
உன் எழுத்து ஒவ்வொன்றும் உனக்கு நீயே கட்டிக்கொண்ட தாஜ்மஹால்!- வைரமுத்து!
கடந்த சனிக்கிழமை இரவு அருள்மிகு சிங்கப்பூர் தெண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செல்லும் வாய்ப்பு இத்துனை ஆண்டுகளுக்கு பிறகு அன்று அடியேனுக்கு கிடைத்தது ஆண்டவன் அருளால்!
தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி சில குழந்தைகள் நடனமாட கவிஞர் பல கவிபாட பாட்டுப்போட்டியில் பல குயில்பாட படு ஜோராய் சென்றது விழா!
நிகழ்ச்சியின் இருதியாக சிறப்பு சொற்பொழிவு ஆற்றியது யார் தெரியுமா, super star ரஜினியை மட்டும் வைத்து 25 படங்களுக்கு மேல் இயக்கி மொத்தத்தில் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள பிரபல இயக்குனர் திரு. SP. முத்துராமன் அவர்கள்தான். அதிகநேரம் பேசி அசத்திவிட்டார். மீண்டும் கண்ணதாசனை பார்த்தோம் அவரது சொற்பொழிவில்! அருமை! அருமை!
கூட்டம் மண்டபம் முழுவது நிரம்பிவிட்டது! பல முக்கிய பிரமுகர்களும், கண்ணதாசன் உறவினர்களும், சிங்கப்பூர் பிரபலங்களும் வந்திருந்தனர் அவர்களுள் ஒலி குடும்பத்தார்களான, பொன்.மகாலிங்கம், உமா கணபதி, v.s. ஹரி ஆகியோர்களும் கூட வந்திருந்தனர்.
அருமையான நிகழ்ச்சி அது முடிந்ததும் அருமையான இரவு உணவு.. செவி இனித்து பின் நாவினிக்க நல்லா நடந்த நிகழ்சியை உங்கள் விழியினிக்க விருந்தாக்குகிறேன்..
'கவியரசை' பாராட்டி வரிகள் தந்திருந்தார், மேலே இருக்கும் வைரமுத்து தன்னுடைய மேன்மையான வரிகளினால்! அடித்தளத்தில் இருக்கும் அடியேனுக்கும் அது போன்று எழுத ஆசை வந்தாலும், ஏதோ என் அளவிற்கு முடிந்த இந்த எளிய வரிகளை தருகிறேன், கவிப்பேரரசின் வரிகளை தழுவிக்கொண்டு...
"உன்னுடைய ஒவ்வொரு எழுத்துக்களும், இக்கால இளைஞர்கள் கவிமலையின் உச்சியை கஷ்டப்படாமல் சென்றடைய நீ கட்டிக்கொடுத்த படிக்கட்டுகள்!"