை பிச்சு பிச்சு வீசும் பிஞ்சு நெஞ்சம் பாஞ்சாலிக்கும் என் உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, October 23, 2007

உலகம் ஒரு நாடகமேடை

வந்துட்டேன்....சொல்லுவோம்ல...என்ன அவசரம்! கடந்த போஸ்ட்ல என்னமோ சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல, அதப்பத்திதான் இப்ப, என்ன சரியா! ஆனா நீங்க எதிர்பார்க்கும் அளவிற்கு சுவராஸ்சியம் இல்லாம போய்விட்டது அந்த நிகழ்ச்சி!

அட, ஆமாங்க! சில நாட்களுக்கு முன் இங்கே இயங்கிகொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி சானலுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் ஒரு நிருவனம், தாங்கள் படபிடிப்பு நடத்தவிருக்கும் நாடகத்தில் நடிக்க ஆட்களை தேடும் வகையில் ஒரு ஆடிசன்( திறமையரியும் சோதனை) நடத்தினார்கள்...

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நான் கூட போக விரும்பாமல் இருந்து கடைசி நேரத்தில் வீட்டில் போர் அடித்ததால் கிளம்பி சென்றேன். அங்கே நான் சென்றபோது கிட்டதட்ட ஆடிசன் முடியும் தருவாயில் இருந்தது, எனவே வந்தவர்களும் எந்த வசன குறிப்பும் கொடுக்காமல் செய்துகாட்டச் சொன்னார்கள்! அந்தவகையில் எனக்கு முன் நிறையப்பேர் போனார்கள் கேமரா முன் நின்றார்கள் ஏதேதோ செய்ய முற்பட்டார்கள், சிலர் சுமாராக செய்தார்கள், சிலர் திகைத்து நின்றார்கள் சிலர் நிற்பதை பார்தே அவர்கள் போகச் சொல்லிவிட்டார்கள்!

நடப்பவற்றை வெளியிலிருந்து பார்த்துகொண்டிருந்த எனக்கு அடிக்கடி கழிவறை நோக்கி ஓடவேண்டியதாயிற்று! ஒரு கட்டத்தில் திரும்பி ஓடிவிடலாமா என்று கூட தோன்றியது, ஆனால் கூட இருந்த என் நண்பர்கள் டேய்...இருடா...எல்லோரையும் போல நீயும் போய்விட்டு ஒரு சின்ன அறிமுகச் செய்துவிட்டு வாடா என்று தைரியம் சொன்னார்கள்! சரி என்று நின்றுவிட்டேன்!

என் திருப்பம் வந்தது, என்னை அழைத்தார்கள், போய் நின்றேன், லைட்ஸ் ஆன், புகைப்படம் எடுத்தார்கள், சுய அறிமுகம் செய்துகொண்டேன். திடீர் என்று ஏதாவது நடித்துக்காட்டுங்கள் என்றதும் எனக்கு டர்....ஆகிவிட்டது! அதுவும் சூழ்நிலை எதுவும் அவர்கள் தருவதாக இல்லை.. உடனே எனக்கு ஒரு யோசனை வர. நானே ஒரு சூழ்நிலையை எடுத்துக்கொண்டு, அதை பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டு......ஆரம்பித்தேன் பாருங்கள்....
அட...அட...எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை....என்னை அரியாமேலே சும்மா சீன் அப்படித்தான் போனது. எனக்கே தெரிந்துவிட்டது நம்ம அசத்துகிறோம் என்று, செய்துகாட்டிவிட்டு நிறுத்தியதும் அங்கிருந்த சோதனையாளர்கள், கேமராமென்கள் எல்லோரும் வெகுவாக பாராட்டியதோடு, தயாரிப்பாளரும் வெளியில் வரும் போது ரொம்ப நல்லா செய்தீர்கள் என்று பாராட்டி அனுப்பினார்கள்... அதைவிட பிறகு தொலைபேசியில் கூப்பிடுவதாகவும் சொல்லி அனுப்பினார்கள்!

ஆனால், நேற்று வரை எந்த தகவலும் அவர்களிடமிருந்து வராததால், நான் அழைத்து கேட்டேன், அதற்கு அவர்கள் சொன்ன பதில் எனக்கு சந்தோஷத்தை தரவில்லை! அவர்கள் ஒரு சில மாதம் கழித்து நாடகம் உருவாக்க போகிறார்களாம், அதில் எனக்கு ஏற்ற கேரக்டர் இருந்தால் என்னை கட்டாயம் கூப்பிடுகிறார்களாம்! நான் போவதாக இல்லை! ஏன் என்று கேட்கிறீர்களா! வாழ்க்கையே ஒரு நாடகமேடை இதில் தினமும் தினமும் நடிக்கவேண்டியுள்ளது, இதில் நாடகத்தில் நடிப்பதற்காகவெல்லாம் காத்திருக்க முடியாது, ஒருவேலை உடனே அழைத்திருந்தால் நடித்திருப்பேன்! காத்திருந்து நடிக்கவெல்லாம் விருப்பமில்லை!

புரியுது, புரியுது, நீங்க கேட்பது புரியுது, ஏன்டா கேமராவில் முகத்தை காட்ட கிளம்பிட்டியே அதுக்கு முன்னாடி கண்ணாடியில் ஒருமுறை உன் முகத்தை நீயே பாத்துகிட்டாயா என்று நீங்கள் கேட்பது புரிகிறது! சத்தியமா பாத்திருக்கிறேன். ஊஹும்...ஒன்னுமில்லை...இருந்தாலும் முகத்தில் 0 இருந்தாலும் அகத்தில் ஒரு சின்ன நம்பிக்கை! சினிமாவிலேயே பார்க்க போனால் கதாநாயகனை தவிர வேற யாரும் அழகாக இருப்பதாகத் தெரியவில்லையே, அட சில காதாநாயகன்களே அழகு இல்லையே!

சரி என்ன இப்ப....என் முகத்தையும் இங்கே ஒருநாள் போஸ்ட் செய்கிறேன் நீங்க பாத்துவிட்டு ஓகே சொல்லுங்கள் அப்பறம் பார்போம்! எனக்கு என்ன பயமாயிருகுன்னா...நான் என் முகத்தை இங்கே போட...அதை நீங்க எல்லாம் பார்க்க அப்புறம் பயந்துகிட்டு நீங்க யாரும் என் பிலாக் பக்கமே வாராமல் போய்விட்டால்.....என்ன செய்வது...சரி சரி...போடுறேன்...ஏன்னா நீங்க எல்லோரும் இந்து பிரேம்குமாரின் முகத்துக்கு ஒருநாளும் முக்கியத்துவம் கொடுக்காமல் என் எழுத்துக்குதான் முக்கியத்துவம் கொடுத்து இங்கு வந்து போகிறீர்கள் என்று தெரியும். என்வே துனிந்து என் முகத்தையும் விரைவில் வெளியிடுகிறேன்!
அப்படியே எடுத்துகிட்டு போய் வீட்டு வாசலில் திருஷ்டியாக மாட்டிவைத்துக்கொள்ளுங்கள்!

Wednesday, October 10, 2007

மீண்டும்....கெளம்பிட்டாய்யா...கெளம்பிட்டாய்ய்யா!

என் இனிய நண்பர்களே தலைப்பை பார்த்ததும் தலை சுற்றுகிறதா, கொடுத்து வைத்தவர்கள், உங்கள் முதுகை நீங்களே பார்த்துகொள்ளலாம் இல்லையா! அய்யோ என் முதுகை காப்பாத்திக்கொள்கிறேன் இப்பொழுது!

கெளம்பிட்டாய்யா...பிரேம் மீண்டும் கிளம்பிட்டாய்யா...என்பதற்கு நீங்கள் நினைப்பதுபோல மீண்டும் எங்கேயும் வெளிநாடு எங்கேயும் கிளம்பவில்லை...இந்த கிளம்பல் என்பது, ஒருவகை நக்கல், நய்யாண்டி, எடக்கு, மொடக்கு, எகத்தாலம், இருமாப்பு, ஆப்பு, வேட்டு, வேடிக்கை இதுபோன்ற அர்த்தங்களில் ஒன்று! காத்திருங்கள் சொல்கிறேன்! எல்லாம் நம்ம சம்மந்தப்பட்டதுதான். நமக்கு நம்ம கதையை பேசவே நேரமில்லை இதில் எங்கே உலகத்தை பற்றியெல்லாம் இங்கே எழுதுவது! நான் ரொம்பவும் தற்பெருமை இல்லாத ஆளாக்கும்! விரைவில்.......

Thursday, September 13, 2007

நீண்டநாள் கனவு நிறைவேறியது!!!





ஆடாத ஆட்டமெல்லாம் போட்டா....மண்ணுக்குள்ளே....என்ன சொல்லவர்ரேன்னு புரியலையா, இருங்க இருங்க வத்துட்டோம்ல...

என்ன கனவு, என்ன நடந்தது! யாரும் அடிக்க வரமாட்டேன்னு உத்திரவாதம் கொடுத்தா சொல்றேன்! என் இனிய தமிழ் மக்கள் அப்படியெல்லாம் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதோ......நடந்த கதை....

நேற்று மாலை சுமார் 7 மணி இருக்கும் வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் அலுவலக டாய்லட்டுக்கு போயிருந்தேன், ஏன் என்றெல்லாம் கேனத்தனமாக கேட்க மாட்டீர்கள் தெரியும். திடீர் என்று, தலை சுற்றியது மயக்கம் வந்தது, என்னடா இது இதுவரை நிகழாத ஒன்று நம் உடம்புக்கு வந்துவிட்டதே என்ற பதட்டத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். உள்ளே சென்றதும், அங்கிருந்த என் மேலாளார் என்னிடம் ஓடிவந்து என்ன பிரேம்..ஏதாவது உனக்கு உணரமுடிகிறதா என்று கேட்டபிறகுதான் உண்மை புரியவந்தது. ஆட்டம் வந்தது நமக்கல்ல நம்ம கட்டிடத்திற்கே என்று, உடனே அங்கே வந்த என் பாஸ் எல்லோரும் கீழே செல்லுங்கள் என்று சொன்னதுதான் என் காதில் விழுந்தது, திரும்பிகூட பார்க்கவில்லை, படிக்கட்டு இருக்கும் பகுதிக்கு விரைந்தேன்....

எங்கள் அலுவலகம் இருப்பதோ 25 மாடி, என்ன செய்வது இறங்கினால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்திருந்ததால்,எத்தனை மாடியாக இருந்தால் என்ன....சரசரவென்று இறங்கத்தொடங்கினேன்...அங்கே பார்த்தால் எனக்கு முன் பலபேர் அவசரம் அவசரமாக இறங்கிகொண்டிருந்தனர். ஒரு பக்கம் பதட்டம், ஒரு பக்கம் இன்றோடு வாழ்க்கை முடிந்துவிடுமோ என்ற பயம், இதையும் மீறி...போனால் போகட்டும் போடா...என்ற துனிவோடு தடதடவென்று இறங்கினேன். சில நொடிகளுக்கு பிறகு பார்த்தால் 17 மாடியில்தான் இருந்தேன். ஆஹா...இப்படி இறங்கினால் வேலைக்கு ஆகாது என்று...விட்டேன் ஓட்டம், சும்மா 4 படி இறங்குவது 7 படி தாண்டுவது இப்படியாக மிச்சம் இருந்த 17 மாடியையும் சுமார் 70 நொடிகளில் இறங்கியிருக்கிறேன் என்றால் பாருங்கள். நான் இறங்கி 4 நிமிடம் கழித்துதான் என் அலுவலக நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். கீழே வந்தால் எல்லோரும் அங்கேதான் நிற்கிறார்கள்.

இந்த சூழ்நிலையிலும் நம்ம வாய் சும்மா இருக்கவில்லை... படிக்கட்டில் இறங்கும்போதே, அங்கே ஓடிவந்து கொண்டிருந்தவர்களிடம் பயப்படத் தேவையில்லை.. ஒன்றும் ஆகாது, இது நம் உடம்புக்கு ஒரு பயிற்சிதான் எனவே கவலைப்படாமல் இறங்கிவாருங்கள் என்று ஆறுதலகா பேசிக்கொண்டே வந்தேன்...கீழே வந்தால் எல்லோரும் கட்டிடத்திற்கு கீழேயே கூட்டமாக நின்றார்கள். உடனே ஒரு சத்தம் போட்டேன்...ஏன் எல்லோரும் கீழே வந்தீர்கள்! நீங்கள் இப்படி நிற்பதற்கு பதில் மேலேயே இருந்தால் பாதுகாப்புதான் என்று சொல்லிவிட்டு அதற்கான காரணத்தையும் சொன்னேன்! நம் கட்டிடம் முழுவதும் கண்ணாடியால் முடப்பட்டிருக்கிறது. கட்டிடம் அதிரும்போது அந்த கண்ணாடி பேனல்கள் கீழே விழ வாய்பிருக்கிறது அப்படி விழுந்தால் நினைத்துப்பாருங்கள். எனவே அனைவரும் கட்டிடத்தின் எல்லையை விட்டு தள்ளி நில்லுங்கள் என்று ஒரு சத்தம்போட்டேன்.. அதற்கு பிறகு அங்கிருந்தவர்கள் நகரத் தொடங்கினார்கள்! வாழ்க்கையில் முதல் முறையாக நில அதிர்வை சந்தித்திருந்தாலும் வந்தால் எப்படி நடக்கவேண்டும் என்பதை அறிந்திருந்ததால் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி பாதுகாத்த சந்தோஷம் மனதில்!

பிறந்ததிலிருந்து நிலநடுக்கத்தை உணரவில்லையே என்ற கேவலமான ஏக்கம் இருந்தது அதுவும் அன்று நிறைவேறிவிட்டது. ஆனால் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். படிக்கட்டில் இறங்கிவரும் போது எத்தனை வயதானவர்கள் மற்றும் பெண்மனிகள் அழுவதைப் பார்தேன் தெரியுமா... இறைவா இதுபோன்ற கஷ்டத்தை இனியொருமுறை அவர்களுக்கு தந்துவிடாதே என்று இறைவனிடம் இன்னொருமுறையும் வேண்டிக்கொள்கிறேன்!

எல்லோருமே ஒருமுறை இறைவனிடம் இப்புவியை இயற்கை பேரழிவுகளிடமிருந்து காக்குமாறு வேண்டிக்கொள்ளுங்கள் தயவுசெய்து! மிக்க நன்றி! விளையாட்டாக நான் போட்டுள்ள தலைப்புக்கு மன்னிக்கவும்! இறைவா எல்லா உயிர்களுக்கும் என்றுமே நிம்மதியை தாருமையா! நன்றி!

Wednesday, September 05, 2007

இடைப்பட்ட காலத்தில் இவைகள் அனைத்தும்...

வேட்டையாடு விளையாடு
அன்புக்குரிய நண்பர்களே! நலம்தானே அனைவரும்? நீண்ட நாட்கள் காணாமல் போயிருந்தேன், அலையடிக்க ஆரம்பித்துவிட்டது, அடிப்பது அலையாக இருந்தாலும், போர் அடிக்காமல் இருந்தால் சரி! என் பிலாக் என்பதால் நம்ம சங்கதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஒன்றும் தப்பில்லையே? தப்பாக இருந்தால் மன்னிக்கவும். மன்னிப்பதற்கு தமிழர்கள் என்றும் சலைத்தவர்கள் அல்லவே! நன்றி!

என்ன....என்ன நடந்தது இத்தனை நாட்களாக! நாட்கள் நகர்ந்ததே ஒழிய ஒன்றும் பெரியதாக நடந்துவிடவில்லை! சும்மா சின்ன சின்ன விஷயங்கள் நடந்தது அதை இங்கே ...
அதில் முக்கியமான மூன்று மட்டும் சொல்கிறேன்...

1. ஒரு சில மாதங்களுக்கு முன் நான் ஒரு போட்டிக்கான முதல் சுற்று தேர்வு எழுதியிருந்தேன், அதில் தேர்வு பெற்ற விஷயம் எனக்கு இறுதியாகத்தான் எனக்கு தெரியவந்தது, என்னவென்று கேட்கிறீர்களா.. அதுதான் வேட்டையாடு விளையாடு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி!
பொது அறிவு வினா-விடை நிகழ்ச்சியான் இந்த நிகழ்ச்சிக்கு நானும் தேர்வு பெற்றிருந்த விஷயம் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டிய நாளுக்கு 2 தினம் முன்பு தெரியவர என்ன செய்வது என்றே புரியவில்லை. பொது அறிவு எங்கே தேடுவது என்று குழம்பிபோய்விட்டேன். அதைவிட ஒரு மோசமான விஷயம், அந்த நிகழ்ச்சியை ஒரு முறை கூட டி.வி யில் பார்த்தது கிடையாது! ஒரு வழியாக போய் பார்போம் என்று ஒளிப்பதிவுக்கு சென்று விட்டேன்!
ஒரு நாள் முழுவதும் ஒளிப்பதிவு கூடத்தின் குளிரில் உட்காரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது! 5 வாரங்களுக்கான ஒளிப்பதிவு நடந்தது. என்னுடைய சுற்று 4 வது சுற்றுதான்..
ஒளிப்பதிவு தொடங்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டது, முதல் சுற்றில் நான் வென்ற தொகை 0 டாலர். ஏனெனில், முதல் முறையாக கேமரா முன் அதுபோன்ற ஒளிப்பதிவு கூடத்தில் நின்றேன், எனவே அந்த பதட்டத்தில் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்ன பதில் சொல்வது என்று திகைத்து நின்றதில் ஒரு கேள்விக்கு கூட ஊகூம்...முக்கிய காரணம் என்னவென்றால், ஒரு முறையாவது அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்திருந்தால் அந்த நிகழ்ச்சியின் அம்சம் தெரிந்திருக்கும்! சரி அப்புறம் என்ன நடந்தது....
அப்புறம் என்ன அனுபவம் இல்லை என்றாலும் அடுத்த அடுத்த சுற்றுகளில் சுதாரித்துக்கொண்ட அடியேன் ஒரு அசத்து அசத்தி இறுதியில் வெற்றி பெற்றது அடியேந்தான்.
இந்த வார வெற்றியாளர் நான் தான் என்றாலும், ஒரு மிகப்பெரிய சோகம் நடந்தது! போட்டியில் ஒரு கிளிப்பிங் சுற்றில்.. 6 கேள்விகளுக்கு பதில் ஒரு நிமிடத்தில் சொல்லவேண்டும்...என்ன நடந்தது... 30 வினாடிகளுக்குள் 5 பதில்களை சொல்லிவிட்டு அந்த ஒரு பதில் சொல்ல முடியாமல் சொலையாக ஆயிரம் டாலர் இழந்தேன்... வேதனையாக இருந்தது! அதற்கு காரணம் நிகழ்ச்சியை பார்க்காததுதான். சரி விடுங்க ஒரு தொகை கிடைத்தது!
அதன் பிறகு அடுத்த வாரத்திற்கான ஒளிப்பதிவும் உடனே நடத்தினர். ஆடையை மட்டும் மாற்றிக்கொண்டு அடுத்த வாரத்திற்கான ஒளிப்பதிவுக்கு தயாராகிவிட்டேன்... அதுமட்டுமல்ல அதுதான் அந்த நிகழ்ச்சியின் இறுதிவாரமும் கூட அந்த வாரத்துடன் அந்த நிகழ்ச்சி ஒரு முடிவை நாடியது. என்ன நடந்தது, முதல் வாரத்தில் அடைந்த வெற்றி ஒரு உற்சாகமாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை நாட்டம் அதிகமாக இல்லாமல் ஏனோ தானோ என்று பதில்கள் சொன்னேன்... இருந்தாலும் மற்றவர்களை விட அதிக சரியான பதில்களை சொல்லியிருந்தபோதும் இரு முறை தவறான பதில் கொடுத்தது, சரியான நேரத்தில் பொத்தானை அழுத்தாத காரணத்தால் மயிரிழையில் வெற்றியை தவறவிட்டேன். இருந்தாலும் இந்த வாரமும் ஒரு தொகை கிடைத்தது.. ஆக மொத்தம் ஒரு வழியா திருப்தி இல்லாமல் செய்துவிட்டோமே என்ற கவலை இருந்தாலும் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது! அதைவிட ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் காலக்கட்டத்தில் சுமார் 15 தினங்கள் தினமும் என்னை தொலைக்காட்சியில் காட்டி காட்டி, என்னை மக்கள் மத்தியில் ஒரு வழி செய்துவிட்டார்கள்.. அந்த நேரத்தில் நம் தமிழ் மக்கள் பக்கம் சென்றால் என்னை அடையாளம் கண்டுகொண்டு ஒரு பார்வை பார்பார்களே....யம்மா...வெட்கமாக இருக்கு போங்க! அவுங்க பார்த்த பார்வைக்கு 2 அர்த்தம் இருந்திருக்கும். ஒன்று, பரவாயில்லை இவன் என்றும், மற்றொன்று, அந்த ஆயிரம் வெள்ளியை விட்டுட்டானே பாவி என்றது போலவும் இருக்கும். என்ன செய்வது எனக்கு தொகை ஒரு பெரிய விஷயம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதில் கிடைத்த ஒரு திருப்தி ஆயிரம் மில்லியனுக்குச் சமம்!
வசந்தம் நட்சத்திரம்


2. இரண்டாவது என்ன.....இருங்க இருங்க அதையும் சொல்லிவிடுறேன்! அதுதாங்க நம்ம ''VASANTHAM STAR'' தேர்வுச் சுற்று நிகழ்ச்சி! என்ன வசந்தம்...அது இதுன்னு கேட்கிறீங்களா, அதான் முன்பே சொல்லியிருக்கேன்ல, எங்களுக்கு இந்த வசந்தம் தொலைக்காட்சி, ஒலி வானொலி இதுதாங்க பொழுதுபோக்கு மீடியாக்கள்! அந்த வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியில் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சிதான் இந்த வசந்தம் ஷ்ஷ்ஷ்டார்!
உள்ளூர்வாசிகள் மட்டும் பங்குகொள்ளும் இந்த நிகழ்ச்சியின் தேர்வு சுற்றுக்கு நான் இந்த முறை சென்றிருந்தேன். அதிலும் ஒரு சோதனை, முதல் நாள் இரவு வரை அந்த நிகழ்ச்சியில் கலந்தும்கொள்ளும் முடிவு இல்லாமல் இருந்ததால், ஒரு பாடல் கூட பயிற்சி செய்யாமல் இருந்துவிட்டு, திடீர் என்று மறுநாள் காலை கலந்துகொள்ள சென்றேன்.. அதுவும் அங்கே நிகழ்சி நடக்கும் கூடத்தில் கிட்டதட்ட 4 மணிநேரம் உள்ளே உட்காந்திருந்ததில் இருந்த குரலும் உள்ளே போய்விட்டது, இருந்தாலும் நான் எழுதிக்கொண்டு போயிருந்த பாடலை அங்கேபோய்தான் மனப்பாடம் செய்தேன். பார்த்துபாடக்கூடாது என்று விதிமுறை என்றதும் தடுமாற்றம் வந்துவிட்டது, நமக்குத்தான் இரண்டு வரிக்குமேல் எந்த பாட்டும் தெரியாதே, என்ன செய்வது டென்சன் அதிகமாகிவிட்டது, என்னுடைய எண் வந்ததும், உள்ளே பாடச் சென்றேன், உள்ளே சென்று அந்த ஒளிப்பதிவு கூடத்தைப் பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததும் டர்ர்ர் ஆகிவிட்டது, இருந்தாலும் சமாளித்துக்கொண்டு பாட ஆரம்பித்தேன்...
சும்மா சொல்லக்கூடாது, இசையின் பின்னணியுடன் சேர்ந்து என்பாட்டை கேட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் என்னுடைய பாடல் வரிகள் பிரச்சனை என்னை சோதித்துவிட்டது, பாடும்போது அதிக பாடல் வரிகள் தவறுசெய்தேன், பாடல் வரிகளில் கவனம் செலுத்த நினைத்ததால் சுருதி தப்பிவிட்டது, வெற்றியும் தப்பிவிட்டது! அப்புறம் என்ன வீடுதான்!
உண்மையைச் சொல்லப்போனால், இந்த போட்டியில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்காவது போகவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது , அதுவும் அவுட்! அடுத்த முறை உங்கள் பிரேம் யாருன்னு நிருப்பிக்கிறேன் சரியா, யாரும் திட்டாதீங்க! அதுக்கெல்லாம் ஞானம் வேண்டும்...ஞானம் வேண்டும்...ஏன் ஞானப்பழம் அண்ணனுக்கு ஞானப்பழம் ஒன்று கொடுப்பா! ஹ..ஹா...ஹா...அஹ்...அஹ...ஹாஆ
கண்ணதாசன் பிறந்தநாள் விழா


3. இதுதாங்க மூன்றாவது, அட இதுவும் ஒரு பாட்டுத்திறன் போட்டி, என்னன்னு தெரியனுமா, சொல்லாம எங்கே போகப்போறேன், இதோ.....
"கண்ணதாசன் பிறந்தநாள் விழா, பாட்டுப்போட்டி" இதில் கலந்துகொள்ள ஆசை வந்துச்சா... உடனே நிகழ்ச்சியை நடத்துபவர்களை தொடர்புகொண்டு என்னுடைய பெயரையும் பதிவுசெய்துகொண்டேன், அதன் படி அந்த வார இறுதியில் நடந்த தேர்வு சுற்றுக்குச் சென்றேன், ஒரு 50 பேருக்குமேல வந்திருந்தாங்க. அவுங்க எல்லோரையும் பார்த்து இதிலும் நமக்கு உஹும்...நோ...வே... என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தேன்...ஒவ்வொருவராகப் பாடத்தொடங்கினார்கள்...எல்லாமே கண்ணதாசன் பாடல் என்பதால், ஒரே பழமைதான். அதுவும் எல்லாமே திரு. டி.எம்.சவுந்தர் சார் பாடியதும், சீர்காழி சார் பாடியதுமா இருந்தது, இதில் என்னத்த நம்ம பாடி...ஆனால் நான் போகும்போது, நம்ம SP.B சார் பாடிய ஒரு பாடல் பயிற்ச்சி செய்துகொண்டு போயிருந்தேன். சற்று வித்தியாசமான பாட்டு, என்ன பாட்டுன்னு யாரும் கேட்க கூடாது, கேட்டாலும் சொல்லமாட்டேன். அந்த பாடல் என்றதும் பாடுவதற்கு முன் சிலர் சிரிப்பதையும் பார்த்தேன்.

பாட ஆரம்பித்தேன்.. ஒலிவாங்கி இல்லாமல் பாடவேண்டும் என்பதால் ஒரு நேர்த்தி இல்லாமல் போய்விட்டது, இருந்தாலும் நன்றாக பாடியதாக நண்பர்கள் சொன்னார்கள்.. கடைசியில் என்ன நடந்தது, நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒரு 30 நிமிடம் காத்திருந்தோம், அதற்கு முன்பே யார் யார் தேர்வு பெறுவார்கள் என்று அங்கே குழுமியிருந்த நாங்கள் ஒரு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். அதில் ஒரு சிலர் என்னையும் பட்டியலில் குறிப்பிட்டார்கள். ஆனால் இறுதியில் அரைமணி நேரமாக கதைவை அடைத்துக்கொண்டு ஆலோசித்த நீதிபதிகள் ஒரு பட்டியலை கொடுத்து படிக்கச் சொன்னார்கள். என்ன கொடுமை சரவணன் அது, அந்த பட்டியலில் நாங்கள் அனைவரும் யோசித்து வைத்திருந்த ஒருவர் கூட இல்லை என்பது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியையும், வியப்பையும் தந்தது! என்ன நடந்தது அங்கே என்றே தெரியவில்லை. அவர்கள் தேர்வு செய்தவர்களும் திறமைசாலியாகத்தான் இருந்தார்கள்..ஆனாலும்......என்ன சொல்லுவது, திகைப்பில் அனைவரும் வெளியாகிவிட்டோம். இதில் நான் தேர்வு செய்யப்படவில்லை என்று கவலைப்படவில்லை, நல்லா பாடிய சிலர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்றுதான் புரியவில்லை! இனிமேல் அவர்கள் நடத்தும் எந்த ஒரு போட்டிக்கும் நான் போகப்போவதில்லை என்ற முடிவை மட்டும் இப்போது எடுத்திருக்கிறேன்! சரி விடுங்க....அது இருந்தா இது இல்லை,, இது இருந்தால் அது இல்லை....எல்லாம் இருந்தால் அப்புறம் நம்மை பிடிக்க ஆள் ஏது! எல்லாம் ஆண்டவன் கணக்கு! எது நடந்ததோ நன்றாக நடக்கவில்லை என்றாலும், எது நடக்குமோ அதுவாவது ஆண்டவன் கருணையால் நன்றாக நடக்கட்டும்...சார் போய் வேலையை பாருங்க..எவனாவது கதை சொன்னாபோதுமே.. அப்படியே வேலையைவிட்டு விட்டு கேட்பதா! போங்க...போங்க...வேலையப்பாருங்கப்பா....நன்றி!

Tuesday, August 21, 2007

சிங்கம் வந்திருச்சு!

அனைவருக்கும் எனது இனிய வணக்கம்!

இதுவரை சிங்லா இருந்து தனது வேலைகளை மட்டும் பார்த்து வந்த சிங்கம்! இன்று கூட்டத்தோடு சேர வந்திருக்கு! கூட்டமாயிருக்கும் தாங்கள் யாரையும் நான் பன்னி என்று சொல்லவே மாட்டேன்! நீங்க கூட்டமாயிருந்தாலும் நீங்களும் என்றும் சிங்கந்தான் எனக்கு! வாங்க சிங்கங்களா...இந்த காட்டை ஒரு கலக்கு கலக்குவோம்!

இனிது இனிது நட்பினிது!
நட்பினும் இனிது நம்பிக்கை!

Tuesday, May 22, 2007

வணக்கம்..வணக்கம்....வந்துட்டேன்ன்ன்ன்..

என்னுயிருனும் மேலான என தமிழ் மக்களே! எல்லோரும் நலமாக இருக்கீறீங்களா? என்மேல் அனைவருக்கும் கோபமா? மன்னிக்கவும்... என்ன செய்வது. வாழ்க்கை என்றால் அப்படி இப்படித்தான் இருக்கிறது...